Saturday, June 11, 2011

தமிழ் அகராதிகள்





1. சதுரகராதி:-இதை உருவாக்கியவர் வீரமா முனிவர்.1732-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
2. பெப்ரியசு அகராதி:- பெப்ரியசு. 1779-ஆம் ஆண்டு வெளிவந்தது.
3. ராட்லர் தமிழ் அகராதி- பாகம் 1:- இதை தொகுத்தவர் ராட்லர்.1834
4. ராடர் தமிழ் அகராதி- பாகம் 2:-1837-இல் வெளிவந்தது.
5. ராட்லர் தமிழ் அகராதி-பாகம் 3:-1839-இல் வந்தது.
6. ராட்லர் தமிழ் அகராதி- பாகம் 4:-1841-இல் வந்தது.
7. மானிப்பாய் அகராதி:- இதை உருவாக் கியவர் இருவர்.. யாழ்ப்பாணம் சந்திரசேகர பண்டிதர் மற்றும் சரவணமுத்துப் பிள்ளை. 1834-ஆம் ஆண்டு வெளிவந்தது.
8. சொற்பொருள் விளக்கம்:- களத்தூர் வேதகிரி முதலியார்.1850-இல் வெளிவந்தது.
9. போப்புத் தமிழ் அகராதி:- உருவாக்கியவர் ஜி.யுபோப்.1869-ஆம் ஆண்டு வெளிவந்தது.
10. அகராதிச் சுருக்கம்:-இதை உருவாக்கியவர் விஜயரங்க முதலியார். 1883-இல் வெளிவந்தது.
11. பேரகராதி:- இதை உருவாக்கியவர் காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு. 1893-ஆம் ஆண்டு வெளிவந்தது.
12. தரங்கம்பாடி அகராதி:- பெரியசு அகராதியின் விரிவு இது. 1897-ஆம் ஆண்டு வெளிவந்தது.

13. தமிழ்ப் பேரகராதி:-இதனை உருவாக்கியவர் யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளை. 1899-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
14. தமிழ்ப் பேரகராதி:- இதுவும் யாழ்ப்பாணம் கதிரைவேற்பிள்ளை. 1901-ஆம் ஆண்டு வெலளிவந்தது.
15. தமிழ்ச் சொல்லகராதி:- இதனை உருவாக்கியவரும் யாழ்ப்பாணம் கதிரைவேற்பிள்ளை.1904-ஆம் ஆண்டு வெளிவந்தது.

16. சிறப்புப் பெயர் அகராதி:- இதை உருவாக்கியவர் ஈக்காடு இரத்தினவேல் முதலியார்.1908-ஆம் ஆண்டு வெளிவந்தது.
17. இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அகராதி:- இதை உருவாக்கியவர் பி.ஆர். இராமநாதன். 1909-ஆம் ஆண்டு வெளிவந்தது.
18. அபிதானசிந்தாமணி:-- இதை உருவாக்கியவர் ஆ.சிங்காரவேலு முதலியார். 1910-ஆம் ஆண்டு வெளிவந்தது.


19. தமிழ்ச் சொல் அகராதி, முதல் தொகுதி:- உருவாக்கியவர் யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளை 1910-ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்டது.
20. தமிழ்ச் சொல் அகராதி, இரண்டாம் தொகுதி:- உருவாக்கியவர் யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளை 1912-ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்டது.
21. தமிழ்ச் சொல் அகராதி, மூன்றாம் தொகுதி:- உருவாக்கியவர் யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளை 1923-ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்டது.



22. தமிழ் மொழி அகராதி:- இதனை உருவாகியவர் காஞ்சி நாகலிங்க முனிவர். 1911-ஆம் ஆண்டு வெளிவந்தது.
23. இலக்கியச் சொல் அகராதி:-இதை உருவாக்கியவர் கன்னாகம் அ. குமாரசாமி பிள்ளை. 1914-ஆம் ஆண்டு இது வெளிவந்தது.
24. மாணவர் தமிழ் அகராதி:- இதை உருவாக்கியவர் எஸ். அனவரத விநாயகம் பிள்ளை. 1921-ஆம் ஆண்டு வெளிவந்தது.
25. சொற்பொருள் விளக்கம்:- சு.சுப்பிரமணிய சாஸ்திரி. 1924-ஆம் ஆண்டு வெளி வந்தது.
26. தற்காலத் தமிழ்ச் சொல் அகராதி:- இதை உருவாகியவர் ச. பவானந்தம் பிள்ளை.1925-ஆம் ஆண்டில் வெளிவந்தது.
27. இளைஞர் தமிழ்க் கையகராதி:- இதை உருவாக்கியவர். மே.வீ. வேணுகோபாலபிள்ளை.. 1928-இல் இது வெளியிடபட்டது.
28. ஜுபிலி தமிழ் அகராதி:- இதை உருவாக்கியவர் எஸ். சங்கரலிங்கமுதலியார். 1935-ஆம் ஆண்டு வெளிவந்தது.
29. ஆனந்தவிகடன் அகராதி:- இதை ஆனந்த விகடன் பத்திரிக்கை ஆசிரியர் குழு உருவாக்கியது. 1935-ஆம் ஆண்டு இது வெளி வந்தது.
30. நவீன தமிழ் அகராதி. இதை உருவாக்கியவர் சி.கிருஷ்ணசாமி பிள்ளை. 1935-ஆம் ஆண்டு இது வெளிவந்தது.
31. மதுரைத் தமிழ்ப் பேரகராதி:- இதை உருவாக்கியவர்கள் மதுரை இ.மா. கோபாலைருஷ்ணக்கோனார் மற்றும் பண்டிதர் பார். 1937-ஆம் ஆண்டு கோனார் நிறுவனம் வெளியிட்டது.
32. சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதி:- இதைஉருவாக்கியவர் சுவாமி ஞானப் பிரகாசம்.1038-ஆம் ஆண்டு இது வெளிவந்தது.
33. தமிழறிஞர் அகராதி:- இதை இயற்றியவர் சி. கிருஷ்ணசாமிப் பிள்ளை. 1839-ஆம் ஆண்டு இது வெளி வந்தது.
34. தமிழ் அமிழ்த அகராதி:- இதை உருவக்கியவர் சி.கிருஷ்ணசாமிப்பிள்ளை. 1939-ஆம் ஆண்டு இது வெளிவந்தது.
35. விக்டோரியா தமிழ் அகராதி:- இதை உருவாக்கியவர் எஸ். குப்புஸ்வாமி. 1939-ஆம் ஆண்டு இது வெளியானது.
36. தமிழ் லெக்ஸஸிகன்:- 1939-இல் சென்னைப் பல்கலைகழகம் .உருவாக்கி வெளியிட்டது.
37. கழகத் தமிழ் அகராதி:- இதைச் சேலை சகாதெவ முதலியார் மற்றும் காழி சிவகண்ணுச் சாமி பிள்ளை ஆகிய இருய்வரும் உருவாக்கினர். 1940-ஆம் ஆண்டு இது வெளிவந்தது.
38. செந்தமிழ் அகராதி:- இதை உருவாக்கியவர் ந.சி. கந்தையாப் பிள்ளை. இது 1950-ஆம் ஆண்டு வெளியானது.
39. கமபர் தமிழ் அகராதி:- இதை உருவாக்கியவர் வே. இராமச் சந்திர சர்மா. 1951-ஆம் ஆண்டு வெளிவந்தது.
40. சுருக்கத் தமிழ் அகராதி:- இதை 1955-ஆம் ஆண்டு கலைமகள் பத்திரிக்கை அலுவலகம் வெளியிட்டது.
41. கோனார் தமிழ்க் கையக:-இதை உருவாக்கியவர் ஐயன் பெருமாள்க் கோனார். 1955-ஆம் ஆண்டு வெளிவந்தது.
42. தமிழ் இலக்கிய அகராதி:- இதை உருவாக்கியவர் பாலூர் து. கண்ணப்ப முதலியார். 1957-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
43. கழகத் தமிழ் அகராதி:- இதைக் ம்கழகப் புலவர் உருவாக்க, 1964-ஆம் ஆண்டு சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டது.
44. லிஃப்கோ தமிழ்- தமிழ் அகராதி:- இதை 1969-ஆம் ஆண்டு லிஃப்கோ புத்தக நிறுவனம் வெளியிடப்பட்டது.
45. தமிழ்ச் சுருக்கெழுத்து அகராதி:- இதை உருவாக்கியவர் அனந்தநாராயணன். இது 1980-இல் வெளிவந்தது.
46. தமிழ்-அகர முதலி:-இதை உருவாக்கியவர் மு சண்முகம் பிள்ளை. 1984-இல் வெளியானது.
47. செந்தமிழ் சொற்பியல் பேரகர முதலி:- இதை உருவாக்கியவர் தேவநேயப்பாவாணர். 1984-இல் வெளிவந்தது.
48. பழந்தமிழ் சொல் அகராதி:- (5-தொகுதிகள்). இதை உருவாக்கியவர் புலவர் த கோவேந்தன். 1985-இல் வெளிவந்தது.
49. திருமகள் கையகராதி:- இதை உருவாக்கியவர் புலவர் த. கோவிந்தன் மற்றும் கீதா ஆகிய இருவர். 1995-இல் வெளிவந்தது.
50. மலேசியச் செந்தமிழ் அகராதி:-இதை உருவாக்கியவர் டாக்டர் ஜி.பி. இலாசரஸ். 1997-ல் வெளிவந்தது.
51. வசந்தா தமிழ் அகராதி:- இதை உருவாக்கியவர் புலவரேறு அரிமதி தென்னகன். .2000இல் வெளியானது.
52. 52 நர்மதா பதிப்பகத்தின் புலவர் குழு உருவாக்கி 2003-ல் வெளிவந்து தமிழக அரசின் முதற்பரிசு பெற்றது



இந்தப்பட்டியலினால் யாருக்கு என்ன பயன் என்று எண்ணுவதா? அவர்கள் நேரத்தை வீணடிக்கிறோமா? புளியமரத்தை நட்டவனைக் கேலிசெய்தார்களாம். அதிவேக உணவு விரும்பப்படுவது போன்று இது பலனளிக்குமா? தெரியவில்லை.

No comments:

Post a Comment