Monday, June 20, 2011

போற்றித் திருவகவல்




நான்முகன் முதலா வானவர் தொழுதெழ
ஈரடி யாலே மூவுல களந்து
நாற்றிசை முனிவரும் ஐம்புலன் மலரப்
போற்றிசெய் கதிர்முடித் திருநெடு மாலன்
றடிமுடி யறியும் ஆதர வதனிற் 5
கடுமுரண் ஏன மாகி முன்கலந்
தேழ்தலம் உருவ இடந்து பின்னெய்த்
தூழி முதல்வ சயசய என்று
வழுத்தியுங் காணா மலரடி யிணைகள்
வழுத்துதற் கெளிதாய் வார்கடல் உலகினில் 10
யானை முதலா எறும்பீ றாய
ஊனமி லியோனியி னுள்வினை பிழைத்தும்
மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்
தீனமில் கிருமிச் செருவினிற் பிழைத்தும்
ஒருமதித் தான்றியின் இருமையிற் பிழைத்தும் 15
இருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈரிரு திங்களிற் பேரிருள் பிழைத்தும்
அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களின் நூறலர் பிழைத்தும் 20
ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
எட்டுத் திங்களிற் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயொடு தான்படுந்
துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும் 25
ஆண்டுகள் தோறும் அடைந்தஅக் காலை
ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும்
காலை மலமொடு கடும்பகற் பசிநிசி
வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும்
கருங்குழற் செவ்வாய் வெண்ணகைக் கார்மயில் 30
ஒருங்கிய சாயல் நெருங்கியுள் மதர்த்துக்
கச்சற நிமிர்ந்து கதிர்த்து முன்பணைத்
தெய்த்திடை வருந்த எழுந்து புடைபரந்
தீர்க்கிடை போகா இளமுலை மாதர்தங்
கூர்த்த நயனக் கொள்ளையிற் பிழைத்தும் 35
பித்த வுலகர் பெருந்துறைப் பரப்பினுள்
மத்தக் களிறெனும் அவாவிடைப் பிழைத்தும்
கல்வி யென்னும் பல்கடற் பிழைத்தும்
செல்வ மென்னும் அல்லலிற் பிழைத்தும்
நல்குர வென்னுந் தொல்விடம் பிழைத்தும் 40
புல்வரம் பாய பலதுறைப் பிழைத்துந்
தெய்வ மென்பதோர் சித்தமுண் டாகி
முனிவி லாததோர் பொருளது கருதலும்
ஆறு கோடி மாயா சத்திகள்
வேறு வேறுதம் மாயைகள் தொடங்கின 45
ஆத்த மானார் அயலவர் கூடி
நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்
சுற்ற மென்னுந் தொல்பசுக் குழாங்கள்
பற்றி யழைத்துப் பதறினர் பெருகவும்
விரத மேபர மாகவே தியருஞ் 50
சரத மாகவே சாத்திரங் காட்டினர்
சமய வாதிகள் தத்தம் மதங்களே
அமைவ தாக அரற்றி மலைந்தனர்
மிண்டிய மாயா வாத மென்னுஞ்
சண்ட மாருதஞ் சுழித்தடித் தாஅர்த் 55
துலோகா யதனெனும் ஒண்டிறற் பாம்பின்
கலாபே தத்த கடுவிட மெய்தி
அதிற்பெரு மாயை யெனைப்பல சூழவும்
தப்பா மேதாம் பிடித்தது சலியாத்
தழலது கண்ட மெழுகது போலத் 60
தொழுதுளம் உருகி அழுதுடல் கம்பித்
தாடியும் அலறியும் பாடியும் பரவியுங்
கொடிறும் பேதையுங் கொண்டது விடாதெனும்
படியே யாகிநல் லிடையறா அன்பிற்
பசுமரத் தாணி அறைந்தாற் போலக் 65
கசிவது பெருகிக் கடலென மறுகி
அகங்குழைந் தனுகுல மாய்மெய் விதிர்த்துச்
சகம்பேய் என்று தம்மைச் சிரிப்ப
நாணது ஒழிந்து நாடவர் பழித்துரை
பூணது வாகக் கோணுத லின்றிச் 70
சதுரிழந் தறிமால் கொண்டு சாருங்
கதியது பரமா அதிசய மாகக்
கற்றா மனமெனக் கதறியும் பதறியும்
மற்றோர் தெய்வங் கனவிலும் நினையா
தருபரத் தொருவன் அவனியில் வந்து 75
குருபர னாகி அருளிய பெருமையைச்
சிறுமையென் றிகழாதே திருவடி யிணையைப்
பிறிவினை யறியா நிழலது போல
முன்பின் னாகி முனியா தத்திசை
என்புநைந் துருகி நெக்குநெக் கேங்கி 80
அன்பெனும் ஆறு கரையது புரள
நன்புலன் ஒன்றி நாதஎன் றரற்றி
உரைதடு மாறி உரோமஞ் சிலிர்ப்பக்
கரமலர் மொட்டித் திருதயம் மலரக்
கண்களி கூர நுண்துளி அரும்பச் 85
சாயா அன்பினை நாடொறுந் தழைப்பவர்
தாயே யாகி வளர்த்தனை போற்றி
மெய்தரு வேதிய னாகி வினைகெடக்
கைதர வல்ல கடவுள் போற்றி
ஆடக மதுரை அரசே போற்றி 90
கூடல் இலங்கு குருமணி போற்றி
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்றெனக் காரமு தானாய் போற்றி
மூவா நான்மறை முதல்வா போற்றி
சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி 95
மின்னா ருருவ விகிர்தா போற்றி
கல்நார் உரித்த கனியே போற்றி
காவாய் கனகக் குன்றே போற்றி
ஆவா என்றனக் கருளாய் போற்றி
படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி 100
இடரைக் களையும் எந்தாய் போற்றி
ஈச போற்றி இறைவ போற்றி
தேசப் பளிங்கின் திரளே போற்றி
அரைசே போற்றி அமுதே போற்றி
விரைசேர் சரண விகிர்தா போற்றி 105
வேதி போற்றி விமலா போற்றி
ஆதி போற்றி அறிவே போற்றி
கதியே போற்றி கனியே போற்றி
நதிசேர் செஞ்சடை நம்பா போற்றி
உடையாய் போற்றி உணர்வே போற்றி 110
கடையேன் அடிமை கண்டாய் போற்றி
ஐயா போற்றி அணுவே போற்றி
சைவா போற்றி தலைவா போற்றி
குறியே போற்றி குணமே போற்றி
நெறியே போற்றி நினைவே போற்றி 115
வானோர்க் கரிய மருந்தே போற்றி
ஏனோர்க் கெளிய இறைவா போற்றி
மூவேழ் சுற்றம் முரணுறு நரகிடை
ஆழா மேயருள் அரசே போற்றி
தோழா போற்றி துணைவா போற்றி 120
வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி
முத்தா போற்றி முதல்வா போற்றி
அத்தா போற்றி அரனே போற்றி
உரையுணர் விறந்த ஒருவ போற்றி
விரிகடல் உலகின் விளைவே போற்றி 125
அருமையில் எளிய அழகே போற்றி
கருமுகி லாகிய கண்ணே போற்றி
மன்னிய திருவருள் மலையே போற்றி
என்னையும் ஒருவ னாக்கி இருங்கழல்
சென்னியில் வைத்த சேவக போற்றி 130
தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி
அழிவிலா ஆனந்த வாரி போற்றி
அழிவதும் ஆவதுங் கடந்தாய் போற்றி
முழுவதும் இறந்த முதல்வா போற்றி
மானோர் நோக்கி மணாளா போற்றி 135
வானகத் தமரர் தாயே போற்றி
பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி 140
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி
அளிபவர் உள்ளத் தமுதே போற்றி
கனவிலுந் தேவர்க் கரியாய் போற்றி
நனவிலும் நாயேற் கருளினை போற்றி
இடைமரு துறையும் எந்தாய் போற்றி 145
சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி
ஆரூ ரமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவை யாறா போற்றி
அண்ணா மலையெம் அண்ணா போற்றி
கண்ணார் அமுதக் கடலே போற்றி 150
ஏகம் பத்துறை யெந்தாய் போற்றி
பாகம் பெண்ணுரு வானாய் போற்றி
பராய்த்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
மற்றோர் பற்றிங் கறியேன் போற்றி 155
குற்றா லத்தெங் கூத்தா போற்றி
கோகழி மேவிய கோவே போற்றி
ஈங்கோய் மலையெம் எந்தாய் போற்றி
பாங்கார் பழனத் தழகா போற்றி
கடம்பூர் மேவிய விடங்கா போற்றி 160
அடைந்தவர்க் கருளும் அப்பா போற்றி
இத்தி தன்னின் கீழிரு மூவர்க்
கத்திக் கருளிய அரசே போற்றி
தென்னா டுடைய சிவனே போற்றி
எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி 165
ஏனக் குருளைக் கருளினை போற்றி
மானக் கயிலை மலையாய் போற்றி
அருளிட வேண்டும் அம்மான் போற்றி
இருள்கெட அருளும் இறைவா போற்றி
தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி 170
களங்கொளக் கருத அருளாய் போற்றி
அஞ்சே லென்றிங் கருளாய் போற்றி
நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி
அத்தா போற்றி ஐயா போற்றி
நித்தா போற்ற நிமலா போற்றி 175
பத்தா போற்றி பவனே போற்றி
பெரியாய் போற்றி பிரானே போற்றி
அரியாய் போற்றி அமலா போற்றி
மறையோர் கோல நெறியே போற்றி
முறையோ தரியேன் முதல்வா போற்றி 180
உறவே போற்றி உயிரே போற்றி
சிறவே போற்றி சிவமே போற்றி
மஞ்சா போற்றிமணாளா போற்றி
பஞ்சே ரடியாள் பங்கா போற்றி
அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி 185
இலங்கு சுடரெம் ஈசா போற்றி
கவைத்தலை மேவிய கண்ணே போற்றி
குவைப்பதி மலிந்த கோவே போற்றி
மலைநா டுடைய மன்னே போற்றி
கலையா ரரிகே சரியாய் போற்றி 190
திருக்கழுக் குன்றிற் செல்வா போற்றி
பொருப்பமர் பூவணத் தரனே போற்றி
அருவமும் உருவமும் ஆனாய் போற்றி
மருவிய கருணை மலையே போற்றி
துரியமும் இறந்த சுடரே போற்றி 195
தெரிவரி தாகிய தெளிவே போற்றி
தோளா முத்தச் சுடரே போற்றி
ஆளா னவர்கட் கன்பா போற்றி
ஆரா அமுதே அருளே போற்றி
பேரா யிரமுடைப் பெம்மான் போற்றி 200
தாளி அறுகின் தாராய் போற்றி
நீளொளி யாகிய நிருத்தா போற்றி
சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி
சிந்தனைக் கரிய சிவமே போற்றி
மந்தர மாமலை மேயாய் போற்றி 205
எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி
புலிமுலை புல்வாய்க் கருளினை போற்றி
அலைகடல் மீமிசை நடந்தாய் போற்றி
கருங்குரு விக்கன் றருளினை போற்றி
இரும்புலன் புலர இசைந்தனை போற்றி 210
படியுறப் பயின்ற பாவக போற்றி
அடியொடு நடுவீ றானாய் போற்றி
நரகொடு சுவர்க்கம் நானிலம் புகாமற்
பரகதி பாண்டியற் கருளினை போற்றி
ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி 214
செழுமலர்ச் சிவபுரத் தரசே போற்றி
கழுநீர் மாலைக் கடவுள் போற்றி
தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி
பிழைப்பு வாய்ப்பொன் றறியா நாயேன்
குழைத்தசொன் மாலை கொண்டருள் போற்றி 220
புரம்பல எரித்த புராண போற்றி
பரம்பரஞ் சோதிப் பரனே போற்றி
போற்றி போற்றி புயங்கப் பெருமான்
போற்றிபோற்றி புராண காரண
போற்ற போற்றி சயசய போற்றி 225

.

  
பொழிப்புரை :

பிரமன் முதலாகத் தேவர்கள் யாவரும் தொழுது நிற்க, இரண்டு திருவடிகளாலே மூன்று உலகங்களையும் அளந்து, நான்கு திக்கிலுள்ள முனிவர்களும் ஐம்புலன்களும் மகிழும்படி வணங்குகின்ற, ஒளி பொருந்திய திருமுடியையுடைய அழகிய நெடுமால், அந்நாளில் திருவடியின் முடிவையறிய வேண்டுமென்ற விருப்பத்தால், வேகமும் வலிமையுமுடைய பன்றியாகி முன்வந்து ஏழுலகங்களும் ஊடுருவும்படி தோண்டிச் சென்று பின்னே இளைத்து `ஊழியை நடத்தும் முதல்வனே வெல்க வெல்க` என்று துதித்தும் காணப் பெறாத தாமரை மலர் போலும் திருவடிகள், துதித்தற்கு எளிதாகி,நெடிய கடலாற் சூழப்பட்ட உலகத்தில்,
யானை முதலாக, எறும்பு இறுதியாகிய குறைவில்லாத கருப்பைகளினின்றும் உள்ள நல்வினையால் தப்பியும், மனிதப் பிறப்பில் தாயின் வயிற்றில் அதனை அழித்தற்குச் செய்யும் குறை வில்லாத புழுக்களின் போருக்குத் தப்பியும், முதல் மாதத்தில் தான்றிக்காய் அளவுடைய கரு இரண்டாகப் பிளவுபடுவதனின்றும் தப்பியும், இரண்டாம் மாதத்தில் விளைக்கின்ற விளைவினால் உருக்கெடுவதினின்று தப்பியும் மூன்றாம் மாதத்தில் தாயின் மதநீர்ப் பெருக்குக்குத் தப்பியும், நான்காம் மாதத்தில் அம்மதநீர் நிறைவினால் உண்டாகும், பெரிய இருளுக்குத் தப்பியும், ஐந்தாம் மாதத்தில் உயிர் பெறாது இருத்தலினின்று தப்பியும், ஆறாம் மாதத்தில் கருப்பையில் தினவு மிகுதியால் உண்டாகிய துன்பத்தினின்றும் தப்பியும், ஏழாவது மாதத்தில் கருப்பை தாங்காமையால் பூமியில் காயாய் விழுவதனின்று தப்பியும், எட்டாவது மாதத்தில் வளர்ச்சி நெருக்கத்தினால் உண்டாகும் துன்பத்தினின்றும் தப்பியும், ஒன்பதாவது மாதத்தில் வெளிப்பட முயல்வதனால் வரும் துன்பத்தினின்று தப்பியும், குழவி வெளிப்படுதற்குத் தகுதியாகிய பத்தாவது மாதத்தில், தாய்படுகின்றதனோடு தான்படுகின்ற, கடல் போன்ற துயரத்தினின்று தப்பியும், பூமியிற் பிறந்த பின்பு, வளர்ச்சியடையும் வருடங்கள் தோறும் தாய் தந்தையர் முதலியோர் நெருக்கியும், அழுத்தியும் செய்கின்ற எத்தனையோ பல துன்பங்களில் தப்பியும் காலைப் பொழுதில் மலத்தாலும், உச்சிப் பொழுதில் பசியாலும், இராப்பொழுதில் தூக்கத்தாலும், ஊர்ப்பயணங்களாலும் உண்டா கின்ற துன்பங்களினின்று தப்பியும், கரிய கூந்தலையும் சிவந்த வாயினையும், வெண்மையாகிய பற்களையும், கார்காலத்து மயில் போலப் பொருந்திய. சாயலையும், நெருக்கமாகி உள்ளே களிப்புக் கொண்டு, கச்சு அறும்படி நிமிர்ந்து ஒளி பெற்று முன்னே பருத்து, இடை இளைத்து வருந்தும்படி எழுந்து பக்கங்களில் பரவி ஈர்க்குக் குச்சியும் இடையே நுழையப் பெறாத இளங்கொங்கைகளையும் உடைய மாதருடைய கூர்மையாகிய கண்களின் கொள்ளைக்குத் தப்பியும், மயக்கம் கொண்ட உலகினரது பெரிய மத்தக்களிறு என்று சொல்லத் தக்க ஆசைக்குத் தப்பியும், கல்விஎன்கின்ற பலவாகிய கடலுக்குத் தப்பியும், செல்வமென்கின்ற துன்பத்தினின்று தப்பியும், வறுமை என்கின்ற பழமையாகிய விடத்தினின்று தப்பியும், சிறிய எல்லைகளையுடைய பல வகைப்பட்ட முயற்சிகளில் தப்பியும்,
தெய்வம் உண்டு என்பதாகிய ஒரு நினைப்பு உண்டாகி, வெறுப்பில்லாததாகிய ஒரு பொருளை நாடுதலும்,ஆறுகோடியெனத் தக்கனவாய் மயக்கம் செய்யவல்ல சடவுலக ஆற்றல்கள், வேறு வேறாகிய தம் மாயைகளைச் செய்யத் தொடங்கினவாகவும், அயலா ராயினோரும் கடவுள் இல்லையென்று பொய் வழக்குப் பேசி நாவில் தழும்பேறப் பெற்றனர். உறவினர் என்கின்ற பசுக்கூட்டங்கள் பின் பற்றி அழைத்துப் பதறிப் பெருகவும், மறையோரும், விரதத்தையே மேன்மையான சாதனம் என்று தம் கொள்கை உண்மையாகும் படி நூற்பிரமாணங்களைக் காட்டினார்களாகவும், சமயவாதிகள் எல்லாம் தம்தம் மதங்களே ஏற்புடைய மதங்களாகும் எனச் சொல்லி ஆர வாரித்துப் பூசலிட்டார்களாகவும், உறுதியான மாயாவாதம் என்கிற பெருங்காற்றானது சுழன்று வீசி முழங்கவும், உலோகாயத மதம் என்கிற, ஒள்ளிய வலிமையுடைய பாம்பினது கலை வேறுபாடு களையுடைய கொடிய நஞ்சு வந்து சேர்ந்து அதிலுள்ள பெருஞ் சூழ்ச்சிகள் எத்தனையோ பலவாகச் சுற்றித் தொடரவும்,
முற்கூறிய அவற்றால் வழுவாது தாம் பிடித்த கொள்கையை விட்டு விடாமல், நெருப்பினிற் பட்ட மெழுகுபோல வணங்கி மனம் உருகி, அழுது உடல் நடுக்கமடைந்து ஆடுதல் செய்தும், அலறுதல் செய்தும், பாடுதல் செய்தும், வழிபட்டும், குறடும் மூடனும் தாம் பிடித்ததை விடா என்கிற முறைமையேயாகி நல்ல, இடையறாத கடவுள் பத்தியில் பச்சை மரத்தில் அடித்த ஆணி திண்மையாய்ப் பற்றி நிற்பது போல உறைத்து நின்று உருக்கம் மிகுந்து கடல் அலைபோல அலைவுற்று மனம் வாடி, அதற்கு ஏற்ப உடல் அசைவுற்று உலகவர் பேய் என்று தம்மை இகழ்ந்து சிரிக்க வெட்கமென்பது தவிர்ந்து, நாட்டில் உள்ளவர் கூறும் குறைச்சொற்களை அணியாக ஏற்று, மனம் கோணுதல் இல்லாமல், தமது திறமை ஒழிந்து, சிவஞானம் என்னும் உணர்வினால் அடையப் பெறுகின்ற மேலான வியப்பாகக் கருதி கன்றினை உடைய பசுவின் மனம் போல அலறியும் நடுங்கியும், வேறொரு தெய்வத்தைக் கனவிலும் நினையாமல், அரிய மேலான ஒருவன் பூமியில் வந்து குருமூர்த்தியாகி அருள் செய்த பெருமையை எளிமையாக எண்ணி அசட்டை செய்யாது திருவடிகள் இரண்டையும் உருவைவிட்டு அகலாத நிழலைப் போல வெறுக்காமல், முன்பின்னும் நீங்காது நின்று அந்தத் திசை நோக்கி நினைந்து எலும்பு மெலிவுற்று உருக, மிகக் கனிவுற்று இரங்கிப் பத்தியென்னும் நதியானது கரை புரண்டு ஒட, நல்ல புலனறிவு ஒருமைப்பட்டு, `நாதனே!` என்று கூவி அழைத்துச் சொற்கள் குழறி, மயிர்சிலிர்க்க, கைம்மலர் குவித்து நெஞ்சத் தாமரை விரிய, கண்கள் களிப்பு மிக நுண்ணிய துளிகள் அரும்பத் தளராத பேரன்பினை, தினந்தோறும், வளர்ப்பவர்களுக்குத் தாயாகியே அவர்களை வளர்த்தவனே! வணக்கம்.
மெய்யுணர்வை நல்கும் மறையோனாகி, வினைகள் நீங்க, கைகொடுத்துக் காப்பாற்ற வல்ல கடவுளே! வணக்கம். பொன்மயமா யிருக்கிற மதுரைக்கு அரசனே! வணக்கம். கூடற்பதியில் விளங்கு கின்ற நன்னிற மாணிக்கமே! வணக்கம். தென்தில்லையம்பலத்தில் ஆடுவோனே! வணக்கம். இன்று எனக்கு அரிய அமிர்தமாயினவனே! வணக்கம். கெடாத நான்கு வேதங்களுக்கும் முதல்வனே! வணக்கம். இடபம் பொருந்திய வெற்றிக் கொடியை உடைய சிவபிரானே! வணக்கம். மின்னல் ஒளி பொருந்திய பல அழகிய வேறுவேறு உருவங்களை உடையவனே! வணக்கம். கல்லில் நார் உரித்தது போல என் மனத்தை இளகச் செய்த கனியே! வணக்கம். பொன்மலை போன்றவனே! காத்தருள்வாய். வணக்கம். ஐயோ! எனக்கருள் செய்வாய். நினக்கு வணக்கங்கள். எல்லா உலகங்களையும் படைப் பவனே! காப்பவனே! ஒடுக்குபவனே! வணக்கம். பிறவித்துன்பத்தை நீக்கி அருள் புரிகின்ற எம் தந்தையே! வணக்கம். ஆண்டவனே! வணக்கம். எங்கும் நிறைந்தவனே! வணக்கம். ஒளியை வீசுகின்ற படிகத்தின் திரட்சியே! வணக்கம்.
தலைவனே! வணக்கம். சாவாமையைத் தரும் மருந்தான வனே! வணக்கம். நறுமணம் பொருந்திய திருவடியையுடைய நீதியாளனே! வணக்கம். வேதத்தை உடையவனே! வணக்கம். குற்ற மற்றவனே! வணக்கம். முதல்வனே! வணக்கம். அறிவாய் இருப் பவனே! வணக்கம், வீட்டு நெறியானவனே! வணக்கம். கனியின் சுவை போன்றவனே! வணக்கம். கங்கையாறு தங்கிய சிவந்த சடையை யுடைய நம்பனே! வணக்கம். எல்லாப் பொருள்களையும் உடைய வனே! வணக்கம். உயிர்களின் உணர்விற்கு உணர்வாய் இருப்பவனே! வணக்கம். கடையேனுடைய அடிமையைக் கடைக்கணித்து ஏற்றுக் கொண்டவனே! வணக்கம். பெரியோனே! வணக்கம். நுண்ணியனே! வணக்கம். சைவனே! வணக்கம், தலைவனே! வணக்கம், அனற் பிழம்பாகிய இலிங்கவடிவினனே! வணக்கம். எண்குணங்கள் உடையவனே! வணக்கம். நல்வழியானவனே! வணக்கம். உயிர்களின் நினைவில் கலந்துள்ளவனே! வணக்கம். தேவர்களுக்கும் அரிதாகிய மருந்தானவனே! வணக்கம். மற்றையோர்க்கு எளிமையான இறைவனே! வணக்கம். இருபத்தொரு தலை முறையில் வருகின்ற சுற்றத்தார் வலிய நரகத்தில் ஆழ்ந்து போகாமல் அருள் செய்கின்ற அரசனே! வணக்கம். தோழனே! வணக்கம். துணைபுரிபவனே! வணக்கம். என்னுடைய வாழ்வானவனே! வணக்கம். என் நிதியானவனே! வணக்கம். இயல்பாகவே பாசங்கள் இல்லாதவனே! வணக்கம். தலைவனே! வணக்கம். அப்பனே! வணக்கம். பாசத்தை அழிப்பவனே! வணக்கம். சொல்லையும் அறிவையும் கடந்த ஒப்பற்றவனே! வணக்கம். விரிந்த கடல் சூழ்ந்த உலக வாழ்வின் பயனே! வணக்கம்.
அருமையாய் இருந்தும் எளிமையாய் வந்தருளும் அழகனே! வணக்கம். கார்மேகம் போல அருள் புரிகின்ற கண் போன்றவனே! வணக்கம். நிலைபெற்ற பெருங்கருணை மலையே! வணக்கம். என்னையும் ஓர் அடியவனாக்கிப் பெருமையாகிய திருவடியை என் தலையில் வைத்த வீரனே! வணக்கம். வணங்கிய கையினரின் துன்பங்களை நீக்குவோனே! வணக்கம். அழிவில்லாத இன்பக்கடலே! வணக்கம். ஒடுக்கமும் தோற்றமும் கடந்தவனே! வணக்கம். எல்லாம் கடந்த முதல்வனே! வணக்கம். மானை நிகர்த்த நோக்கத்தையுடைய உமா தேவியின் மணவாளனே! வணக்கம். விண்ணுலகத்திலுள்ள தேவர்களுக்குத் தாய் போன்றவனே! வணக்கம். பூமியில் ஐந்து தன்மைகளாய்ப் பரவியிருப்பவனே! வணக்கம். நீரில் நான்கு தன்மைகளாய் நிறைந்து இருப்பவனே! வணக்கம். நெருப்பில் மூன்று தன்மைகளாய்த் தெரிபவனே! வணக்கம். காற்றில் இரண்டு தன்மைகளாய் மகிழ்ந்து இருப்பவனே! வணக்கம். ஆகாயத்தில் ஒரு தன்மையாய்த் தோன்றியவனே! வணக்கம். கனிபவருடைய மனத்தில் அமுதமாய் இருப்பவனே! வணக்கம். கனவிலும் தேவர்கட்கு அருமையானவனே! வணக்கம். நாய் போன்ற எனக்கு விழிப்பிலும் அருள் செய்தவனே! வணக்கம்.
திருவிடை மருதூரில் வீற்றிருக்கும் எம் அப்பனே! வணக்கம். சடையில் கங்கையைத் தாங்கியவனே! வணக்கம். திருவாரூரில் தங்கியருளிய தலைவனே! வணக்கம். சிறப்புப் பொருந்திய திருவையாற்றில் உள்ளவனே! வணக்கம். அண்ணாமலையிலுள்ள எம்மேலோனே! வணக்கம். கண்ணால் நுகரப்படும் அமுதக் கடலாய் உள்ளவனே! வணக்கம். திருவேகம்பத்தில் வாழ்கின்ற எந்தையே! வணக்கம். அங்கு ஒரு பாகம் பெண்ணுருவாகியவனே! வணக்கம். திருப்பராய்த் துறையில் பொருந்திய மேலோனே! வணக்கம். திருச்சிராப்பள்ளியில் எழுந்தருளிய சிவபிரானே! வணக்கம். இவ்விடத்து உன்னையன்றி மற்றொருபற்றையும் யான் அறிந்திலேன் ஆதலின் வணக்கம். திருக்குற்றாலத்தில் எழுந்தருளியுள்ள எம் கூத்தனே! வணக்கம். திருப் பெருந்துறையில் பொருந்திய இறைவனே! வணக்கம். திரு ஈங்கோய் மலையில் வாழ்கின்ற எம் தந்தையே! வணக்கம். வனப்பு நிறைந்த திருப்பழனத்தில் உள்ள அழகனே! வணக்கம். திருக்கடம்பூரில் எழுந்தருளிய சுயம்புவே! வணக்கம்.
உன்னை அடுத்தவர்க்கு அருள் செய்கின்ற அப்பனே! வணக்கம். கல்லால மரத்தின் கீழ் இயக்கியர் அறுவருக்கும், வெள்ளானைக்கும் அருள் செய்த அரசனே! வணக்கம். மற்றும்பல தலங்கள் உள்ள தென்னாடுடைய சிவபிரானே! வணக்கம். வேறு பல நாட்டவர்களுக்கும் வழிபடு தெய்வமானவனே! வணக்கம். பன்றிக்குட்டிகளுக்குக் கருணை காட்டி அருளியவனே! வணக்கம். பெரிய கயிலாயமலையில் இருப்பவனே! வணக்கம். அம்மானே! அருள் செய்ய வேண்டும். அஞ்ஞான இருள் அழியும்படி அருள் செய்கின்ற இறைவனே! வணக்கம். அடியேன் துணையற்றவனாய்த் தளர்ச்சி அடைந்தேன்; வணக்கம்.
நிலையான இடத்தைப் பெற எண்ணும்படி அருள்புரிவாய், வணக்கம். அஞ்சாதே என்று இப்பொழுது எனக்கு அருள் செய்ய வேண்டும்; வணக்கம். நஞ்சையே அமுதமாக விரும்பினவனே! வணக்கம், அப்பனே! வணக்கம், குருவே! வணக்கம். என்றும் உள்ளவனே! வணக்கம். குற்றம் அற்றவனே! வணக்கம். தலைவனே! வணக்கம். எவற்றுக்கும் பிறப்பிடமானவனே! வணக்கம். பெரியவனே! வணக்கம். வள்ளலே! வணக்கம், அரியவனே! வணக்கம். பாசம் இல்லாதவனே! வணக்கம். அந்தணர் கோலத்தோடு வந்து அருள் புரிந்த நீதியானவனே! வணக்கம். முறையோ பொறுக்க மாட்டேன். முதல்வனே! வணக்கம். சுற்றமானவனே! வணக்கம். உயிர்க்கு உயிராய் இருப்பவனே! வணக்கம். சிறந்த பொருளான வனே! வணக்கம். மங்கலப் பொருளானவனே! வணக்கம். ஆற்ற லுடையவனே! வணக்கம். அழகுடையவனே! வணக்கம். செம்பஞ்சுக் குழம்பு பூசிய அழகிய பாதங்களை உடைய உமாதேவி பாகனே! வணக்கம். நாயினேன் வருத்த முற்றேன். நின் அடியவன் நினக்கு வணக்கம். விளங்குகின்ற ஒளியையுடைய எம் ஆண்டவனே! வணக்கம். கவைத்தலை என்னும் திருப்பதியில் விரும்பி எழுந்தருளிய கண் போன்றவனே! வணக்கம். குவைப்பதி என்னும் ஊரிலே மகிழ்ந்து இருந்த இறைவனே! வணக்கம். மலைநாட்டை உடைய மன்னனே! வணக்கம். கல்வி மிகுந்த அரிகேசரி யென்னும் ஊரினை உடையாய்! வணக்கம். திருக்கழுக்குன்றிலுள்ள செல்வனே! வணக்கம். கயிலை மலையில் வீற்றிருக்கும், திருப்பூவணத் திலுள்ள பெருமானே! வணக்கம். அருவம் உருவம் என்னும் திருமேனிகளைக் கொண்டவனே! வணக்கம். என்னிடத்தில் வந்து பொருந்திய அருள் மலையே! வணக்கம்.
சாக்கிரம் முதலிய நான்கு நிலையும் கடந்த பேரறிவே! வணக்கம். அறிதற்கு அருமையாகிய தெளிவே! வணக்கம். துளைக்கப் படாத தூய முகத்தின் சோதியே! வணக்கம். அடிமையானவர்க்கு அன்பனே! வணக்கம். தெவிட்டாத அமுதமே! திருவருளே! வணக்கம். ஆயிரம் திருப்பெயர்களை உடைய பெருமானே! வணக்கம். நீண்ட தாளினையுடைய அறுகம்புல் கட்டிய மாலை அணிந் தவனே! வணக்கம். பேரொளி வடிவாகிய கூத்தப் பெருமானே! வணக்கம். சந்தனக் குழம்பை அணிந்த அழகனே! வணக்கம். நினைத்தற்கரிய சிவமே! வணக்கம். மந்திர நூல் வெளிப்பட்ட பெரிய மகேந்திர மலையில் வீற்றிருந்தவனே! வணக்கம். எங்களை உய்யும்படி ஆட்கொள்வோனே! வணக்கம். புலியின் பாலை மானுக்கு ஊட்டுமாறு அருளினவனே! வணக்கம். அசையாநின்ற கடலின் மேல் நடந்தவனே! வணக்கம். கரிக் குருவிக்கு அன்று அருள் செய்தவனே! வணக்கம். வலிய ஐம்புல வேட்கைகள் அற்றொழியும் உள்ளம் பொருந்தி அருளினவனே! வணக்கம். நிலத்தின் கண் பொருந்தப் பழகிய பல்வகைத் தோற்ற முடையவனே! வணக்கம். உலகத்திற்கு எல்லாம் முதலும் நடுவும் முடிவுமானவனே! வணக்கம். நாகம், விண்ணுலகம், நிலவுலகம் என்ற மூவிடத்தும் புகாதபடி பாண்டியனுக்கு மேலான வீட்டுலகை நல்கி அருளியவனே! வணக்கம். எங்கும் நீக்கமற நிறைந்த ஒருவனே! வணக்கம். செழுமை மிக்க மலர் நிறைந்த திருப்பெருந்துறைத் தலைவனே! வணக்கம்.
செங்கழுநீர் மாலையை அணிந்த கடவுளே! வணக்கம். வணங்குவோருடைய மயக்கத்தை அறுப்பவனே! வணக்கம். தவறு யாது? பொருத்தம் யாது? என்று அறியாத நாயினேன் குழைந்து சொன்ன சொல் மாலையைக் கொண்டருள வேண்டும்; வணக்கம். மூன்றுபுரங்களை எரித்த பழையோனே! வணக்கம். மேலான ஒளியை உடைய மேலோனே! வணக்கம். பாம்பை அணிந்த பெரியோனே! வணக்கம். பழமையானவனே! எல்லாவற்றிற்கும் மூல காரணனே! வணக்கம். வணக்கம். வெற்றியுண்டாக வணக்கம்! வணக்கம்!.


குறிப்புரை :

போற்றித் திருஅகவல் - `போற்றி` என்னும் சொல்லையுடைய திரு அகவல். `போற்றுதலை உடைய` எனப் பொருள் மேல் வைத்துரைப்பின், அஃது ஏனைய பகுதிகட்கும் பிறவற்றிற்கும் பொதுவாதல் அறிக. இத் திருப்பாட்டில் இறைவனை அடிகள் பலபெயர்க் கோவையாற் போற்றுகின்றார்.
இதற்கு, `சகத்தின் உற்பத்தி` என முன்னோர் உரைத்த குறிப்பு, முதற் போற்றி வரையில் உள்ள பகுதி பற்றியே கூறியதாம். அங்ஙனம் கூறும் வழியும், `உலகம்` எனப் பொருள்தரும், `சகம்` என்பது, மக்களுலகையே குறித்துக் கூறியதாம்.
1-10. இதனுள் முதல் மூன்று அடிகளில் எண்ணலங்காரம் வந்தது, திருமால் காத்தற் கடவுளாதலின், போகத்தைத் தரும் கடவுளாவன். அதனால், ஐம்புலன்களும் நிரம்பக் கிடைத்தற் பொருட்டுப் போற்றப்படுவனாயினன். ஆகவே, இங்கு ``முனிவர்`` என்றது, சுவர்க்க இன்பத்தை வேண்டித் தவம் செய்வோரையாயிற்று. மலர - நிரம்ப உளவாதற் பொருட்டு. கதிர்முடி - மணிமுடி. கடவுளரிற் சிறந்தமையின், மாலை, `திருமால்` என்ப. அவன் கடவுளரிற் சிறந்தோனாதலை,
``தேவில் திருமால் எனச் சிறந்த``
என்னும் திருவள்ளுவ மாலையானும் (36) அறிக. இதில் `தே` என்பது அஃறிணைச் சொல்லாய், பன்மைமேல் நின்றது. `புருடோத்தமன்` என்றலும் இதுபற்றி. நிலங்கடந்த (உலகத்தை அளந்த) அண்ணல் என்பார், ``கதிர்முடி நெடுமால்`` என்று அருளினார். பிரமன், மால் இருவரும் சிவசோதியினது அடி, முடி, இரண்டையுங்காணவே புகுந்தனராதலின்,``அடி முடி அறியும் ஆதரவு`` என்றார். ஆதரவு - விருப்பம். அது, பகுதிப் பொருள் விகுதி. இன், ஏதுப்பொருட்கண் வந்த ஐந்தாம் உருபு.
கடுமுரண் - மிக்க வலிமை. ஏனம் - பன்றி. முன் கலந்து - நிலத்தைச் சார்ந்து. ``முன்`` என்றது ஆகுபெயராய், முன்னே காணப்படும் நிலத்தைக் குறித்தது. ஆகாயம், அண்ணாந்து நோக்கிய வழியே காணப்படுமாதலின், அது முன்னர்க் காணப்படுவதன்றா யிற்று, ஏழ்தலம், கீழ் உலகம் ஏழு; அவை `அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதலம்` என்பன. உருவுதல் - கடந்து போதல். எய்த்தது, பிரகிருதியுடம்பு உடைமையின், பாதலத்திற்குக் கீழ்ச் செல்ல இயலாமையால் என்க. எய்த்தல் - இளைத்தல் ``ஊழி முதல்வன்`` என்றது, `காலத்தை நடத்துபவன்` என்றவாறு. எல்லாப் பொருளும் காலத்திற்கு உட்பட்டு நிற்றலின், `காலத்திற்கு முதல்வன்` என்றது, `எல்லாப் பொருட்கும் முதல்வன்` என்றவாறாம்.
சயசய - நீ வெல்க! வெல்க! வழுத்துதல் - துதித்தல். ``அடி இணைகள்`` என்றதனை, `இணை அடிகள்` என மாற்றிக்கொள்க. இணை அடிகள் சிவபிரானுடையன என்பது, திருமால் தேடிக் காணாத வரலாறு கூறியவதனால் பெறப் பட்டது.
``எளிது`` என்ற ஒருமை அப்பண்பின் மேல் நின்று ஆகு பெயராயிற்று. ``ஆய்`` என்ற வினையெச்சம் காரணப் பொருட் டாய்,`தாம் பிடித்தது சலியா`` (அடி.59) என்பது முதலியவற்றில் வரும் `சலியா` முதலிய வினைகளோடு இயைந்து நின்றது. வார் - நீண்ட.
11-12. இது முதலாகவரும் நாற்பத்தொன்பது அடிகளால் உயிர்கட்கு இறையுணர்வு உண்டாவதன் அருமையை விரித்தோதி யருளுகின்றார்.
யானையினும் பெரிய பிறவியும், எறும்பினும் சிறிய
பிறவியும் உளவாயினும் பெருமை சிறுமைகளின் எல்லைக்கு அவற்றைக்கூறும் வழக்குப் பற்றி அங்ஙனமே ஓதியருளினார். ஊனம் - குறைவு. `குறைவில்லாத` என்றது, `பலவாகிய` என்பதனைக் குறித்தது.
யோனி - பிறப்பின் வகைகள். இவ் வடசொல் முதற்கண் இகரம் பெற்று வந்தது. ஏழுவகைப் பிறப்பிலும் உள்ள யோனி பேதம் எண்பத்து நான்கு நூறாயிரம் என்பதை,
அண்டசம் சுவேத சங்கள்
உற்பிச்சம் சராயு சத்தோ
டெண்டரு நால்எண் பத்து
நான்குநூ றாயி ரத்தால்
உண்டுபல் யோனி எல்லாம்
ஒழித்துமா னுடத்து தித்தல்
கண்டிடிற் கடலைக் கையால்
நீந்தினன் காரி யங்காண்.
என்னும் சிவஞான சித்தியிலும் (சூ, 2. 89),
தோற்றியிடும் அண்டங்கள் சுவேதசங்கள் பாரில் துதைந்துவரும் உற்பீசம் சராயுசங்கள் நான்கில்
ஊற்றமிகு தாபரங்கள் பத்தொன்ப தென்றும்
ஊர்வபதி னைந்தமரர் பதினொன்றொ டுலவா
மாற்றருநீர் உறைவனநற் பறவைகள்நாற் காலி
மன்னியிடும் பப்பத்து மானுடர்ஒன் பதுமா
ஏற்றிஒரு தொகையதனில் இயம்புவர்கள் யோனி
எண்பத்து நான்குநூ றாயிரமென் றெடுத்தே.
என்னும் சிவப்பிரகாசத்திலும் (47) காண்க. எண்பத்து நான்கிற்குச் சிவப்பிரகாசத்துட் கூறப்பட்ட வகையை,
ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானுடம்
நீர்ப்பறவை நாற்கால்ஓர் பப்பத்துச் - சீரிய
பந்தமாந் தேவர் பதினால் அயன்படைத்த
அந்தமில் சீர்த் தாவரம்நா லைந்து.
என (குறள்.62 - பரிமேலழகர் உரை)ச் சிறிது வேறுபடவும் கூறுவர் என்பது தோன்றவே சிவப்பிரகாசத்துள் `ஒரு தொகையதனில் இயம்புவர்`` என்று அருளினார் போலும்!
``யோனியினுள்`` என்றதன்பின், `செலுத்தும்` என்பது தொகுத்தலாய் நின்றது. `வினையினின்றும் பிழைத்தும்` என்க. பிழைத்தல் - தப்புதல். `` பிழைத்தும்`` என வரும் உம்மைகள் யாவும், வினைக்கண் வந்த எண்ணிடைச் சொற்கள். உயிர்கட்கு இறையுணர்வு உண்டாதற்கு உளவாகும் இடையூறுகள் பலவற்றையும் இங்கு முறைமைப்பட வைத்து அருளிச் செய்கின்றாராதலின், ``பிழைத்தும்`` என வருவனவற்றின் பின்னெல்லாம், `அதன்பின்` என்பது வருவித்து அம் முறைமை தோன்ற உரைக்க. ``பிழைத்து`` என வருவன பலவும், ``உண்டாகி`` (அடி.42) என்பதனோடே முடியும்.
போற்றித் திருஅகவல் - `போற்றி` என்னும் சொல்லையுடைய திரு அகவல். `போற்றுதலை உடைய` எனப் பொருள் மேல் வைத்துரைப்பின், அஃது ஏனைய பகுதிகட்கும் பிறவற்றிற்கும் பொதுவாதல் அறிக. இத் திருப்பாட்டில் இறைவனை அடிகள் பலபெயர்க் கோவையாற் போற்றுகின்றார்.
இதற்கு, `சகத்தின் உற்பத்தி` என முன்னோர் உரைத்த குறிப்பு, முதற் போற்றி வரையில் உள்ள பகுதி பற்றியே கூறியதாம். அங்ஙனம் கூறும் வழியும், `உலகம்` எனப் பொருள்தரும், `சகம்` என்பது, மக்களுலகையே குறித்துக் கூறியதாம்.
1-10. இதனுள் முதல் மூன்று அடிகளில் எண்ணலங்காரம் வந்தது, திருமால் காத்தற் கடவுளாதலின், போகத்தைத் தரும் கடவுளாவன். அதனால், ஐம்புலன்களும் நிரம்பக் கிடைத்தற் பொருட்டுப் போற்றப்படுவனாயினன். ஆகவே, இங்கு ``முனிவர்`` என்றது, சுவர்க்க இன்பத்தை வேண்டித் தவம் செய்வோரையாயிற்று. மலர - நிரம்ப உளவாதற் பொருட்டு. கதிர்முடி - மணிமுடி. கடவுளரிற் சிறந்தமையின், மாலை, `திருமால்` என்ப. அவன் கடவுளரிற் சிறந்தோனாதலை,
``தேவில் திருமால் எனச் சிறந்த``
என்னும் திருவள்ளுவ மாலையானும் (36) அறிக. இதில் `தே` என்பது அஃறிணைச் சொல்லாய், பன்மைமேல் நின்றது. `புருடோத்தமன்` என்றலும் இதுபற்றி. நிலங்கடந்த (உலகத்தை அளந்த) அண்ணல் என்பார், ``கதிர்முடி நெடுமால்`` என்று அருளினார். பிரமன், மால் இருவரும் சிவசோதியினது அடி, முடி, இரண்டையுங்காணவே புகுந்தனராதலின்,``அடி முடி அறியும் ஆதரவு`` என்றார். ஆதரவு - விருப்பம். அது, பகுதிப் பொருள் விகுதி. இன், ஏதுப்பொருட்கண் வந்த ஐந்தாம் உருபு.
கடுமுரண் - மிக்க வலிமை. ஏனம் - பன்றி. முன் கலந்து - நிலத்தைச் சார்ந்து. ``முன்`` என்றது ஆகுபெயராய், முன்னே காணப்படும் நிலத்தைக் குறித்தது. ஆகாயம், அண்ணாந்து நோக்கிய வழியே காணப்படுமாதலின், அது முன்னர்க் காணப்படுவதன்றா யிற்று, ஏழ்தலம், கீழ் உலகம் ஏழு; அவை `அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதலம்` என்பன. உருவுதல் - கடந்து போதல். எய்த்தது, பிரகிருதியுடம்பு உடைமையின், பாதலத்திற்குக் கீழ்ச் செல்ல இயலாமையால் என்க. எய்த்தல் - இளைத்தல் ``ஊழி முதல்வன்`` என்றது, `காலத்தை நடத்துபவன்` என்றவாறு. எல்லாப் பொருளும் காலத்திற்கு உட்பட்டு நிற்றலின், `காலத்திற்கு முதல்வன்` என்றது, `எல்லாப் பொருட்கும் முதல்வன்` என்றவாறாம்.
சயசய - நீ வெல்க! வெல்க! வழுத்துதல் - துதித்தல். ``அடி இணைகள்`` என்றதனை, `இணை அடிகள்` என மாற்றிக்கொள்க. இணை அடிகள் சிவபிரானுடையன என்பது, திருமால் தேடிக் காணாத வரலாறு கூறியவதனால் பெறப் பட்டது.
``எளிது`` என்ற ஒருமை அப்பண்பின் மேல் நின்று ஆகு பெயராயிற்று. ``ஆய்`` என்ற வினையெச்சம் காரணப் பொருட் டாய்,`தாம் பிடித்தது சலியா`` (அடி.59) என்பது முதலியவற்றில் வரும் `சலியா` முதலிய வினைகளோடு இயைந்து நின்றது. வார் - நீண்ட.
11-12. இது முதலாகவரும் நாற்பத்தொன்பது அடிகளால் உயிர்கட்கு இறையுணர்வு உண்டாவதன் அருமையை விரித்தோதி யருளுகின்றார்.
யானையினும் பெரிய பிறவியும், எறும்பினும் சிறிய
பிறவியும் உளவாயினும் பெருமை சிறுமைகளின் எல்லைக்கு அவற்றைக்கூறும் வழக்குப் பற்றி அங்ஙனமே ஓதியருளினார். ஊனம் - குறைவு. `குறைவில்லாத` என்றது, `பலவாகிய` என்பதனைக் குறித்தது.
யோனி - பிறப்பின் வகைகள். இவ் வடசொல் முதற்கண் இகரம் பெற்று வந்தது. ஏழுவகைப் பிறப்பிலும் உள்ள யோனி பேதம் எண்பத்து நான்கு நூறாயிரம் என்பதை,
அண்டசம் சுவேத சங்கள்
உற்பிச்சம் சராயு சத்தோ
டெண்டரு நால்எண் பத்து
நான்குநூ றாயி ரத்தால்
உண்டுபல் யோனி எல்லாம்
ஒழித்துமா னுடத்து தித்தல்
கண்டிடிற் கடலைக் கையால்
நீந்தினன் காரி யங்காண்.
என்னும் சிவஞான சித்தியிலும் (சூ, 2. 89),
தோற்றியிடும் அண்டங்கள் சுவேதசங்கள் பாரில் துதைந்துவரும் உற்பீசம் சராயுசங்கள் நான்கில்
ஊற்றமிகு தாபரங்கள் பத்தொன்ப தென்றும்
ஊர்வபதி னைந்தமரர் பதினொன்றொ டுலவா
மாற்றருநீர் உறைவனநற் பறவைகள்நாற் காலி
மன்னியிடும் பப்பத்து மானுடர்ஒன் பதுமா
ஏற்றிஒரு தொகையதனில் இயம்புவர்கள் யோனி
எண்பத்து நான்குநூ றாயிரமென் றெடுத்தே.
என்னும் சிவப்பிரகாசத்திலும் (47) காண்க. எண்பத்து நான்கிற்குச் சிவப்பிரகாசத்துட் கூறப்பட்ட வகையை,
ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானுடம்
நீர்ப்பறவை நாற்கால்ஓர் பப்பத்துச் - சீரிய
பந்தமாந் தேவர் பதினால் அயன்படைத்த
அந்தமில் சீர்த் தாவரம்நா லைந்து.
என (குறள்.62 - பரிமேலழகர் உரை)ச் சிறிது வேறுபடவும் கூறுவர் என்பது தோன்றவே சிவப்பிரகாசத்துள் `ஒரு தொகையதனில் இயம்புவர்`` என்று அருளினார் போலும்!
``யோனியினுள்`` என்றதன்பின், `செலுத்தும்` என்பது தொகுத்தலாய் நின்றது. `வினையினின்றும் பிழைத்தும்` என்க. பிழைத்தல் - தப்புதல். `` பிழைத்தும்`` என வரும் உம்மைகள் யாவும், வினைக்கண் வந்த எண்ணிடைச் சொற்கள். உயிர்கட்கு இறையுணர்வு உண்டாதற்கு உளவாகும் இடையூறுகள் பலவற்றையும் இங்கு முறைமைப்பட வைத்து அருளிச் செய்கின்றாராதலின், ``பிழைத்தும்`` என வருவனவற்றின் பின்னெல்லாம், `அதன்பின்` என்பது வருவித்து அம் முறைமை தோன்ற உரைக்க. ``பிழைத்து`` என வருவன பலவும், ``உண்டாகி`` (அடி.42) என்பதனோடே முடியும்.
போற்றித் திருஅகவல் - `போற்றி` என்னும் சொல்லையுடைய திரு அகவல். `போற்றுதலை உடைய` எனப் பொருள் மேல் வைத்துரைப்பின், அஃது ஏனைய பகுதிகட்கும் பிறவற்றிற்கும் பொதுவாதல் அறிக. இத் திருப்பாட்டில் இறைவனை அடிகள் பலபெயர்க் கோவையாற் போற்றுகின்றார்.
இதற்கு, `சகத்தின் உற்பத்தி` என முன்னோர் உரைத்த குறிப்பு, முதற் போற்றி வரையில் உள்ள பகுதி பற்றியே கூறியதாம். அங்ஙனம் கூறும் வழியும், `உலகம்` எனப் பொருள்தரும், `சகம்` என்பது, மக்களுலகையே குறித்துக் கூறியதாம்.
1-10. இதனுள் முதல் மூன்று அடிகளில் எண்ணலங்காரம் வந்தது, திருமால் காத்தற் கடவுளாதலின், போகத்தைத் தரும் கடவுளாவன். அதனால், ஐம்புலன்களும் நிரம்பக் கிடைத்தற் பொருட்டுப் போற்றப்படுவனாயினன். ஆகவே, இங்கு ``முனிவர்`` என்றது, சுவர்க்க இன்பத்தை வேண்டித் தவம் செய்வோரையாயிற்று. மலர - நிரம்ப உளவாதற் பொருட்டு. கதிர்முடி - மணிமுடி. கடவுளரிற் சிறந்தமையின், மாலை, `திருமால்` என்ப. அவன் கடவுளரிற் சிறந்தோனாதலை,
``தேவில் திருமால் எனச் சிறந்த``
என்னும் திருவள்ளுவ மாலையானும் (36) அறிக. இதில் `தே` என்பது அஃறிணைச் சொல்லாய், பன்மைமேல் நின்றது. `புருடோத்தமன்` என்றலும் இதுபற்றி. நிலங்கடந்த (உலகத்தை அளந்த) அண்ணல் என்பார், ``கதிர்முடி நெடுமால்`` என்று அருளினார். பிரமன், மால் இருவரும் சிவசோதியினது அடி, முடி, இரண்டையுங்காணவே புகுந்தனராதலின்,``அடி முடி அறியும் ஆதரவு`` என்றார். ஆதரவு - விருப்பம். அது, பகுதிப் பொருள் விகுதி. இன், ஏதுப்பொருட்கண் வந்த ஐந்தாம் உருபு.
கடுமுரண் - மிக்க வலிமை. ஏனம் - பன்றி. முன் கலந்து - நிலத்தைச் சார்ந்து. ``முன்`` என்றது ஆகுபெயராய், முன்னே காணப்படும் நிலத்தைக் குறித்தது. ஆகாயம், அண்ணாந்து நோக்கிய வழியே காணப்படுமாதலின், அது முன்னர்க் காணப்படுவதன்றா யிற்று, ஏழ்தலம், கீழ் உலகம் ஏழு; அவை `அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதலம்` என்பன. உருவுதல் - கடந்து போதல். எய்த்தது, பிரகிருதியுடம்பு உடைமையின், பாதலத்திற்குக் கீழ்ச் செல்ல இயலாமையால் என்க. எய்த்தல் - இளைத்தல் ``ஊழி முதல்வன்`` என்றது, `காலத்தை நடத்துபவன்` என்றவாறு. எல்லாப் பொருளும் காலத்திற்கு உட்பட்டு நிற்றலின், `காலத்திற்கு முதல்வன்` என்றது, `எல்லாப் பொருட்கும் முதல்வன்` என்றவாறாம்.
சயசய - நீ வெல்க! வெல்க! வழுத்துதல் - துதித்தல். ``அடி இணைகள்`` என்றதனை, `இணை அடிகள்` என மாற்றிக்கொள்க. இணை அடிகள் சிவபிரானுடையன என்பது, திருமால் தேடிக் காணாத வரலாறு கூறியவதனால் பெறப் பட்டது.
``எளிது`` என்ற ஒருமை அப்பண்பின் மேல் நின்று ஆகு பெயராயிற்று. ``ஆய்`` என்ற வினையெச்சம் காரணப் பொருட் டாய்,`தாம் பிடித்தது சலியா`` (அடி.59) என்பது முதலியவற்றில் வரும் `சலியா` முதலிய வினைகளோடு இயைந்து நின்றது. வார் - நீண்ட.
11-12. இது முதலாகவரும் நாற்பத்தொன்பது அடிகளால் உயிர்கட்கு இறையுணர்வு உண்டாவதன் அருமையை விரித்தோதி யருளுகின்றார்.
யானையினும் பெரிய பிறவியும், எறும்பினும் சிறிய
பிறவியும் உளவாயினும் பெருமை சிறுமைகளின் எல்லைக்கு அவற்றைக்கூறும் வழக்குப் பற்றி அங்ஙனமே ஓதியருளினார். ஊனம் - குறைவு. `குறைவில்லாத` என்றது, `பலவாகிய` என்பதனைக் குறித்தது.
யோனி - பிறப்பின் வகைகள். இவ் வடசொல் முதற்கண் இகரம் பெற்று வந்தது. ஏழுவகைப் பிறப்பிலும் உள்ள யோனி பேதம் எண்பத்து நான்கு நூறாயிரம் என்பதை,
அண்டசம் சுவேத சங்கள்
உற்பிச்சம் சராயு சத்தோ
டெண்டரு நால்எண் பத்து
நான்குநூ றாயி ரத்தால்
உண்டுபல் யோனி எல்லாம்
ஒழித்துமா னுடத்து தித்தல்
கண்டிடிற் கடலைக் கையால்
நீந்தினன் காரி யங்காண்.
என்னும் சிவஞான சித்தியிலும் (சூ, 2. 89),
தோற்றியிடும் அண்டங்கள் சுவேதசங்கள் பாரில் துதைந்துவரும் உற்பீசம் சராயுசங்கள் நான்கில்
ஊற்றமிகு தாபரங்கள் பத்தொன்ப தென்றும்
ஊர்வபதி னைந்தமரர் பதினொன்றொ டுலவா
மாற்றருநீர் உறைவனநற் பறவைகள்நாற் காலி
மன்னியிடும் பப்பத்து மானுடர்ஒன் பதுமா
ஏற்றிஒரு தொகையதனில் இயம்புவர்கள் யோனி
எண்பத்து நான்குநூ றாயிரமென் றெடுத்தே.
என்னும் சிவப்பிரகாசத்திலும் (47) காண்க. எண்பத்து நான்கிற்குச் சிவப்பிரகாசத்துட் கூறப்பட்ட வகையை,
ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானுடம்
நீர்ப்பறவை நாற்கால்ஓர் பப்பத்துச் - சீரிய
பந்தமாந் தேவர் பதினால் அயன்படைத்த
அந்தமில் சீர்த் தாவரம்நா லைந்து.
என (குறள்.62 - பரிமேலழகர் உரை)ச் சிறிது வேறுபடவும் கூறுவர் என்பது தோன்றவே சிவப்பிரகாசத்துள் `ஒரு தொகையதனில் இயம்புவர்`` என்று அருளினார் போலும்!
``யோனியினுள்`` என்றதன்பின், `செலுத்தும்` என்பது தொகுத்தலாய் நின்றது. `வினையினின்றும் பிழைத்தும்` என்க. பிழைத்தல் - தப்புதல். `` பிழைத்தும்`` என வரும் உம்மைகள் யாவும், வினைக்கண் வந்த எண்ணிடைச் சொற்கள். உயிர்கட்கு இறையுணர்வு உண்டாதற்கு உளவாகும் இடையூறுகள் பலவற்றையும் இங்கு முறைமைப்பட வைத்து அருளிச் செய்கின்றாராதலின், ``பிழைத்தும்`` என வருவனவற்றின் பின்னெல்லாம், `அதன்பின்` என்பது வருவித்து அம் முறைமை தோன்ற உரைக்க. ``பிழைத்து`` என வருவன பலவும், ``உண்டாகி`` (அடி.42) என்பதனோடே முடியும்.
13-14. உயிர்கள் நிலவுலகில் கருப்பையினுள் தோன்றும் பிறப்பிற்புகுங்கால், முதற்கண் தான் நின்ற நுண்ணுடம்போடு உணவு வழியாக ஆண் உடம்பிற் புகுந்து தங்கி, பின் அதனது வெண்ணீர் வழியாகப் பெண்ணினது வயிற்றில் உள்ள கருப்பையினுட் புகுந்து புல் நுனியில் நிற்கும் பனியினது சிறு திவலையினும் சிறிதாகிய நுண்டுளியளவில் கருவாகி நின்று,பின் சிறிது சிறிதாக வளர்ந்து நிரம்பும் பருவுடம்புடனே பிறக்கும். பெண்ணினது வயிற்றில் நுண்டுளியளவில் நின்று வளர்ந்து பிறத்தற்கு இடையே அதற்கு உண்டாகும் அழிவு நிலைகள் எத்துணையோ உளவாம். மக்களாய்ப் பிறக்கும் உயிர்களும், அத்துணை அழிவுகட்கும் தப்பியே பிறத்தல் வேண்டும் என்பதனை இது முதற்பதின்மூன்று அடிகளில் அருளிச் செய்கின்றார்.
உதரம் - வயிறு; அஃது இங்கு அதனிடத்துள்ள கருப்பையைக் குறித்தது. ஈனம் இல் - குன்றுதல் இல்லாத; என்றது, `பலவான` என்றபடி. எனவே அவற்றின் செருவிற்குத் தப்புதலின் அருமை குறித்தவாறாயிற்று. ``கிருமி`` என்றது, அக்கருவை உண்ண விரையும் அவற்றை. அவற்றினின்றும் தப்புதல், அவ்விடத்து அக்கிருமிகளை அழித்தொழிக்கும் நற்பொருள்களாலேயாம். அப்பொருள்கள் அவ்விடத்து உளவாதல் அக்கருவிடத்து உள்ள உயிரது நல்வினை யானேயாம் ஆதலின்; `அவ்வாற்றான் அவ்வுயிர் அவற்றது செருவி னின்றும் பிழைத்தும்` என்று அருளினார்.
15. ஒருமதி - ஒரு திங்கள் அளவில், ஈண்டு, `திங்கள்` என்பது, `சாந்திரமானம்` எனப்படும் மதியளவாகிய இருபத்தேழுநாட் காலமே யாம்; அது, `திங்கள்` என்பதனானே இனிது பெறப்படும். தான்றி - தான்றிக் காய்; என்றது, அவ்வளவினதாகிய வடிவத்தைக் குறித்தது. `தான்றியின் கண்` என ஏழாம் உருபு விரித்து, தான்றிக்காய் அளவினதாய வடிவம் பெறும் அளவில்` என உரைக்க. ``இருமை`` என்றது, இங்கு, சிதைவுறும் தன்மையைக் குறித்தது. இம் மெல்லிய நிலையிலே தாயது அறியாமை முதலிய பற்பல காரணங்களால் கருச்சிதைந்தொழிதல் எளிதாதலின்,` அதனின்றும் தப்பியும்` என்றார். இந்நிலையில் தப்புதல், தாயது வயிற்றில் நின்று அக்கருவை ஊட்டி வலியுற நிறுத்தும் நற்பொருள்களாலேயாம்.
16. இருமதி விளைவின் - இரண்டு திங்கள் என்னும் அளவில் உண்டாகின்ற வளர்ச்சிக்கண். ஒருமையின் பிழைத்தும் - ஒரு திங்கள் அளவில் இருந்தவாறே இருத்தலினின்றும் தப்பியும்; என்றது, முதற்றிங்களில் தான்றிக்காய் அளவாய் முட்டைபோற் பருத்து நின்ற கரு, இரண்டாந் திங்கள் முதலாக உறுப்புக்கள் பிரிந்து தோன்றும் நிலையைப்பெற்று வளர்ச்சியுறுமாகலானும், அந்நிலையில் அக்கரு அங்ஙனம் வளர்தற்கு வேண்டும் பொருள்கள் அதற்குக் கிடையா தொழியின், முதற்றிங்களில் நின்ற நிலையிலே நின்று கெட்டொழியு மாகலானும், `அங்ஙனம் கெடுதலினின்றும் தப்பியும்` என்றவாறு.
புல்நுனிமேல் பனித்திவலையினும் சிறிய நுண்டுளியாய் நிற்குமதுவே வித்தாயினும், நிலத்தின் கட்பதிந்து நீர் முதலியவற்றால் பதனெய்திய விதையே பின் முளையைத் தோற்றுவித்தல்போல, அந்நுண்டுளி ஒரு திங்கள் காறும் பருத்துத் தான்றிக்காயளவினதாய் நின்றபின்பே பின்னர்க் கழுத்து, தலை முதலிய உறுப்புக்களைத் தோற்றுவிக்குமாதலின், அதுகாறும் உள்ள நிலையை வித்தெனவே கொண்டு, பின்னர் இரண்டாந் திங்கள் முதலாக உறுப்பு முதலியவை தோன்றப்பெறும் நிலைகளையே, `விளைவு` என்று அருளினார். ஒருமை - ஒன்றன் தன்மை. `ஒன்று` என்று முன்னர் ஒருதிங்களாகிய காலத்தைக் குறித்து, பின்னர் அக்காலத்தில் நிகழும் நிகழ்ச்சியைக் குறித்தது.
17. மும்மதிதன்னுள் - மூன்று திங்கள் என்னும் அளவில். மதம் - மயக்கம். சூல்கொண்ட மகளிர் மூன்றாந் திங்களில் பித்தம் மிகப்பெற்று உணவேலாது மயக்கமுற்றுக் கிடக்கும் நிலையை, `மயற்கை` என வழங்குதல் பலரும் அறிந்ததாகலின் அதனை `அம்மதம்` எனப் பண்டறிசுட்டாற் சுட்டிப் போயினார். இம் மயற்கைக் காலத்தில் மகளிர், கருவைக் காத்துக்கொள்ளுதலில் கருத்தின்றி, புளிப்புப் பண்டங்களையே யன்றி மண்ணை உண்ணுதல் முதலிய வற்றையும் செய்வர், ஆதலின், அவற்றிற்கெல்லாம் அக் கரு, தப்பி வளர்தல் வேண்டும் என்று அருளிச் செய்தார். கருவுற்ற மகளிர் மண்ணை விரும்பியுண்டல்,
``1வயவுறு மகளிர் வேட்டுணி னல்லது
பகைவ ருண்ணா வருமண் ணினையே`` -புறநானூறு, 20
எனக் கூறப்பட்டதும் காண்க.
18. ஈரிரு திங்கள் - நான்கு திங்களளவில். பேரிருள் - யாதும் அறியாமை. மூன்றாந் திங்களில் மயற்கையுற்ற மகளிர், நான்காந் திங்களில் அம்மயற்கை நீங்கப் பெறுவர். அந் நிலையில் முன்னர் உற்று நின்ற கரு மயற்கைக் காலத்துக் கெட்டொழியாது நிலைபெற்றதோ, அன்றி நிலைபெறாதே கெட்டொழிந்ததோ என எழும் ஐயத்தின்கண் யாதும் துணியப்படுதற்கு வழியின்றி நிற்குமாதலின், அந் நிலையையே, ``பேரிருள்`` என்றார். எனவே, அந்நிலையிலும் அக்கரு நிலைபெறாதொழிதல் கூடுமாகலின், `அவ்விடத்தும் கெடாது நிலை பெற்று` என்பார், `ஈரிரு திங்களிற் பேரிருள் பிழைத்தும்` என்றார்.
19. ஐந்து, அஞ்சு என மருவிற்று. அஞ்சு திங்கள் - ஐந்து திங்களின் என்னும் அளவில். முஞ்சுதல் - சாதல். தாயது வயிற்றினின்றும் போந்து நிலத்தையடைதற்குப் பத்துத் திங்களை எல்லையாக உடைய கருப்பைக் குழவி, அதனிற் பாதியளவினதாகிய ஐந்து திங்கள் காறும் பெரும்பான்மையும் நிலையாமையையே உடையதாம். அதனுள்ளும், மயற்கைக் காலத்து அழிந்தொழியாது நிலைபெற்று நான்காந் திங்களில் மெலிந்துநிற்கும் கருக்குழவியை, ஐந்தாந் திங்களிற் பல்லாற்றானும் குறிக்கொண்டு காவாதொழியின், வலுப்பெற்று முதிர மாட்டாது அழிந்தொழியும்; அதனால், ஐந்தாந் திங்களைக் கரு அழியுங் காலமாக அருளினார்.
20. ஆறு திங்களின் - ஆறு திங்கள் என்னும் அளவில். நூறு அலர் பிழைத்தும் - கருப்பையைக் கிழிக்கின்ற பூவினது செயலுக்குத் தப்பியும். அலர் - பூ. மரவகைகளிடத்துக் காய் தோன்றுதற்கு வழியாய் நிற்கும் பூப்போல, கருப்பையுள் கருவை ஏற்று ஈனும் பிறப்புக்களது கருப்பை யினுள், தாயினது செந்நீரில் குமிழிபோலத் தோன்றுவதொரு பொருள் உண்டு. அதற்கும் பூவைப்போல அரும்புதல், மலர்தல், கூம்புதல்கள் உள. அதனது மலர்ச்சிக் காலத்தில் பெண்ணிற்கு ஆணோடு கூட்டம் உண்டாயின், கரு வாய்க்கும். அக்காலத்தன்றி, அரும்பற் காலத்தும், கூம்பற் காலத்தும் உளவாம் கூட்டத்தாற் கருவுண்டாதல் இல்லை. கருவை ஏற்றலின்றி வாளா கூம்பிய பூ, சின்னாளில் கெட்டு வெளிப் போந்தொழியும், தாயது வயிற்றிற் பூவுண்டாயினமை அது புறத்துப் போந்துழியே அறியப்படுதலின், அதனையே, `பூப்பு` என வழங்குப முதற் பூ, கருவை ஏற்றலின்றி அழியற்பாலதே; ஏனெனின், அது கரு வந்தடைதற்கு வாயிலில்லாத காலத்தே உண்டாவது. அது கெட்டபின், தான் உள்ளே நில்லாது வெளிப்போதுங்கால், வாயிலை உண்டாக்கிப் போதருதலின், பின்னர்த் தோன்றும் பூக்கள் கருப் பெறுதற்கு உரியன வாம். முதற் பூத் தான் பயனின்றி ஒழியினும், பின்னர்த் தோன்றுவன அனைத்தும் பயனுடையவாதற்கு ஏதுவாய் வீழ்தலின், அவ் வீழ்ச்சியையே, சிறப்பாக, `பூப்பு` எனக் குறிப்பர். ஒரு பூ அரும்பி மலர்ந்து நிற்கும் காலம், முன்னைப் பூ வீழ்ந்த நாள் முதலாகப் பதினைந்து நாள் எல்லை என்பதும், அதன் பின்னர் அது கூம்புதல் உளதாம் என்பதும்,
``பூப்பின் புறப்பா டீராறு நாளும்``
என்பதனான் அறியப்படும் (தொல் - பொருள்; 185). `பூ வீழ்ந்த நாள்முதலாக மூன்று நாட்கள் பூப்பின் அகப்பாட்டு நாள்களாம்` என்பதனை அச்சூத்திர உரைகளான் அறிக.
கருப்பையுடைய பிறப்புக்களில் மக்கட் பிறப்பிலும் மாக்களுள் ஒருசார் பிறப்பிலும் உள்ள பெண்களது கருப்பையில் ஒரு முறையில் பெரும்பாலும் ஒரு பூவும் சிறுபான்மை சில முறைகளில் ஒன்றற்கு மேற்பட்ட பூக்களும் தோன்றும்; ஆதலின், அவற்றால் ஓர் ஈற்றில் பெரும்பான்மையும் ஒரு குழவியும், சிறுபான்மை ஒன்றற்கு மேற்பட்ட குழவிகளும் பிறக்கும்.
மாக்களுள் ஒரு சாரனவற்றுப் பெண்களது கருப்பையில் ஒருமுறையில் பல பூக்கள் தோன்றுதலின், அவற்றிடமாக ஓர் ஈற்றில் பல குழவிகள் பிறப்பனவாம். ஆகவே, கருப்பையுள் தோன்றும் கருவிற்கும், மரவகைகளிற்போல, அக்கருப்பையினுள் அரும்பி மலரும் பூவே காரணம் என்பது புலப்படும்.
இத்தகைய பூ, மக்கட் பிறப்பின் மகளிரிடத்துக் கருவை ஏற்றுக் குழவி உருவத்தைப் பெறத்தொடங்குவது, அஃது ஐந்தாந் திங்களிற் கெடாது வலியுற்று நின்ற பின்னரேயாம். அஃது அங்ஙனம் உருப்பெற்று வளர்கின்றுழி. அது கருப்பையைத் தாக்குதல் உளதாம். அக்காலத்து அத்தாக்குதலால் ஒரோவழி, கருப்பை கிழிந்து, அவ்வுருவம் அரையும் குறையுமாய் நிலத்தில் வீழ்தலும் உண்டு. அந் நிலையினும் குழவி தப்புதல் வேண்டும் என்பதனையே, ``ஆறு திங்களின் நூறலர் பிழைத்தும்`` என்று அருளிச்செய்தார். மக்களுள் மலடரல்லராயும், மகவை உருவோடு பெறும் நல்வினை இல்லாத மகளிர் தம் கருவை இழத்தல், பெரும்பான்மையும் இத்தன்மைத்தாய ஆறாந்திங்களிலேயாம். ஆதலின், அதனைக் கடந்த பின்னரே, சூல் காப்பு முதலிய சடங்குகளைச் செய்தல் முறைமையாயிற்று. நூறுதல் - சிதைத்தல். ``அலர்`` என்றது ஆகு பெயராய் அதனது தொழிலைக் குறித்தது. கருவை ஏற்ற பூ, காய் எனப்படுதல், குழவி உருவம் நிரம்பப் பெற்ற ஏழாந் திங்களிலே யாதலின், ஆறாந்திங்களில் நின்ற உருவத் தினை, ``பூ`` (அலர்) என்றே அருளினார்.
21. ஏழு திங்களில் - ஏழென்னும் திங்களளவில். புவி - நிலம். அஃது ஆகுபெயராய், அதனுள் தோன்றும் பிறப்புக்களை உணர்த் திற்று. கரு ஆறாந் திங்களில் வீழாதே நிற்பினும், குழவி நன்முறையில் வளராதொழியின், மக்கட்டன்மை நிரம்பப்பெறாது, ஏழாந் திங்களில் மாக்கள் போலப் பிறப்பதாம். அப்பிறப்பு வகைகளை,
``சிறப்பில் சிதடும், உறுப்பில் பிண்டமும்,
கூனும், குறளும், ஊமும், செவிடும்,
மாவும் மருளும்``
என வந்த புறப்பாட்டுள் (28) `உறுப்பில் பிண்டம்` என்றது ஒழிந்தன எனக் கொள்க. இவ்வாறெல்லாம் பிறத்தல் மக்களுலகில் தொன்று தொட்டே காணப்படுவது என்பதனை,

``................ இவையெல்லாம்
பேதைமை யல்ல தூதிய மில்லென
முன்னும் அறிந்தோர் கூறினர்``
என அப்பாட்டுட் கிளந்தோதியவாற்றான் அறிக.
இனி மக்கள் வயிற்றினும் ஒரோவொருகால் மாக்களும் பாம்பு போலும் சில ஊர்வனவும், பிறவும் பிறத்தல் உள என்ப; அவை யெல்லாம் ஏழாந்திங்களில் குழவியது வளர்ச்சிக் குறைபாட்டால் நிகழ்வனவே யாதலின், மானுடப் பிறப்பினுட் புகுந்தும், தீவினை வயத்தால் அவ்வாறெல்லாம் ஆகாது தப்புதல் வேண்டும் என்ப தனையே, ``தாழ்புவி பிழைத்தும்`` என்று அருளினார், இஃது உண்டாகாமைப் பொருட்டும் ஏழாந் திங்களிற் கடவுட் பராவலை, அறிந்தோர் செய்ப.
இனி, மக்கட் குழவி பிறப்பது பெரும்பான்மையும் பத்தாம் திங்களிலேயாயினும், சிறுபான்மை அதற்கு முற்பட்ட ஒன்பது, எட்டு ஏழென்னும் திங்களிலும் பிறத்தல் நிகழ்ச்சிகள் உள. அவை ஒன்றினொ ன்று சிறுபான்மைத்தாக நிகழும். அவற்றுள் ஏழாம் திங்களிற் பிறக்குங் குழவி உயிரொடு பிறத்தல் சிறுபான்மை. உயிரொடு பிறந்த வழியும் பின்னர் நெடிது வாழ்தல் மிகச் சிறுபான்மை. அதனால், அங்ஙனம் ஏழாம் திங்களிற் பிறத்தலினும் தப்புதல் வேண்டும் என்பதனையே இவ்வடியுள் அருளினார் எனக் கொண்டு, அதற்கேற்ப `தாழ்புவி` என்றதனை `புவிதாழ்` என பின்முன்னாக மாற்றி ஏழாந் திங்களிற் றானே நிலத்தில் வந்து பிறத்தலினின்றுந் தப்பியும்` என உரைத்தலு மாம். இவ்விரண்டனையும் இவ்வடியின் பொருளாகக் கொள்க.
22. எட்டுத் திங்களில் - எட்டென்னும் திங்களளவில். கட்டம் - மெய்வருத்தம். அஃதாவது, ஏழாம் திங்களில் உருநிரம்பப் பெற்ற குழவி, அவ்வுருவம் நன்கு முதிர்ந்து வளரும் வளர்ச்சியால் கருப்பையினுட் கட்டுண்டு கிடக்கமாட்டாது வருந்தும் வருத்தமாம். இக்காலத்தில் அது, அக்கருப்பையோடே அசைவுறுதலும் உண்டு.
23. ``ஒன்பது``, ஆகுபெயர்; `ஒன்பது திங்கள் என்னும் அளவில்` என்றபடி. துன்பம் - மனக்கவலை. எட்டாம் திங்களில் நன்கு முதிர்ந்து வளர்ச்சியுற்ற குழவி, ஒன்பதாம் திங்களில் கருப்பையுட் கட்டுண்டு கிடக்கும் நிலையை உணர்ந்து ` இனி இதனினின்றும் புறப்படுமாறு எவ்வாறு` என நினைந்து கவலையுறும். `அக்காலை அஃது இனிப் பிறவி வாராமல் அருள வேண்டும் என இறைவனைக் கைகூப்பி வேண்டும்` எனவும் சொல்லுப. இவ் எட்டு ஒன்பதாம் திங்களில் உள வாகும் உடல் வருத்தம், மன வருத்தம் என்பவற்றைத் தாங்கும் உடல் வலிமையும், மனவலியும் இல்லாததாய் இருப்பின், குழவி அக் காலத்தே இறந்துபடுமாகலின், அவற்றினின்றுந் தப்புதல் வேண்டும் என்பார், `` எட்டுத் திங்களிற் கட்டமும் பிழைத்தும்`` என்றும் ``ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்`` என்றும் அருளினார். ``கட்டமும் துன்பமும்` என்ற உம்மைகள் எச்சப் பொருள.
24-25. தக்க தச மதி - குழவி குறையின்றிப் பிறப்பதற்கு ஏற்புடைத்தாய பத்துத் திங்கள் என்னும் அளவில் ``தாயொடு`` என்ற ஒடு, எண்ணொடு. துக்க சாகாரத் துயர் - துக்கமாகிய. கடல்போலும் துயர். `துக்கம், துயர் ` என்பன ஒரு பொருளவாயினும், அடையடுத்து வந்தமையின், சிறப்பும் பொதுவுமாய் இருபெயரொட்டாய் நின்றன. குழவி பிறக்குங்கால் தாயும், குழவியும் படும் துன்பம் பெருந்துன்ப மாதல் வெளிப்படை. குழவிக்கும் தாய்க்கும் உளவாந் துன்பங்கள், குழவி தான் வெளிப்போதற்குச் செய்யும் முயற்சியால் வருவன
வாம். தாய் தனக்கு உளதாய துன்பமிகுதியால் குழவி இனிது பிறத்தற்கு ஏற்ப நில்லாமையானாதல், குழவி தனக்கு உண்டாய துன்ப மிகுதியால் வெளிப்போதும் முயற்சியிற் சோர்வுறுதலானாதல் குழவி பிறவாது வயிற்றிலே இறத்தலும் உண்டு.
அதனால், அவ்விருவகை இன்னலினும் தப்புதல் வேண்டு மாகலின், ``தாயொடு தான்படுந் துக்கசாகரத் துயரிடைப் பிழைத்தும்`` என்று அருளினார்.
26-27. `ஆண்டுகள் தோறும்`` என்றதனை, `` இருத்தியும்`` என்றதன் பின்னர்க் கூட்டுக. `பிறந்த பின்னர், தாயர் முதலியோர் தம்பால் நெருங்க அணைத்தும் ஓரிடத்தே இருக்க வைத்தும் ஆண்டு களின் வளர்ச்சிதோறும் அவர் செய்யும் எத்துணையோ பல செயல் களினின்றும் தப்பியும்` என்க.
`ஈண்டுவித்தும்` என்பது, தொகுத்தலாயிற்று. எனைப் பலவாவன, பாலூட்டல், நீராட்டல், மருந்தூட்டல், சீராட்டல் முதலியன, இவை குழவிக்கு நலஞ்செய்யுமாயினும், காலம் அளவு முதலியன ஒவ்வாதவழித் தீங்கு பயக்குமாதலானும், அவ்வொவ்வாமையை அவர் அறிதல் அரிதாகலானும், அவற்றினும் தப்புதல் வேண்டும் என்றார்.
28-29. மேலெல்லாம், உயிர், மக்கட் பிறப்பிற் புக்க வழியும் இனிது பிறவாதவாறும், பிறந்தபின் நன்கு வளராதவாறும் நிகழும் இடையூறுகளினின்றும் தப்புதல் கூறினார்; இனி, வளர்ந்த பின்னரும் உள்ளம் தெய்வத்தின் பாலன்றிப் பிறவற்றிற் செல்லுதற்கு வாயிலாவன வற்றினின்றுந் தப்புதல் கூறுகின்றார்.
``வேலை`` என்றதை, ``காலை``, ``கடும்பகல்`` என்ற வற்றிற்குங் கூட்டுக. வேலை - பொழுது, மலம் - வயிற்றில் உள்ள மலத் தால் உளதாம் துன்பம். இது காலைக்கண் பெரிதாம், பசி - பசித் துன்பம், நிசி - இரவு. நித்திரை - உறக்கம். இது நன்றாயினும் தெய்வத்தை நினைத்தற்கு இடங்கொடாது, தானே வந்து பற்றுதலின், தடையாயிற்று. `நித்திரை பிழைத்தும், யாத்திரை பிழைத்தும்` எனத் தனித்தனி கூட்டுக. நாள்தோறும் தவறாது நிகழும் மலம் முதலிய மூன்றனையும் ஒருங்கெண்ணி, `அவற்றிற் பிழைத்தும்` எனவும், இடையீடுற்று வேண்டுங்காலத்து நிகழும் யாத்திரையை வேறு வைத்து, ``யாத்திரை பிழைத்தும்`` எனவும் அருளினார் என்க. யாத்திரை - வழிச் செலவு. மலம், ஆகுபெயர்.
30-35. இப் பகுதியுள் மகளிரது அழகு ஆடவரது மனத்தைக் கொள்ளை கொள்ளுமாற்றினை விரித்தருளிச் செய்கின்றார். சிறப்பு பற்றி ஆடவரது உள்ளத்தையே கூறினாராயினும், இதனானே ஆடவரது அழகும் பெண்டிரது உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுதலும் பெறப்படுவதேயாம், கார்மயில் - கார்காலத்து மயில், கார்காலத்தில் மயில் மேகத்தைக் கண்டு களித்தலும், அக் களிப்பினால் தோகையை விரித்து அழகுற ஆடுதலும் இயல்பு. ஒருங்கிய சாயல் - ஒழுங்கு பட்ட தோற்றம். பிற்கால வழக்கில் சாயல் என்னும் சொல் தோற்றம் எனப் பொருள் தரும் என்க. `மயில்போலும் சாயல்` என்க. நெருங்கி - ஒன்றை ஒன்று அணுகி. மதர்த்து - விம்மி. கதிர்த்து - அழகு மிக்கு, `முன்`என்றதனை, ``நிமிர்ந்து`` என்றதற்கு முன்னேகூட்டுக. பணைத்து - பருத்து. `இடை எய்த்து வருந்த` என்க. வருந்தல் பாரம் தாங்கமாட்டாமையானாம். எழுந்து - வளர்ச்சியுற்று. புடைபரந்து - மார்பிடம் எங்கும் பரவி. ``ஈர்க்கிடை போகா இளமுலை`` என்பது. பொருநராற்றுப் படையுள்ளும் (36) வந்தமை காண்க. `குழலையும், வாயையும், நகையையும், சாயலையும், முலையையும் உடைய மாதர் என்க. கூர்த்த - கூர்மை பெற்ற, நயனம் - கண். பிற உறுப்புக்களும் உள்ளத்தைக் கவருமாயினும், அவை நின்ற நிலையில் நிற்றலன்றிக் கண்போலப் புடைபெயர்ந்து அகப் படுத்த மாட்டாமையின் அக் கவர்ச்சிகள் சிறியவாக, கண் அவ்வாறன்றிப் புடைபெயர்ந்து அதனை அகப்படுத்தலின் அக்கவர்ச்சி பெரிதாதல்பற்றி அதனையே உள்ளத்தைக் கொள்ளை கொள்வதாக அருளினார்.
36-37. பித்து,`பித்தம்` என நின்று, வேற்றுமைக்கன் இறுதி யொற்றுக் கெட்டது. உலகர் - உலக வாழ்க்கையையன்றிப் பிறி தொன்றை நோக்காதவர். அவ்வியல்பு அவரறிவின் கண் உள்ள மயக்கத்தாலாயிற்றாகலின், அதனை, `பித்து` என்றார். பெருந்துறைப் பரப்பு - பெரியவாகிய துறைகளையுடைய நீர்ப்பரப்பு. `பரப்பு` என்றது, வாழ்க்கையை, அதுதான், அரசாட்சியும் அமைச்சு முதலிய அரச வினைகளும், உழவும் வாணிபமும் முதலாகப் பற்பல துறை களையுடைமையின் `பெருந்துறைப் பரப்பு` என்றார். `துறை, பரப்பு` என்றவை குறிப்பு உருவகம். பெருமை, இங்கு, பன்மை குறித்தது. `பரப்பினுள் ` என்றதன் பின்,`நின்று கலக்கும்` என்பது வருவிக்க. `வாழ்க்கையாகிய நீர்ப்பரப்பினுள் நின்று அதனைக் கலக்கும் மத யானை என்று சொல்லத்தக்க ஆைu2970?` என்க. வாழ்க்கைக்கண் உளதாம் ஆசையாவது, பல தொழில் துறைகளில் நிற்குங்கால் அவற்றை இவை உடலோம்பல் மாத்திரைக்கே ஆவன` என்று அறிந்து புறத்தால் தழுவி, அகத்தில் பற்றின்றி யொழுகாது, அவையே உயிராகக் கருதி, அவற்றின்கண் மேன்மேல் உயர விரும்புதல். அவ் விருப்பம், அறிவை அறத்தையும் வீட்டையும் நோக்கவொட்டாது மயக்கி, அதனானே, வாழ்க்கைத் துறைகளிலும் பொய், களவு முதலிய பலவற்றைப் புரிந்து ஒழுகச் செய்தலின் அதனை நீர்ப்பரப்பைக் கலக்கும் மதயானையாக உருவகம் செய்தார் `அவாவிடை`` என்ற ஏழனுருபை ஐந்தனுருபாகத் திரிக்க.
38. `கல்வி கரையில`` (நாலடி - 135.) என்றபடி, கல்வி, அள வில்லாத துறைகளையுடைத்தாய், ஒவ்வொரு துறையும் மிகப் பரந்து கிடப்ப நிற்றலானும், அவை அனைத்திலும் வேட்கை செலுத்தின், நிரம்பப் பயன் எய்துதல் கூடாமையானும், நீர்வேட்கை கொண்டோன், அது தணிதற்கு வேண்டும் நீரை முகந்துண்டு தன் காரியத்திற் செல்லுதல்லது, தன் முன் காணப்படும் ஆறு, குளம் முதலியவற்றி லுள்ள நீரையெல்லாம் முகக்கக் கருதாமைபோல, பரந்துபட்ட கல்வியுள் உலகியலில் தமக்கு வேண்டுந்துணையே கற்று அமைந்து, உயிர்க்குறுதிதேட முயறலன்றி எல்லாக் கல்வியையும் முற்றக் கற்க முயலுதல் அறிவுடைமை யன்றாகலானும், ``கல்வி யென்னும் பல்கடற் பிழைத்தும்`` என்றார்.
39. ஈட்டல், காத்தல், அழித்தல் முதலிய எல்லாவற்றானும் பொருள் துன்பமே பயத்தலின், `செல்வம் என்னும் அல்லல்`` என்று அருளினார். அல்லலைத் தருவது, ``அல்லல்`` எனப்பட்டது. இதனின்றுந் தப்புதலாவது, இதன்கண் பற்றுச் செய்யாமையாம்.
40. நல்குரவு - வறுமை, விடம் - நஞ்சு. செல்வம் அல்லல் பயப்பினும், அறிவுடையார்க்காயின், அறத்தையும் உடன் பயக்கும், வறுமை அவ்வாறின்றி அவர்க்கும் இருமுது குரவர் முதலாயினாரை இனிது ஓம்பமாட்டாமை முதலிய பல குற்றங்களைப் பயந்து இருமையையுங் கெடுத்தலின், அதனை நஞ்சாக உருவகித்தார். இதனானே, வறுமையுட் பட்டார்க்கு அறிவு மெய்யுணர்தற்கட் செல்லாமையும் பெறப்பட்டது.
``வாழ்வெனும் மையல் விட்டு வறுமையாம் சிறுமை தப்பி``
(சூ. 2-91) என்றார் சித்தியாரினும். வறுமை இருமையையுங் கெடுத்தலை,
இன்மை யென ஒருபாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும். (-குறள், 1042)
என்பதனானும் அறிக. இவ்வாறு நல்குரவு இருமையுங் கெடுத்தலைப் பலரும் பண்டே அறிந்து அஞ்சப்படுவதென்பதனையே, ``தொல் விடம்`` என்றார் என்க.
இதனினின்றும் தப்புதல்.
தெண்ணீ ரடுபுற்கை யாயினும் தாள்தந்த
துண்ணலி னூங்கினிய தில். -குறள், 1065
என்று மகிழ்ந்திருக்கும் பண்பு, தமக்கும், தம் சுற்றத்திற்கும் வாய்த் தலால் உண்டாவதாம்.
41. புல் வரம்பாய பல துறை - இழிந்த நிலையினவாகிய பல தொழில்கள். அவை, கள் விற்றல், மீன்படுத்தல், ஊன் விற்றல் போல்வன. இவை அறிவின்கண் நல்லன புகவொட்டாமையின், தெய்வ உணர்விற்கும் தடையாதல் அறிக. இத்தொழில்கள் தாமே சாதிகளாய் நிற்றலின்,
``தரைதனிற் கீழை விட்டுத் தவம்செய்சா தியினில் வந்து``
எனச் சிவஞானசித்தி (சூ 2-90) யுட் கூறப்பட்டது.
42-45. தெய்வம் என்பது ஓர் சித்தம் - கடவுள் என்று உணர்வ தோர் உணர்ச்சி. உண்டாகி - தோன்றப் பெற்று. முனிவிலாதது ஓர் பொருள் கருதலும் - எஞ்ஞான்றும் வெறுக்கப் படாததாகிய அவ் வொப்பற்ற பொருளை அடைய விரும்பிய அளவிலே. அளவில்லாத மாயையின் ஆற்றல்கள் தனித் தனியே தம் மயக்கும் செயல்களைச் செய்யத் தொடங்கிவிட்டன என்க.
தெய்வம், `கடவுள்` - பரம்பொருள் என்னும் பொருளதாய் நின்றது. `அம் முனிவிலாததோர் பொருள்` எனச் சுட்டு வருவித் துரைக்க. அதுபகுதிப் பொருள் விகுதி. ``மாயா சத்திகள்`` எனப் பட்டன. உலகியல்களாம். ``ஆறுகோடி`` என்றது, அளவின்மை குறித்தவாறாம். கோடி என்றே போகாது ``ஆறுகோடி `` என்றது மாயா காரியங்கள் அனைத்தும் `அத்துவா` எனப்படும், `மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை` என்னும் ஆறாய் அடங்குதல் பற்றிப் போலும்! இனி, இதனை, `காமம், குரோதம்` முதலிய அகப் பகை ஆறென்றல் பற்றிக் கூறியதாக உரைப்பின், அவை ஆணவத்தின் காரியமாதலேயன்றி, மேல், மாதர்தம் மயக்கம் முதலாகக் கூறிய வற்றுள் அடங்கினவாதலும் அறிக.
மேல் கடவுளுணர்வு தோன்றுதற்குத் தடையாயுள்ளனவற்றை வகுத்தருளிச் செய்தார்; இனி, அது தோன்றிய பின்னரும், நிலை பெறாதொழிலைச் செய்வனவற்றை அவ்வாறருளிச் செய்வாராய், ``மாயா சத்திகள் தம் மாயைகள் தொடங்கின`` என்றார். எனவே, இனி வருவன அம் மாயா சத்திகளின் செயல்களே யாதல் அறிக.
உணர்வை, ``சித்தம்`` என்றார். உலகப் பொருள்கள் முன்னர் இனியவாய்த் தோன்றி விரும்பப்பட்டு, பின்னர் இன்னாதனவாய் வெறுக்கப்படுதல் போலன்றி, பரம்பொருள் எஞ்ஞான்றும் இனிதாயே நிற்றலின், அடையற்பாலது அஃது ஒன்றுமே என்பது உணர்த்து வார்,``முனிவிலாததோர் பொருள்` என்றார்.
46-47. `ஆத்தமானாரும் அயலவரும் கூடி` என்க. ஆத்தம்- மெய்ம்மை. ஆனார் - நீங்காதவர்; என்றது, `உறுதியுரைக்கும் நண்பர்` என்றவாறு. இனி. `ஆத்தம்` என்னும் பண்புப் பெயர், அதனை உடையார்மேல் நின்றதெனக் கொண்டு, `ஆத்தராயினார்` என்று உரைத்தலுமாம். அயலவரும் அவரொடு கூடியது அவர் கூற்றை வலியுறுத்தற்பொருட்டாம், இவர்கள் பேசும் நாத்திக உரைகளாவன, `இப்பொழுது கிடைத்துள்ள செல்வமும், மாடமாளிகையும், மகளிரும் முதலாய பொருள்களைத் துறந்து, இனி எய்தற் பாலதாய கடவுளை அடைதற்கு இப்பொழுது விரும்புதல் வேண்டா; பின்னர்ப் பார்த்துக் கொள்வோம் என்றாற் போல மெய்ந்நெறியினை நெகிழவிடக் கூறுவனவாம், கடவுளும் வினைப்பயனும் மறுபிறப்பும் போல்வன வற்றை, `இல்லை` என அழித்துரைக்கும் நாத்திகரைப் பின்னர்க் குறித் தருளுப. ``நாத்தழும் பேறினர்`` என்றதனால் இவற்றைப் பல்காலும் இடையறாது கூறி ஆமளவும் கடவுள் உணர்வை மாற்ற முயறல் குறிக்கப்பட்டது. ``நாத்தழும் பேறினர்`` என சினைவினை, முதல்மேல் நின்றது. ``பெருகவும் சூழவும்`` எனப் பின்னர் வருதலின், அவற்றிற் கேற்ப ஏனையிடங்களிலும், `நாத்தழும்பேறினராகவும், `சாத்திரங் காட்டினராகவும்` என்றாற்போல, ஆக்கமும், உம்மையும் விரித் துரைக்க.
48-49. சுற்றம் - உறவினர். கடவுள் நெறியது நலப் பாட்டினை அறியமாட்டாமையின், அதனை அடைய விரும்புவாரைத் தமக்கும் தம் தமர்க்கும் உறுதியுணராதவராக நினைத்து அவலம் எய்தலின், அத்தன்மையராய உறவினரை விலங்குகளோடு ஒப்பித்து, ``பசுக் குழாங்கள்`` என்று அருளிச் செய்தார். எனவே, சுற்றம் என்னும் குழாங்கள்`` என்றது இகழ்ச்சிக்கண் உயர்திணை அஃறிணையாய், பின் வரும், ``பதறினர்`` என்பதனோடு திணை மயக்கமாயிற்று என்க. இனி, `பதறின`` என்பதே பாடம் என்றலுமாம். தொன்று தொட்டு வந்த உறவுடையர் என்பார், `தொல்பசுக்குழாங்கள்`` என்றார். பற்றி அழைத்தல் - கை கால்களைப் பற்றிக்கொண்டு `அந்தோ! துறத்தல் வேண்டா` எனக் கூப்பீடு செய்தல். பதறுதல் - துன்பத்தால் விதிர் விதிர்த்தல். `பதறினராய்ப் பெருக` என்க. பெருகுதல், பலராய்ச் சூழ்ந்து கொள்ளுதல். உம்மை, வினைக்கண் வந்த எண்ணிடைச் சொல். ``சூழவும்`` எனப் பின்னர் (அடி 58) வருவதும் அது.
ஒருவர்க்கு ஒரு காரியம் பற்றிச் சொல்பவருள் ஆத்த நண்பர் முன்னிற்பராகலானும், அவர் தம் கருத்தை யுரைத்தலைக் கேட்கும் வாய்ப்புப் பெற்றுழி, அயலாரும் அவரோடு உடம்பட்டுச் சில சொல்லுபவாகலானும் அவ்விருவரையும் முன்னர் வைத்தும், அவர்தம் உரைப்படியேனும், அவற்றிற்கு மாறாக வேனும் செயலை மேற்கொள்ளும் வழியே, சுற்றத்தார் அறிந்து தாம் கூறுவனவற்றைக் கூறுவராகலின், அவரை அவ்விருவருக்கும் பின்னர் வைத்தும் அருளிச் செய்தார். இவரெல்லாம் உலகவராய் நீங்க, இனிச் சமயத்தார் செய்வனவற்றை அருளுவார்.
50-51. விரதம் - நோன்புகள், பரம் - மெய்ப்பொருள். `உயிர்கள் செய்யும் வினைகளே, அவற்றிற்கு நன்மை தீமைகளைப் பயக்கும்; உயிர்கட்கும், அவை செய்யும் வினைகட்கும் வேறாய் மூன்றாவதொரு பொருள் இல்லை என்பவர், வேதத்துட் கரும காண்டத்தையே சிறப்புடைய பகுதியாகக் கொண்டு. ஏனைய பகுதிகளைப் பொதுவகையால் தழுவுபவர். இவர், வேதத்தின் முற்பகுதியாகிய கரும காண்டம் ஒன்றனையுமே ஆராய்பவராகலின் `பூருவ மீமாஞ்சகர்` எனவும், கரும காண்டம் ஒன்றனையுமே சிறந்த பிரமாணமாகக் கொள்ளுதலின், `கருமகாண்டிகள்` எனவும், `கருமமே கடவுள்` என்றலின் `கருமப்பிரமவாதிகள்` எனவும் பெயர் கூறப்படுவர். எனவே, இங்கு, ``வேதியர்`` என்றது, இவர்களையே யாம்.
``ஆதிமறை ஓதி அதன்பயனொன் றும்மறியா
வேதியர்சொல் மெய்யென்று மேவாதே``
என்றார், நெஞ்சுவிடு தூதினும் (116,117).
சரதம் - உண்மை. `சாத்திரம்` என்றது, இவரது நூலாகிய பூருவ மீமாஞ்சையை. இது, சைமினி முனிவரால் செய்யப்பட்டது. அந்நூல், இவர் தம் கொள்கையை மிகத் திறம்பட நிறுவலின், ``சரதமாகவே காட்டினர்`` என்று அருளினார், எவ்வாறுரைப்பினும், இவர் தம் கூற்று உண்மையல்ல என்பார், ``பரமாக`` எனவும், `சரதமாகவே``எனவும் ஈரிடத்தும் ஆக்கச் சொற்புணர்த்து அருளிச் செய்தார். ``ஆகவே`` என்றது, `போலத் தோன்றும்படியே` என்றவாறு. இன்னும், `உணர்த்தினர்` என்னாது, ``காட்டினர்`` என்றார், அஃது அறிவுடையோர் உணர்வைப் பற்றாது நீங்கலின். வேதத்துட் கரும காண்டம் முன் நிற்றல் பற்றி, இவரை முன்னர்க் கூறினார்.
52-53, ``சமய வாதிகள்`` என்றது, வேதத்துள் உபாசனா காண்டமும், அதுபோலும் பிற நூல்களும் பற்றி ஒரு தெய்வத்தை யாதல், பல தெய்வங்களையாதல் வழிபடும் கிரியா மார்க்கத்தவரை யாம். உபாசனா காண்டம், கரும காண்டத்தின் பின்னர்த்தாதல் பற்றி, இவரை மீமாஞ்சர்க்குப் பின்னர் வைத்து அருளிச்செய்தார். மதம் - தாம் தாம் தெய்வம் எனக் கொண்ட பொருள் பற்றிய கொள்கை. அமைதலுக்கு வினைமுதல், மேல் `பரம்`` என்றதேயாம். அதனால், அதனை இங்கும் இயைத்துரைக்க. இங்கும், ``அமைவதாக`` என்றார், பரம் பொருள் அவர் தம் மதங்களில் அமையாமையின். அமைதல் - அடங்குதல். ``அரற்றி`` என்றதும் அதுபற்றி. அரற்றுதல் - வாய் விட்டழுதல். இவருள் ஒருவர் கொண்ட தெய்வத்தை மற்றையோர் உடம்படாது மறுத்துரைத்துக் கலாய்த்தலின், `மலைந்தனர்` என்றும் அருளிச் செய்தார்.
54-55. மிண்டிய - வலிமைபெற்றெழுந்த. மாயாவாதம் - `உலகம் உள்பொருளன்று` என்னும் கூற்று. உலகம், கடவுள் போல என்றும் ஒருநிலையாய் நில்லாது, தோன்றி நின்று மறைதல் பற்றி, `பொய்` எனவும், `அசத்து` எனவும் ஆன்றோர் கூறினாராக, அக்கருத் துணராது, `கயிற்றில் அரவு போலவும் கானலின் நீர் போலவும் கடவுளிடத்தே தோன்றுவதொரு பொய்த் தோற்றமே உலகம்` எனவும், `அன்னதொரு தோற்றமே மாயை` எனவும் கொண்டு` `நாம் காண்பன அனைத்தும் மாயையே` என வாதித்தலின், அவ்வாதம், `மாயா வாதம்` எனப்பட்டது. இவ்வாதத்தினை வலியுறுத்தும் உத்தரமீமாஞ்சை யாகிய பிரம சூத்திரம் என்னும் முதனூலைச் செய்தவர் வேதவியாத முனிவராதலின், அதற்கு அந்நூலோடு இயைந்த உரையை வகுத்துப் பெருமைபெற்ற சங்கரர் காலத்திற்றான் இவ்வாதம் தோன்றிற்று என்றல் உண்மையுணராதார் கூற்றேயாமென்க,
இனி, மாயாவாதம் சங்கரர் காலத்திற்கு முன்னரே தோன் றிற்றாயினும், அது தமிழகத்திற் பரவியது, அவரது காலத்திற்றான் என்பது உண்மையேயாயினும், அடிகள் போன்ற பேரறிவுடை யார்க்குச் சங்கரர் காலத்திற்கு முன்னர் அதனை அறிதல் இயலா தென்றல் பொருந்துவதன்றாம், மாயாவாத நூல் வேதவியாத முனிவ ரால் செய்யப்பட்டது என்பதனை, `இங்ஙனம் நால்வேறு வகைப்பட்ட ஏகான்மவாத நூல் செய்தவன் வியாதமுனிவன்` எனச் சிவஞானபாடி யத்துட் கூறியவாற்றான் உணர்க. ஏகான்மவாதவகை நான்கனுள் மாயாவாதமே தலையாயதென்பது வெளிப்படை.
இவ்வாற்றான், சிவநெறியாளர்க்கு வடமொழியில் சிவாகமமே சிறப்பு நூலாவதன்றிப் பிற நூல்களுள் யாதொன்றும் அன்னதாகாமை பெறப்பட்டது. இவ்வரையறையில் நில்லாது, வியாத முனிவரது ஏகான்ம நூலைச் சிவநெறி நூலாக மேற்கொண்டு உரை வகுக்கப் புகுந்தமையால், நீலகண்ட சிவாசாரியர் சைவசித்தாந்தத்தோடு உள்ளத்தால் முரணாராயும், உரையால் முரணி நிற்பாராயினார் என்க,
வேதத்தை வகைப்படுத்திப் பதினெண் புராணங்களையும் செய்த வியாத முனிவரது நூலை, இவ்வாறு பிரமாணம் அன்றென விலக்குதல் குற்றமாமன்றோ எனின், ஆகாது; எவ்வாறு எனின்,
``வேதந் துறைசெய்தான் மெய்துணியான் கைதுணிந்தான்``
எனப் பிற்காலத்தார் தாமே (குமரகுருபர அடிகள் - சிதம்பரச் செய்யுட் கோவை - 13.) ஓதினாராகலானும், அவர் அங்ஙனம் ஓதுதற்கு முதலாய்,
``கங்கைசூழ் கிடந்த காசிமால் வரைப்பிற்
பொய்புகல் வியாதன் கைதம் பித்தலின்``
(சிவஞான முனிவர் மொழிபெயர்ப்பு; இதன் மூலம் சிவாசாரியர் பஞ்ச சுலோக வாக்கியம்) எனக் குறிக்கப்படும் பண்டை வரலாறு உண்மையானும், வேதவியாதர் குணவயப்பட்டு மயங்கினமை பெறப்படுதலான் என்க.
`மாயாவாதம் சங்கரர் காலத்திலன்றோ தோன்றியது என்பார்க்கு இங்ஙனம் செவ்வனே விடையிறுக்கமாட்டாதார், ஈண்டு அடிகள், `மாயாவாதம்`` என்றது, சூனியவாதமாகிய புத்த மதத்தை எனக் கூறி இடர்ப்படுவர், `மாயை` என்னும் வாய்பாடு வைதிக மதங்கட்கன்றி, அவற்றிற்குப் புறமாய மதங்கட்கு ஏலாமைதானே, அவர் கூற்றுப் பொருந்தாமையை இனிது விளக்கும். அன்றியும் அடிகள் ஈண்டு வைதிக மதங்களை எடுத்தோதியதன்றி அவைதிக மதங்களை எடுத்தோதினாரல்லர். ஓதினாரெனின், ஆருக மதத்தையும் கூறியிருத்தல் வேண்டும் என்க. உலகாயத மதம் ஏனை மதங்கள் அனைத்திற்குமே புறம்பாவதென்பதுணர்க.
இம் மாயாவாதம், கடவுட்கும் உயிர்க்கும் இடையே உள்ளதாய், யாண்டும் உயர்ந்தோர் பலராலும் போற்றிக் கொள்ளப்பட்டு வரும் ஆண்டான் அடிமைத் திறத்தினை, முனிவர் ஒருவரது நூலைத் துணைக்கொண்டு போக்க உறுதி கொண்டு நிற்றலின், ``மிண்டிய`` என அடைபுணர்த்தும், ஈன்று புறந்தந்து விளங்குவாளை, `இவள் மலடி` என்பார் கூற்றுப்போல, யாவராலும் உள்ளதாய்க் காணப்பட்டுப் பயன் தந்து வரும் உலகினை, விடாய் கொண்டோர்க்கு அதனைத் தணிக்க மாட்டாது வெறுந் தோற்றமாத்திரையாய் ஒழியும் கானல்நீர் முதலியவற்றோடு ஒப்பித்து, `இஃதோர் பொய்த் தோற்றம்`எனக் கூறும் தமது முருட்டு வாதத்தினை, `தற்கம், வாதம், செற்பம், விதண்டை, சலம், சாதி` முதலிய பாகுபாட்டுரைகளாற் சொற்சாலம் படவிரிக்கும் அவரது ஆரவார உரைகள், யாதுமறியா மக்களுள்ளத்தை மருட்சிக்குள்ளாக்குதலின், அதனை, சுழன்றடித்துப் பொருள்களைத் தலைதடுமாறாகப் புரட்டி மக்களை அல்லற்படுத்தும் பேய்க்காற்றின் செயலோடொப்பித்து, மாயாவாதமென்னும் சண்ட மாருதம் சுழித் தடித்து ஆஅர்த்து` என உருவகித்தும் அருளிச் செய்தார். `மாயாவாதிகள்` என அதனை உடையார் மேல் வைத்து அருளாது `மாயாவாதம்` என அவ்வாதத்தின் மேலே வைத்து அருளியதும், அதனது மயக்க மிகுதியைப் புலப்படுத்தற் பொருட்டாம். ``அதிற்பெரு மாயை எனைப் பல சூழவும்`` எனப் பின்னர் வருவதனை (அடி58) இதற்குங் கூட்டியுரைக்க.
இவ்வாதம், வேதத்துள் உபாசனா காண்டத்தின் பின்னர்த் தாய் இறுதியில் நிற்கும் ஞான காண்டத்தையே பற்றிநிற்றலின், மேற்கூறிய கிரியாமார்க்கச் சமயங்களின் பின்னர் வைத்து அருளினார். இதனானே, இதன்நூல், `உத்தர மீமாஞ்ைu2970?` எனவும், இம்மதம், `வேதாந்தம்` எனவும் பெயர் பெறுவவாயின. உபநிடதங்களுள் `அத்துவிதம்` எனவரும் சொல்லினைச் சிறப்பாகப் பற்றிக்கோடலின். `இவ்வாதிகள் தம் மதத்தினை` `அத்துவித மதம்` எனவும், தம்மை `அத்துவிதிகள்` எனவும் கூறிக்கொள்ளினும், `ஏகான்ம வாதம்` என்பது இதற்கு ஏற்புடைய பெயராகும், `மாயாவாதம்` என்பது சிவநெறியாளர் இதற்கு இட்ட பெயராம்.
உத்தர மீமாஞ்சை வேதத்தின் ஞானகாண்டத்தை ஆராய்வ தாயின், அதனை இகழ்தல் குற்றமாமன்றோ எனின் அன்றாம். என்னையெனின், வேதத்தின் பொருளை ஒருதலையாக இனிது விளங்க எழுந்தவையே சிவாகமங்களாதலின் அவற்றை இகழ்ந் தொதுக்கி, அவற்றொடு மாறுபட எழுந்த பிற நூல்களைக் கொள்வதே குற்றமாதலின் என்க, இதனை,
``............. நீண்மறையின் ஒழிபொருள், வேதாந்தத்
தீதில் பொருள் கொண்டுரைக்கும் நூல் சைவம்; பிறநூல்
திகழ்பூர்வம்; சிவாகமங்கள் சித்தாந்த மாகும்``
என்றும் (சிவஞான சித்தி - சூ. 8-15) ``வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தம்`` என்றும் (சிவப்பிரகாசம்-7.) சிவநெறியாசிரியன்மார் இனிது விளக்கிப் போந்தவாறறிக. இன்னும் அவர், சிவாகமங்களை யொழித்து வேதத்தின் சார்பாய் எழுந்த நுல்கள் அனைத்தும் பசுத்தன்மை யுடையோரால், தாம்தாம் அறிந்தவாற்றாற் செய்யப் பட்டன என்பதை,
அருமறை,ஆ கமம் முதல்நூல், அனைத்தும் உரைக்
கையினால்;
அளப்பரிதாம் அப்பொருளை; அரனருளால் அணுக்கள்
தருவர்கள்,பின் தனித்தனியே தாமறிந்த அளவில்
தர்க்கமொடுத் தரங்களினால் சமயம்சா தித்து
-சிவஞானசித்தி, சூ. 8-14
என எடுத்தோதியதுங் காண்க.
56-57. `உலகாயதர்` எனப் பன்மையாற் கூறாது ஒருமையாற் கூறினார். அவரது மதம் ஏனை எல்லா மதங்களினுங் கீழ்ப்பட்டதாய அதனது இழிபுணர்த்தற் பொருட்டு.
`காட்சி ஒன்றே அளவை; அதற்கு வாராதவாறு உரைப்பன வெல்லாம் போலிகள்; ஆகவே, முற்பிறப்பு மறு பிறப்பு, வீடுபேறு முதலியவற்றைக் கூறி, உலகத்தாரை, அலைக்கழித்தல் வேண்டா` என்பதே உலகாயதமதம். `நாத்திகம்` எனப்படுவதும் இதுவே. உலகாயதருள்ளும், `உடம்பே உயிர். மனமே உயர், பிராணவாயுவே உயிர்` என்றாற்போலும் வேறுபட்ட கொள்கை நூல்களையுடையார் உளராகலின், அந்நூல் வேறுபாடுகளை, ``கலாபேதம்`` என்றார், கலா- கலை; நூல். உலகாயதரது கொள்கைகள் பலவும் அந்நூல்களில் கிடைத்தலால், அந்நூற்பொருளை அம்மதமாகிய பாம்பினது கடிய விடமாக உருவகித்தார். கடுவிடம் - பெருநஞ்சு; `அஃதாவது மீளுதற்கரிய நஞ்சு` என்றவாறு. உலகாயதம், ஏனை மதங்கள்போல மக்களை உள்ளவாறு நெறிப்பட்டொழுகச் செய்யாது ``அச்சமே கீழ்கள தாசாரம்; எச்சம் - அவாவுண்டேல் உண்டாம் சிறிது`` (குறள் - 1075) என்றபடி அரசனாணையும், பிறவுமாகிய புறப்பொருள்கள் சார்பாக நெறிப்பட்டொழுகச் செய்தலால், உள்ளத்தால் பழி பாவங்கட்கு அஞ்சுதலைப் போக்கிக் கேடு பயத்தலின், அதனைக் கடுவிடமாக உருவகிப்பார், அதற்கேற்ப, அதனையுடையாரைப் பாம்பாக உருவகித்தார்,
உலகத்தைபொய்த்தோற்றம் எனவும், அதனால் கடவுட்கும், உயிர்க்கும் இடையே காணப்படும் ஆண்டவன் அடிமைத் திறமும் அன்னதே எனவும் உபதேசிக்கும் மாயாவாதிகளது உபதேச மொழியைக் கேட்டோர், கடவுளும், புண்ணிய பாவங்களும் சுவர்க்க நரகங்களும் இல்லை என்பதனை வலியுறுத்தி உணர்த்தும் உலகாய தரது நாத்திக மதத்தில் எளிதின் வீழ்ந்து கெடுவர் என்பது தோன்ற, அவர்களை மாயாவாதிகளை அடுக்க வைத்து அவர் கூற்றினைக் கடவுளுணர்விற்கு மாறாவன பலவற்றினும் நேர்மாறாவதெனக் குறிப்பான் உணர்த்தி முடித்தார். எய்தி - எய்துதலால், மாயை - மயக்கம். எனைப் பல - எத்துணையோ பல.
59. தப்பாமே - தவறிப்போகாதபடி. `தாம்பிடித்தது` எனச் செயப்படுபொருள் வினைமுதல் போலக் கூறப்பட்டது. பிடித்தது, முன்னர்க் கூறிய, முனிவிலாத பொருளை அடையக் கருதிய. கருத்து (அடி.43). `சலியாது` என்பது ஈறு குறைந்தது. இதன்பின்னர். `நின்று` என்பது எஞ்சி நின்றது, ``ஆத்தமானார்`` (அடி.46) என்றது முதலாக இதுகாறும் வந்தவற்றை, ஏறவும், பெருகவும், காட்டவும், மலையவும், ஆர்த்தலால் சூழவும், எய்தலால் சூழவும், தாம் பிடித்தது தப்பாமே சலியாது நின்று` என முடிக்க. இதனுள் ``தாம்`` என்றது, பின்னர், ``தழைப்பவர்`` (அடி.86) எனப் படுவாரைக் குறித்தது,
60-61. ``தழலது`, ``மெழுகது`` என்றவற்றில் அது, பகுதிப் பொருள் விகுதி. `மெழுகுபோல உளம் உருகித் தொழுது` என மாற்றி உரைக்க. கம்பித்து - நடுங்கி. தொழுவது, சிவபெருமானை என்பது உய்த்துணர வைக்கப்பட்டது, ஞானத்தைத் தருபவன் அவனே என்பது வெளிப்படை என்பது தோன்றுதற் பொருட்டு.
62-64. பரவி - துதித்து., கொடிறு - `குறடு` என்னும் கருவி, ``விடாது``என்றதனைத் தனித்தனி கூட்டியுரைக்க, ``படியேயாகி`` என்றது, `இறுகப் பற்றிக் கொண்டு` என்றவாறு,
65-67. `ஆணி அறைந்தாற்போல`` என்றாராயினும், `அறைந்த ஆணிபோல` என்பதே கருத்து. `பசுமரத்தின் கண் அறையப் பட்ட ஆணிபோல இடையறாது நிற்கும் நல்ல அன்பினால் கசிவது` என்க. நல்லன்பு - மெய்யன்பு. கசிவது- துளிப்பதாகி. கண்ணீர், `அது பெருகிக் கடல் என்னும்படி மறுகப்பெற்று` என்க. மறுகுதல், இங்கு, வீழ்தலைக் குறித்தது, அகம் குழைந்து - மனம் கரைந்து; என்றது, `அந்தக் கரணங்களும் அன்பு வடிவாகப் பெற்று` என்றபடி. `அனுகுலமாய் அகங்குழைந்து`என மாறிக் கூட்டுக. `அனுகூலமாய்` என்றது குறுகிநின்றது, `அந்தக்கரணங்கள் முன்னர் மாறிநின்ற ஐம்புல வழியே தம்மை ஈர்த்து அலைத்தாற்போல அலையாது, தம்மோடு ஒத்துநிற்கப் பெற்று என்றவாறு. மெய்விதிர்த்து - உடல் நடுங்கி இவை யெல்லாம் இடையறாத நல்லன்பின் செயலாக அருளினமையின், முன்னர், உளம் உருகுதல் முதலாகப் பரவுதல் ஈறாக அருளியவை ஒரோவழி நிகழும் பொதுவன்பின் செயலாம் என்பது உணர்க.
41. புல் வரம்பாய பல துறை - இழிந்த நிலையினவாகிய பல தொழில்கள். அவை, கள் விற்றல், மீன்படுத்தல், ஊன் விற்றல் போல்வன. இவை அறிவின்கண் நல்லன புகவொட்டாமையின், தெய்வ உணர்விற்கும் தடையாதல் அறிக. இத்தொழில்கள் தாமே சாதிகளாய் நிற்றலின்,
``தரைதனிற் கீழை விட்டுத் தவம்செய்சா தியினில் வந்து``
எனச் சிவஞானசித்தி (சூ 2-90) யுட் கூறப்பட்டது.
42-45. தெய்வம் என்பது ஓர் சித்தம் - கடவுள் என்று உணர்வ தோர் உணர்ச்சி. உண்டாகி - தோன்றப் பெற்று. முனிவிலாதது ஓர் பொருள் கருதலும் - எஞ்ஞான்றும் வெறுக்கப் படாததாகிய அவ் வொப்பற்ற பொருளை அடைய விரும்பிய அளவிலே. அளவில்லாத மாயையின் ஆற்றல்கள் தனித் தனியே தம் மயக்கும் செயல்களைச் செய்யத் தொடங்கிவிட்டன என்க.
தெய்வம், `கடவுள்` - பரம்பொருள் என்னும் பொருளதாய் நின்றது. `அம் முனிவிலாததோர் பொருள்` எனச் சுட்டு வருவித் துரைக்க. அதுபகுதிப் பொருள் விகுதி. ``மாயா சத்திகள்`` எனப் பட்டன. உலகியல்களாம். ``ஆறுகோடி`` என்றது, அளவின்மை குறித்தவாறாம். கோடி என்றே போகாது ``ஆறுகோடி `` என்றது மாயா காரியங்கள் அனைத்தும் `அத்துவா` எனப்படும், `மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை` என்னும் ஆறாய் அடங்குதல் பற்றிப் போலும்! இனி, இதனை, `காமம், குரோதம்` முதலிய அகப் பகை ஆறென்றல் பற்றிக் கூறியதாக உரைப்பின், அவை ஆணவத்தின் காரியமாதலேயன்றி, மேல், மாதர்தம் மயக்கம் முதலாகக் கூறிய வற்றுள் அடங்கினவாதலும் அறிக.
மேல் கடவுளுணர்வு தோன்றுதற்குத் தடையாயுள்ளனவற்றை வகுத்தருளிச் செய்தார்; இனி, அது தோன்றிய பின்னரும், நிலை பெறாதொழிலைச் செய்வனவற்றை அவ்வாறருளிச் செய்வாராய், ``மாயா சத்திகள் தம் மாயைகள் தொடங்கின`` என்றார். எனவே, இனி வருவன அம் மாயா சத்திகளின் செயல்களே யாதல் அறிக.
உணர்வை, ``சித்தம்`` என்றார். உலகப் பொருள்கள் முன்னர் இனியவாய்த் தோன்றி விரும்பப்பட்டு, பின்னர் இன்னாதனவாய் வெறுக்கப்படுதல் போலன்றி, பரம்பொருள் எஞ்ஞான்றும் இனிதாயே நிற்றலின், அடையற்பாலது அஃது ஒன்றுமே என்பது உணர்த்து வார்,``முனிவிலாததோர் பொருள்` என்றார்.
46-47. `ஆத்தமானாரும் அயலவரும் கூடி` என்க. ஆத்தம்- மெய்ம்மை. ஆனார் - நீங்காதவர்; என்றது, `உறுதியுரைக்கும் நண்பர்` என்றவாறு. இனி. `ஆத்தம்` என்னும் பண்புப் பெயர், அதனை உடையார்மேல் நின்றதெனக் கொண்டு, `ஆத்தராயினார்` என்று உரைத்தலுமாம். அயலவரும் அவரொடு கூடியது அவர் கூற்றை வலியுறுத்தற்பொருட்டாம், இவர்கள் பேசும் நாத்திக உரைகளாவன, `இப்பொழுது கிடைத்துள்ள செல்வமும், மாடமாளிகையும், மகளிரும் முதலாய பொருள்களைத் துறந்து, இனி எய்தற் பாலதாய கடவுளை அடைதற்கு இப்பொழுது விரும்புதல் வேண்டா; பின்னர்ப் பார்த்துக் கொள்வோம் என்றாற் போல மெய்ந்நெறியினை நெகிழவிடக் கூறுவனவாம், கடவுளும் வினைப்பயனும் மறுபிறப்பும் போல்வன வற்றை, `இல்லை` என அழித்துரைக்கும் நாத்திகரைப் பின்னர்க் குறித் தருளுப. ``நாத்தழும் பேறினர்`` என்றதனால் இவற்றைப் பல்காலும் இடையறாது கூறி ஆமளவும் கடவுள் உணர்வை மாற்ற முயறல் குறிக்கப்பட்டது. ``நாத்தழும் பேறினர்`` என சினைவினை, முதல்மேல் நின்றது. ``பெருகவும் சூழவும்`` எனப் பின்னர் வருதலின், அவற்றிற் கேற்ப ஏனையிடங்களிலும், `நாத்தழும்பேறினராகவும், `சாத்திரங் காட்டினராகவும்` என்றாற்போல, ஆக்கமும், உம்மையும் விரித் துரைக்க.
48-49. சுற்றம் - உறவினர். கடவுள் நெறியது நலப் பாட்டினை அறியமாட்டாமையின், அதனை அடைய விரும்புவாரைத் தமக்கும் தம் தமர்க்கும் உறுதியுணராதவராக நினைத்து அவலம் எய்தலின், அத்தன்மையராய உறவினரை விலங்குகளோடு ஒப்பித்து, ``பசுக் குழாங்கள்`` என்று அருளிச் செய்தார். எனவே, சுற்றம் என்னும் குழாங்கள்`` என்றது இகழ்ச்சிக்கண் உயர்திணை அஃறிணையாய், பின் வரும், ``பதறினர்`` என்பதனோடு திணை மயக்கமாயிற்று என்க. இனி, `பதறின`` என்பதே பாடம் என்றலுமாம். தொன்று தொட்டு வந்த உறவுடையர் என்பார், `தொல்பசுக்குழாங்கள்`` என்றார். பற்றி அழைத்தல் - கை கால்களைப் பற்றிக்கொண்டு `அந்தோ! துறத்தல் வேண்டா` எனக் கூப்பீடு செய்தல். பதறுதல் - துன்பத்தால் விதிர் விதிர்த்தல். `பதறினராய்ப் பெருக` என்க. பெருகுதல், பலராய்ச் சூழ்ந்து கொள்ளுதல். உம்மை, வினைக்கண் வந்த எண்ணிடைச் சொல். ``சூழவும்`` எனப் பின்னர் (அடி 58) வருவதும் அது.
ஒருவர்க்கு ஒரு காரியம் பற்றிச் சொல்பவருள் ஆத்த நண்பர் முன்னிற்பராகலானும், அவர் தம் கருத்தை யுரைத்தலைக் கேட்கும் வாய்ப்புப் பெற்றுழி, அயலாரும் அவரோடு உடம்பட்டுச் சில சொல்லுபவாகலானும் அவ்விருவரையும் முன்னர் வைத்தும், அவர்தம் உரைப்படியேனும், அவற்றிற்கு மாறாக வேனும் செயலை மேற்கொள்ளும் வழியே, சுற்றத்தார் அறிந்து தாம் கூறுவனவற்றைக் கூறுவராகலின், அவரை அவ்விருவருக்கும் பின்னர் வைத்தும் அருளிச் செய்தார். இவரெல்லாம் உலகவராய் நீங்க, இனிச் சமயத்தார் செய்வனவற்றை அருளுவார்.
50-51. விரதம் - நோன்புகள், பரம் - மெய்ப்பொருள். `உயிர்கள் செய்யும் வினைகளே, அவற்றிற்கு நன்மை தீமைகளைப் பயக்கும்; உயிர்கட்கும், அவை செய்யும் வினைகட்கும் வேறாய் மூன்றாவதொரு பொருள் இல்லை என்பவர், வேதத்துட் கரும காண்டத்தையே சிறப்புடைய பகுதியாகக் கொண்டு. ஏனைய பகுதிகளைப் பொதுவகையால் தழுவுபவர். இவர், வேதத்தின் முற்பகுதியாகிய கரும காண்டம் ஒன்றனையுமே ஆராய்பவராகலின் `பூருவ மீமாஞ்சகர்` எனவும், கரும காண்டம் ஒன்றனையுமே சிறந்த பிரமாணமாகக் கொள்ளுதலின், `கருமகாண்டிகள்` எனவும், `கருமமே கடவுள்` என்றலின் `கருமப்பிரமவாதிகள்` எனவும் பெயர் கூறப்படுவர். எனவே, இங்கு, ``வேதியர்`` என்றது, இவர்களையே யாம்.
``ஆதிமறை ஓதி அதன்பயனொன் றும்மறியா
வேதியர்சொல் மெய்யென்று மேவாதே``
என்றார், நெஞ்சுவிடு தூதினும் (116,117).
சரதம் - உண்மை. `சாத்திரம்` என்றது, இவரது நூலாகிய பூருவ மீமாஞ்சையை. இது, சைமினி முனிவரால் செய்யப்பட்டது. அந்நூல், இவர் தம் கொள்கையை மிகத் திறம்பட நிறுவலின், ``சரதமாகவே காட்டினர்`` என்று அருளினார், எவ்வாறுரைப்பினும், இவர் தம் கூற்று உண்மையல்ல என்பார், ``பரமாக`` எனவும், `சரதமாகவே``எனவும் ஈரிடத்தும் ஆக்கச் சொற்புணர்த்து அருளிச் செய்தார். ``ஆகவே`` என்றது, `போலத் தோன்றும்படியே` என்றவாறு. இன்னும், `உணர்த்தினர்` என்னாது, ``காட்டினர்`` என்றார், அஃது அறிவுடையோர் உணர்வைப் பற்றாது நீங்கலின். வேதத்துட் கரும காண்டம் முன் நிற்றல் பற்றி, இவரை முன்னர்க் கூறினார்.
52-53, ``சமய வாதிகள்`` என்றது, வேதத்துள் உபாசனா காண்டமும், அதுபோலும் பிற நூல்களும் பற்றி ஒரு தெய்வத்தை யாதல், பல தெய்வங்களையாதல் வழிபடும் கிரியா மார்க்கத்தவரை யாம். உபாசனா காண்டம், கரும காண்டத்தின் பின்னர்த்தாதல் பற்றி, இவரை மீமாஞ்சர்க்குப் பின்னர் வைத்து அருளிச்செய்தார். மதம் - தாம் தாம் தெய்வம் எனக் கொண்ட பொருள் பற்றிய கொள்கை. அமைதலுக்கு வினைமுதல், மேல் `பரம்`` என்றதேயாம். அதனால், அதனை இங்கும் இயைத்துரைக்க. இங்கும், ``அமைவதாக`` என்றார், பரம் பொருள் அவர் தம் மதங்களில் அமையாமையின். அமைதல் - அடங்குதல். ``அரற்றி`` என்றதும் அதுபற்றி. அரற்றுதல் - வாய் விட்டழுதல். இவருள் ஒருவர் கொண்ட தெய்வத்தை மற்றையோர் உடம்படாது மறுத்துரைத்துக் கலாய்த்தலின், `மலைந்தனர்` என்றும் அருளிச் செய்தார்.
54-55. மிண்டிய - வலிமைபெற்றெழுந்த. மாயாவாதம் - `உலகம் உள்பொருளன்று` என்னும் கூற்று. உலகம், கடவுள் போல என்றும் ஒருநிலையாய் நில்லாது, தோன்றி நின்று மறைதல் பற்றி, `பொய்` எனவும், `அசத்து` எனவும் ஆன்றோர் கூறினாராக, அக்கருத் துணராது, `கயிற்றில் அரவு போலவும் கானலின் நீர் போலவும் கடவுளிடத்தே தோன்றுவதொரு பொய்த் தோற்றமே உலகம்` எனவும், `அன்னதொரு தோற்றமே மாயை` எனவும் கொண்டு` `நாம் காண்பன அனைத்தும் மாயையே` என வாதித்தலின், அவ்வாதம், `மாயா வாதம்` எனப்பட்டது. இவ்வாதத்தினை வலியுறுத்தும் உத்தரமீமாஞ்சை யாகிய பிரம சூத்திரம் என்னும் முதனூலைச் செய்தவர் வேதவியாத முனிவராதலின், அதற்கு அந்நூலோடு இயைந்த உரையை வகுத்துப் பெருமைபெற்ற சங்கரர் காலத்திற்றான் இவ்வாதம் தோன்றிற்று என்றல் உண்மையுணராதார் கூற்றேயாமென்க,
இனி, மாயாவாதம் சங்கரர் காலத்திற்கு முன்னரே தோன் றிற்றாயினும், அது தமிழகத்திற் பரவியது, அவரது காலத்திற்றான் என்பது உண்மையேயாயினும், அடிகள் போன்ற பேரறிவுடை யார்க்குச் சங்கரர் காலத்திற்கு முன்னர் அதனை அறிதல் இயலா தென்றல் பொருந்துவதன்றாம், மாயாவாத நூல் வேதவியாத முனிவ ரால் செய்யப்பட்டது என்பதனை, `இங்ஙனம் நால்வேறு வகைப்பட்ட ஏகான்மவாத நூல் செய்தவன் வியாதமுனிவன்` எனச் சிவஞானபாடி யத்துட் கூறியவாற்றான் உணர்க. ஏகான்மவாதவகை நான்கனுள் மாயாவாதமே தலையாயதென்பது வெளிப்படை.
இவ்வாற்றான், சிவநெறியாளர்க்கு வடமொழியில் சிவாகமமே சிறப்பு நூலாவதன்றிப் பிற நூல்களுள் யாதொன்றும் அன்னதாகாமை பெறப்பட்டது. இவ்வரையறையில் நில்லாது, வியாத முனிவரது ஏகான்ம நூலைச் சிவநெறி நூலாக மேற்கொண்டு உரை வகுக்கப் புகுந்தமையால், நீலகண்ட சிவாசாரியர் சைவசித்தாந்தத்தோடு உள்ளத்தால் முரணாராயும், உரையால் முரணி நிற்பாராயினார் என்க,
வேதத்தை வகைப்படுத்திப் பதினெண் புராணங்களையும் செய்த வியாத முனிவரது நூலை, இவ்வாறு பிரமாணம் அன்றென விலக்குதல் குற்றமாமன்றோ எனின், ஆகாது; எவ்வாறு எனின்,
``வேதந் துறைசெய்தான் மெய்துணியான் கைதுணிந்தான்``
எனப் பிற்காலத்தார் தாமே (குமரகுருபர அடிகள் - சிதம்பரச் செய்யுட் கோவை - 13.) ஓதினாராகலானும், அவர் அங்ஙனம் ஓதுதற்கு முதலாய்,
``கங்கைசூழ் கிடந்த காசிமால் வரைப்பிற்
பொய்புகல் வியாதன் கைதம் பித்தலின்``
(சிவஞான முனிவர் மொழிபெயர்ப்பு; இதன் மூலம் சிவாசாரியர் பஞ்ச சுலோக வாக்கியம்) எனக் குறிக்கப்படும் பண்டை வரலாறு உண்மையானும், வேதவியாதர் குணவயப்பட்டு மயங்கினமை பெறப்படுதலான் என்க.
`மாயாவாதம் சங்கரர் காலத்திலன்றோ தோன்றியது என்பார்க்கு இங்ஙனம் செவ்வனே விடையிறுக்கமாட்டாதார், ஈண்டு அடிகள், `மாயாவாதம்`` என்றது, சூனியவாதமாகிய புத்த மதத்தை எனக் கூறி இடர்ப்படுவர், `மாயை` என்னும் வாய்பாடு வைதிக மதங்கட்கன்றி, அவற்றிற்குப் புறமாய மதங்கட்கு ஏலாமைதானே, அவர் கூற்றுப் பொருந்தாமையை இனிது விளக்கும். அன்றியும் அடிகள் ஈண்டு வைதிக மதங்களை எடுத்தோதியதன்றி அவைதிக மதங்களை எடுத்தோதினாரல்லர். ஓதினாரெனின், ஆருக மதத்தையும் கூறியிருத்தல் வேண்டும் என்க. உலகாயத மதம் ஏனை மதங்கள் அனைத்திற்குமே புறம்பாவதென்பதுணர்க.
இம் மாயாவாதம், கடவுட்கும் உயிர்க்கும் இடையே உள்ளதாய், யாண்டும் உயர்ந்தோர் பலராலும் போற்றிக் கொள்ளப்பட்டு வரும் ஆண்டான் அடிமைத் திறத்தினை, முனிவர் ஒருவரது நூலைத் துணைக்கொண்டு போக்க உறுதி கொண்டு நிற்றலின், ``மிண்டிய`` என அடைபுணர்த்தும், ஈன்று புறந்தந்து விளங்குவாளை, `இவள் மலடி` என்பார் கூற்றுப்போல, யாவராலும் உள்ளதாய்க் காணப்பட்டுப் பயன் தந்து வரும் உலகினை, விடாய் கொண்டோர்க்கு அதனைத் தணிக்க மாட்டாது வெறுந் தோற்றமாத்திரையாய் ஒழியும் கானல்நீர் முதலியவற்றோடு ஒப்பித்து, `இஃதோர் பொய்த் தோற்றம்`எனக் கூறும் தமது முருட்டு வாதத்தினை, `தற்கம், வாதம், செற்பம், விதண்டை, சலம், சாதி` முதலிய பாகுபாட்டுரைகளாற் சொற்சாலம் படவிரிக்கும் அவரது ஆரவார உரைகள், யாதுமறியா மக்களுள்ளத்தை மருட்சிக்குள்ளாக்குதலின், அதனை, சுழன்றடித்துப் பொருள்களைத் தலைதடுமாறாகப் புரட்டி மக்களை அல்லற்படுத்தும் பேய்க்காற்றின் செயலோடொப்பித்து, மாயாவாதமென்னும் சண்ட மாருதம் சுழித் தடித்து ஆஅர்த்து` என உருவகித்தும் அருளிச் செய்தார். `மாயாவாதிகள்` என அதனை உடையார் மேல் வைத்து அருளாது `மாயாவாதம்` என அவ்வாதத்தின் மேலே வைத்து அருளியதும், அதனது மயக்க மிகுதியைப் புலப்படுத்தற் பொருட்டாம். ``அதிற்பெரு மாயை எனைப் பல சூழவும்`` எனப் பின்னர் வருவதனை (அடி58) இதற்குங் கூட்டியுரைக்க.
இவ்வாதம், வேதத்துள் உபாசனா காண்டத்தின் பின்னர்த் தாய் இறுதியில் நிற்கும் ஞான காண்டத்தையே பற்றிநிற்றலின், மேற்கூறிய கிரியாமார்க்கச் சமயங்களின் பின்னர் வைத்து அருளினார். இதனானே, இதன்நூல், `உத்தர மீமாஞ்ைu2970?` எனவும், இம்மதம், `வேதாந்தம்` எனவும் பெயர் பெறுவவாயின. உபநிடதங்களுள் `அத்துவிதம்` எனவரும் சொல்லினைச் சிறப்பாகப் பற்றிக்கோடலின். `இவ்வாதிகள் தம் மதத்தினை` `அத்துவித மதம்` எனவும், தம்மை `அத்துவிதிகள்` எனவும் கூறிக்கொள்ளினும், `ஏகான்ம வாதம்` என்பது இதற்கு ஏற்புடைய பெயராகும், `மாயாவாதம்` என்பது சிவநெறியாளர் இதற்கு இட்ட பெயராம்.
உத்தர மீமாஞ்சை வேதத்தின் ஞானகாண்டத்தை ஆராய்வ தாயின், அதனை இகழ்தல் குற்றமாமன்றோ எனின் அன்றாம். என்னையெனின், வேதத்தின் பொருளை ஒருதலையாக இனிது விளங்க எழுந்தவையே சிவாகமங்களாதலின் அவற்றை இகழ்ந் தொதுக்கி, அவற்றொடு மாறுபட எழுந்த பிற நூல்களைக் கொள்வதே குற்றமாதலின் என்க, இதனை,
``............. நீண்மறையின் ஒழிபொருள், வேதாந்தத்
தீதில் பொருள் கொண்டுரைக்கும் நூல் சைவம்; பிறநூல்
திகழ்பூர்வம்; சிவாகமங்கள் சித்தாந்த மாகும்``
என்றும் (சிவஞான சித்தி - சூ. 8-15) ``வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தம்`` என்றும் (சிவப்பிரகாசம்-7.) சிவநெறியாசிரியன்மார் இனிது விளக்கிப் போந்தவாறறிக. இன்னும் அவர், சிவாகமங்களை யொழித்து வேதத்தின் சார்பாய் எழுந்த நுல்கள் அனைத்தும் பசுத்தன்மை யுடையோரால், தாம்தாம் அறிந்தவாற்றாற் செய்யப் பட்டன என்பதை,
அருமறை,ஆ கமம் முதல்நூல், அனைத்தும் உரைக்
கையினால்;
அளப்பரிதாம் அப்பொருளை; அரனருளால் அணுக்கள்
தருவர்கள்,பின் தனித்தனியே தாமறிந்த அளவில்
தர்க்கமொடுத் தரங்களினால் சமயம்சா தித்து
-சிவஞானசித்தி, சூ. 8-14
என எடுத்தோதியதுங் காண்க.
56-57. `உலகாயதர்` எனப் பன்மையாற் கூறாது ஒருமையாற் கூறினார். அவரது மதம் ஏனை எல்லா மதங்களினுங் கீழ்ப்பட்டதாய அதனது இழிபுணர்த்தற் பொருட்டு.
`காட்சி ஒன்றே அளவை; அதற்கு வாராதவாறு உரைப்பன வெல்லாம் போலிகள்; ஆகவே, முற்பிறப்பு மறு பிறப்பு, வீடுபேறு முதலியவற்றைக் கூறி, உலகத்தாரை, அலைக்கழித்தல் வேண்டா` என்பதே உலகாயதமதம். `நாத்திகம்` எனப்படுவதும் இதுவே. உலகாயதருள்ளும், `உடம்பே உயிர். மனமே உயர், பிராணவாயுவே உயிர்` என்றாற்போலும் வேறுபட்ட கொள்கை நூல்களையுடையார் உளராகலின், அந்நூல் வேறுபாடுகளை, ``கலாபேதம்`` என்றார், கலா- கலை; நூல். உலகாயதரது கொள்கைகள் பலவும் அந்நூல்களில் கிடைத்தலால், அந்நூற்பொருளை அம்மதமாகிய பாம்பினது கடிய விடமாக உருவகித்தார். கடுவிடம் - பெருநஞ்சு; `அஃதாவது மீளுதற்கரிய நஞ்சு` என்றவாறு. உலகாயதம், ஏனை மதங்கள்போல மக்களை உள்ளவாறு நெறிப்பட்டொழுகச் செய்யாது ``அச்சமே கீழ்கள தாசாரம்; எச்சம் - அவாவுண்டேல் உண்டாம் சிறிது`` (குறள் - 1075) என்றபடி அரசனாணையும், பிறவுமாகிய புறப்பொருள்கள் சார்பாக நெறிப்பட்டொழுகச் செய்தலால், உள்ளத்தால் பழி பாவங்கட்கு அஞ்சுதலைப் போக்கிக் கேடு பயத்தலின், அதனைக் கடுவிடமாக உருவகிப்பார், அதற்கேற்ப, அதனையுடையாரைப் பாம்பாக உருவகித்தார்,
உலகத்தைபொய்த்தோற்றம் எனவும், அதனால் கடவுட்கும், உயிர்க்கும் இடையே காணப்படும் ஆண்டவன் அடிமைத் திறமும் அன்னதே எனவும் உபதேசிக்கும் மாயாவாதிகளது உபதேச மொழியைக் கேட்டோர், கடவுளும், புண்ணிய பாவங்களும் சுவர்க்க நரகங்களும் இல்லை என்பதனை வலியுறுத்தி உணர்த்தும் உலகாய தரது நாத்திக மதத்தில் எளிதின் வீழ்ந்து கெடுவர் என்பது தோன்ற, அவர்களை மாயாவாதிகளை அடுக்க வைத்து அவர் கூற்றினைக் கடவுளுணர்விற்கு மாறாவன பலவற்றினும் நேர்மாறாவதெனக் குறிப்பான் உணர்த்தி முடித்தார். எய்தி - எய்துதலால், மாயை - மயக்கம். எனைப் பல - எத்துணையோ பல.
59. தப்பாமே - தவறிப்போகாதபடி. `தாம்பிடித்தது` எனச் செயப்படுபொருள் வினைமுதல் போலக் கூறப்பட்டது. பிடித்தது, முன்னர்க் கூறிய, முனிவிலாத பொருளை அடையக் கருதிய. கருத்து (அடி.43). `சலியாது` என்பது ஈறு குறைந்தது. இதன்பின்னர். `நின்று` என்பது எஞ்சி நின்றது, ``ஆத்தமானார்`` (அடி.46) என்றது முதலாக இதுகாறும் வந்தவற்றை, ஏறவும், பெருகவும், காட்டவும், மலையவும், ஆர்த்தலால் சூழவும், எய்தலால் சூழவும், தாம் பிடித்தது தப்பாமே சலியாது நின்று` என முடிக்க. இதனுள் ``தாம்`` என்றது, பின்னர், ``தழைப்பவர்`` (அடி.86) எனப் படுவாரைக் குறித்தது,
60-61. ``தழலது`, ``மெழுகது`` என்றவற்றில் அது, பகுதிப் பொருள் விகுதி. `மெழுகுபோல உளம் உருகித் தொழுது` என மாற்றி உரைக்க. கம்பித்து - நடுங்கி. தொழுவது, சிவபெருமானை என்பது உய்த்துணர வைக்கப்பட்டது, ஞானத்தைத் தருபவன் அவனே என்பது வெளிப்படை என்பது தோன்றுதற் பொருட்டு.
62-64. பரவி - துதித்து., கொடிறு - `குறடு` என்னும் கருவி, ``விடாது``என்றதனைத் தனித்தனி கூட்டியுரைக்க, ``படியேயாகி`` என்றது, `இறுகப் பற்றிக் கொண்டு` என்றவாறு,
65-67. `ஆணி அறைந்தாற்போல`` என்றாராயினும், `அறைந்த ஆணிபோல` என்பதே கருத்து. `பசுமரத்தின் கண் அறையப் பட்ட ஆணிபோல இடையறாது நிற்கும் நல்ல அன்பினால் கசிவது` என்க. நல்லன்பு - மெய்யன்பு. கசிவது- துளிப்பதாகி. கண்ணீர், `அது பெருகிக் கடல் என்னும்படி மறுகப்பெற்று` என்க. மறுகுதல், இங்கு, வீழ்தலைக் குறித்தது, அகம் குழைந்து - மனம் கரைந்து; என்றது, `அந்தக் கரணங்களும் அன்பு வடிவாகப் பெற்று` என்றபடி. `அனுகுலமாய் அகங்குழைந்து`என மாறிக் கூட்டுக. `அனுகூலமாய்` என்றது குறுகிநின்றது, `அந்தக்கரணங்கள் முன்னர் மாறிநின்ற ஐம்புல வழியே தம்மை ஈர்த்து அலைத்தாற்போல அலையாது, தம்மோடு ஒத்துநிற்கப் பெற்று என்றவாறு. மெய்விதிர்த்து - உடல் நடுங்கி இவை யெல்லாம் இடையறாத நல்லன்பின் செயலாக அருளினமையின், முன்னர், உளம் உருகுதல் முதலாகப் பரவுதல் ஈறாக அருளியவை ஒரோவழி நிகழும் பொதுவன்பின் செயலாம் என்பது உணர்க.
120-121. அடியவர், தம் அடிமைத் திறம் திறம்பாது நிற்பினும், இறைவன் தான் அவரொடு தோழமை முறையிலும், உடன் பிறந்தார் முறையிலும் எளியனாய் நின்று அருளுதலை, ``தோழா, துணைவா`` என்பவற்றால், அருளிச் செய்தார். வாழ்வு - நல்ல வாழ்க்கை. வைப்பு - சேம நிதி.
122-123. முத்தன் - பாசத்தினின்றும் நீங்கினவன். இஃது இயல்பாகவே நீங்கியதாம். இஃது,`அனாதி முத்தத் தன்மை` எனப்படும். முதல்வன் - எப்பொருட்கும் முன்னுள்ளவன். அத்தன் - தந்தை. அரன் - பாசங்களைத் தேய்ப்பவன்.
124-125. ``உரை`` என்பது, `பாச ஞானம்` எனவும், ``உணர்வு`` என்றது, `பசு ஞானம்` எனவும் கொள்ளப்படும். ``உரை யுணர்வு``, உம்மைத்தொகை. இறந்த - கடந்த. ஒருவன் - தனக்கு நிகராவது ஒரு பொருளும் இல்லாதவன். விளைவு - நிகழ்ச்சி; அஃது ஆகுபெயராய், அதனது காரணத்தின் மேல் நின்றது, காணப்படும் சிறப்புப் பற்றி, கடல் சூழ்ந்த உலகத்தையே எடுத்தோதினார்.
126-127. அருமை, காணலாகாத நிலை; அது, கருவி கரணங்களாகிய உடம்பொடு நிற்கும் நிலையாம், அதன் கண்ணே உள்ள எளிமையாவது, அந்நிலையிற்றானே கண்ணாற் காண எழுந் தருளி வருதலாம். அழகு - அழகிய திருமேனியையுடையவன்; இரு மடியாகுபெயர். `இன்பமாகிய மழையைப் பொழிதலின், கண்போலச் சிறந்து நிற்பவனே` என்பார், ``கருமுகிலாகிய கண்ணே`` என்றார்.
128-130. ஏனை மலைகளின் வேறுபடுத்தற்கு, ``மன்னிய`` எனவும், ``திருவருள்`` எனவும் அருளிச் செய்தார். ``மலை`` என்றது, பெருமை பற்றி வந்த உவமை. சேவகன் - வீரன். சேவகம், ஒரு சொல்லால் தம்மை வழிப்படுத்த திறல்; ``மன்ன என்னை ஓர் வார்த்தையுட் படுத்துப் பற்றினாய்`` (தி.8 செத்திலாப் பத்து-2) எனப் பின்னரும் அருளுப.
131-134. தொழுத கை - வணங்கிய உடன், `கை` என்பது இங்குக் காலத்தை உணர்த்திற்று. இனி, `தொழு தகை` என்றானும், `தொழுத கை` என்றானும் பிரித்து, `தொழுந் தகைமையுடையார், தொழுத கையினை யுடையார்` எனப்பொருள் கொள்ளலுமாம். துடைத்தல் - விரையச் சென்று முற்றத் தொலைத்தல், வாரி - கடல். முழுதும் - பசுக்களும், பாசங்களுமாகிய எல்லாப் பொருள் களையும்.
135-136. நோக்கி - பார்வையையுடையவள். தாய் - தாய்போலச் சிறந்தவள்.
137-142. பார் - நிலம். ஐந்து, `நாற்றம்,சுவை, உருவம், ஊறு, ஒலி` என்னும் குணங்கள். இவற்றுள் நாற்றம் முதல் ஒரோவொன்றாக முறையே நீக்கி, ஏனையவற்றை நீர் முதலிய ஏனை நான்கு பூதங் களினும் உள்ளன என்க. அளிபவர் - மனம் இளகுபவர்.
143-144. தமக்கு நனவிலும் வந்து அருளிய அருட்டிறம் இனிது விளங்க, கனவிலும் தேவர்க்கு அரியனாதலை, முன்னர் எடுத் தோதினார். இங்ஙனம் இறைவனை அவனது பெருமைகள் பல வற்றையும் விதந்து போற்றிய பின்னர், மதுரையும், தில்லையும் தவிர ஏனைய தலங்கள் பலவற்றிலும் எழுந்தருளியிருக்கும் நிலையை விதந்து போற்றுகின்றார்.
149-150. `அண்ணால்` என்பது, `அண்ணா` என மருவிற்று. கண் ஆர் - கண்ணால் பருகும். ஆர்தல் - நிறைதல். அஃது இங்கு நிறையப் பருகுதலைக் குறித்தது.
155. இஃது இடைநிலையாய் வந்தது. அன்பு மிகுதியால் இன்னோரன்னவை இடை இடையே அடிகள் வாக்கில் நிகழ்தல் காண்க.
159. பாங்கு - அழகு.
160. விடங்கன் - ஒருவராற் செய்யப்படாது, இயல்பாய் அமைந்த திருவுருவத்தை யுடையவன். `அழகன்` என்றுமாம்.
162-163. இத்தி - கல்லால மரம். இருமூவர், அட்டமா சித்தி வேண்டி நோற்ற மகளிர் அறுவர். அத்தி - வெள்ளானை. `மகளிர்க்கும், அத்திக்கும் அருளியவன்` என்க, இவ்வரலாறுகளைத் திருவிளை யாடற் புராணம் சிறிது வேறுபடக் கூறும்.
164-165. தென்னாடு - பாண்டிநாடு. தமக்கு அருளிய நிலை பற்றி, அதனையே அடிகள் இறைவனுக்கு உரிய நாடாகப் பல விடத்தும் அருளுவர். எனினும், எல்லா நாடும் அவனுடையனவே என்பது தெரித்தற்கு, அடுத்த, ``எந்நாட்டவர்க்கும் இறைவா`` என்று அருளினார். இறுதிக் கண் எந்நாட்டையும் எடுத்தோதி முடித்து, இனியும் முன்போலப் பிறவாற்றாற் போற்றுகின்றார்.
166-167. பன்றிக்குட்டிகட்கு இறைவன் தாய்ப் பன்றியாய்ச் சென்று பால் கொடுத்த வரலாற்றைத் திருவிளையாடற்புராணத்துட் காண்க. ஏனம் - பன்றி. குருளை - குட்டி. மானம் - பெருமை.
168-169. அம்மான் - தலைவன். இருள் - துன்பம்; நரகமு மாம்; உவமையாகுபெயர்.
171. களங்கொளக் கருத - உன்னை என் நெஞ்சார நினைக்கும்படி. நெஞ்சத்தையே இங்கு, `களம்` என்றார் என்க.
172. இங்கு - இப்பொழுது.
174-176. `அத்தன், ஐயன்` என்பன முன்னர்க் கூறப்பட்ட வாயினும், நித்தன் முதலாகப் பின்னர் வருவனவற்றோடு ஒருங்கு நின்று சிறப்பித்தற் பொருட்டு ஈண்டும் கூறினார். நித்தன் - அழி வில்லாதவன். நிமலன் - மலம் இல்லாதவன். பத்தா - தலைவன்; வட சொல்; இஃது இயல்பாய் நின்று, அண்மை விளி ஏற்றது, `பத்தன்` எனக் கொண்டு, `அன்புடையவன்` என்றும் உரைப்ப. பவன் - எவ்விடத்தும் தோன்றுபவன்; `எவையும் தோன்றுதற்கு இடமாயுள்ளவன்` என்றுமாம்,
177-178. பிரான் - கடவுள். அமலன் - மலம் இல்லாதவன்; `விமலன், அமலன், நிமலன்` என்பன ஒரு பொருட்சொற்களாயினும், பலவகையாகப் போற்றுதல் செய்யும் போற்றிக் கோவையில் பொருள் வகை ஒன்றானே போற்றுதல் வேண்டும் என்பதோர் யாப்புறவில்லை; சொல்வகையானும் பலவகையாகப் போற்றுதல் செய்யப்படும்; அதனால், இன்னோரன்ன சொற்களால் பன்முறையானும் போற்றினார் என்க.
179-180. கோலம் - வடிவம்; `அதனையுடைய நெறி யாளனே` என்க. நெறியாளன் - உய்யும் நெறியை உணர்த்துபவன்; ஞானாசிரியன். தரியேன் - இனிப் பொறேன்; `வீடுதந்தருள்` என்பது கருத்து. ``முறையோ`` என்ற முறையீட்டுச் சொல்லை, இதன்பின் கூட்டியுரைக்க. `முதல்வா` என்றதனை, `ஈண்டு எனது முறையீட்டைக் கேட்பது உனக்குக் கடப்பாடு` என்னுங் கருத்தாற் கூறினார்.
181-182. உறவு - உறவினன். உயிர் - உயிரின்கண் கலந்து நிற்பவன். சிறவு - சிறப்பு; சிறப்புடையவன். சிவம் - மங்கலம்; மங்கலம் உடையவன்.
183-184. `மைந்தன்` என்பது, `மஞ்சன்` எனப்போலி யாயிற்று. `வலிமை யுடையவன்` என்பது பொருள். மணாளன் - `மண வாளன்` என்பதன் மரூஉ. `கலியாணகோலம் உடையவன்` என்பது பொருள். சிவபிரான் வடிவங்களுள், கலியாண கோலமும் ஒன்றாதல் உணர்க. பஞ்சு ஏர் அடி - செம்பஞ்சினையும், அழகினையும் உடைய பாதம்.
185-186. அலந்தேன் - உழன்றேன், நாயேன் அடியேன் - நாய்போன்றேனாகிய அடியேன். இலங்கு சுடர்- விளங்குகின்ற விளக்குப்போலும்.
187-190. இந்நான்கடிகளிலும் சிவபிரான், தமிழ்நாடன்றிப் பிற நாடுகளிலும் கோயில் கொண்டிருத்தலை எடுத்தோதிப் போற்று கின்றார். `கவைத்தலை, குவைப்பதி, அரிகேசரி` என்பன தலங்களாம், அவை இக்காலத்து அறிதற்கரியவாயின. சேரநாடும் மலைநாடு எனப்படுமாயினும் இங்கு, ``மலைநாடு`` என்றது, இமயத்தைச் சார்ந்த நிலப்பகுதியையாம். அங்குக் கேதாரம், பசுபதீச்சரம், அனேகதங்காவதம், இந்திர நீலப் பருப்பதம் முதலிய சிவதலங்கள் இருத்தல் வெளிப்படை. ``கலை ஆர்`` என்றது, `நூல்கள் நிரம்பிய` என்றும், `மான் கூட்டங்கள் நிறைந்த` என்றும் பொருள் கொள்ளுதற்கு உரித்து. அத்தொடரால் சிறப்பிக்கப்பட்ட தலம் அறியப்படாமையின், அத்தொடர்க்கும் பொருள்காண்டல் அரிதாகும். கவைத்தலை முதலியவற்றைத் தலங்களாகக் கொள்ளாது, சொற்பொருள் கூறுவாரும் உளர்.
191-192. பிற நாட்டுத் தலங்களை நினைந்த தொடர்பானே, தமக்கு மீளவும் குருவடிவத்தைக் காட்டியருளிய திருக்கழுக் குன்றத்தையும், தமது பாண்டிநாட்டில் பொன்னுருவில் நின்று அருள் புரியும் திருப்பூவணத்தையும் நினைந்து, இவ்விரண்டடிகளிலும் போற்றி செய்தார்.
193-194. மூவகைத் திருமேனிகளுள் அருவத் திருமேனி, உருவத் திருமேனி என்னும் இரண்டனைக் கூறவே இடைநிற்கும் அருவுருவத் திருமேனியும் தானே பெறப்பட்டது. முன்னர், ``மன்னிய திருவருள் மலை`` (அடி.128) என்றார்; இங்கு, ``மருவிய கருணை மலை`` என்றார். மருவுதல் - அடியவர் உள்ளத்து நீங்காது பொருந்துதல்.
195-196. `நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப் படங்கல்` என்னும் ஐந்து நிலைகளும் வடமொழியில் முறையே, `சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம்` எனப்படும். இவை, `இருள்நிலை, பொருள்நிலை, அருள்நிலை` என்னும் மூன்று நிலைகளிலும் நிகழ்வன. இருள்நிலையில், ஒன்றைவிட மற்றொன்றில இருள் (அறியாமை) மிகும்; பொருள் நிலையில், ஒன்றைவிட மற்றொன்றில் உலகப் பொருள் மிக்கு விளங்கும்; அருள்நிலையில் ஒன்றைவிட மற்றொன்றில் இறைவனது திருவருள் மிக்கு விளங்கும். அவற்றுள் அருள்நிலையில் உள்ள துரிய நிலையே இங்குக் குறிக்கப் பட்டது. அந்நிலையில் பேரின்பம் சிறிது அரும்புதலன்றி, வெள்ள மாய்ப் பெருகி உயிரை விழுங்கிக் கொள்ளும் நிலை உண்டாகாது. அதனால், இந்நிலையில் நின்றோர், பேரின்ப வெள்ளத்துள் மூழ்கித் திளைத்திருத்தலன்றி, உலகத்தை நோக்கி நிற்றலும் உடையராவர். இதனைக் கடந்த அதீத நிலையிலே அது கூடுவதாகும். அதனைப் பெற்றோரே சிவனது உண்மை நிலையைத் தலைப்பட்டவராவர். அவர்க்கு அந்நிலையினின்றும் மீட்சி இல்லை. ஆதலின், அப்பெரு மானை, ``துரியமும் இறந்த சுடர்` என்று அருளினார். இருள்நிலை முதலிய மூன்றும் முறையே. ``கேவலம், சகலம், சுத்தம்` எனப்படும், உம்மை, சிறப்பும்மை. தெளிவு அரிது - கருவிகளால் அறியப்படாதது. தெளிவு - அனுபவப்பொருள்.
197-198 தோளா - துளையிடாத. முத்தம் - முத்து. துளையிடாத முத்தில் ஒளி குறைபாடின்றி விளங்கும். மாணிக்கம் முதலிய பிறவற்றின் ஒளிகளினும், முத்தின் ஒளி தண்ணிதாதல் பற்றி, அதனையே உவமித்தார். திருநீற்றுப் பூச்சினால் விளங்கும் வெண்மை பற்றி உவமித்தார் என்றலுமாம். இறைவன் தனக்கு அடியரானார்க்கு அன்பனாதலை, ``தீர்ந்த அன்பாய அன்பர்க்கு அவரினும் அன்ப போற்றி`` எனப் பின்னரும் (தி.8 திருச்சதகம்-69) அருளுவார்.
199-200. ஆராமை - நிரம்பாமை. பேர் - பெயர். ஆயிரம், மிகுதிக்கு ஓர் எண் காட்டியவாறு. எல்லாம் உடைய பெருமானாகலின் அவைபற்றி வரும் பெயர்கள் அளவிலவாயின. பெம்மான் - பெரியோன்.
201-202. தாளி அறுகு - தழைத்துப் படர்ந்த அறுகம்புல். இது, பனையினுள் ஒருவகை, `தாளிப்பனை` என்னும் பெயர்த்தாதல் பற்றி யும் அறியப்படும். `இதனைக் கன்றுகள் விரும்பி மேயும்` என்பதும், அவ்வாறு மேயப்பட்டு வேனிற் காலத்தில் பட்டுக்கிடப்பினும் மழைக் காலத்தில் செழித்துப்படரும் என்பதும் இதனை அங்ஙனமே வளர விட்டால், அரும்புவிட்டுப் பூக்கும் என்பதும், அப்பூ நீலநிறத்துடன் அழகியதாய் விளங்கும் என்பதும், அதனை, மணவினைக்காலத்தில் மணமகளுக்கு வாகை இலையொடு விரவத் தொடுத்து அணிவர் என்பதும், பின்வரும் அகநானூற்றுப் பாடலின் (136.) அடிகளால் அறியப்படும்.
``மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலை
பழங்கன்று கறித்த பயம்பமல் அறுகைத்
தழங்குகுரல் வானின் தலைப்பெயற் கீன்ற
மண்ணுமணி யன்ன மாயிதழ்ப் பாவைத்
தண்ணறு முகையொடு வெண்ணூல் சூட்டி.``
அறுகம் புல், பண்டைத் தமிழ்ச் செய்யுட்களில், `அறுகை` என வழங்கும். இதனால், இவ்வறுகு தமிழகத்தில் பண்டு கண்கவர் வனப் பினதாய்ச் சிறந்த ஒரு மங்கலப் பொருளாய் விளங்கினமை பெறப் படும். அதனானே வாழ்த்துக் கூறுவோர், மஞ்சளரிசியுடன் இதனை யும் சேர்த்துத் தூவி வாழ்த்துதல் பண்டை மரபாய் இருந்தது.
``அறுகு சிறுபூளை நெல்லொடு தூஉய்`` என்னும் வரி, சிலப் பதிகாரத்துள் (கனாத்திறம் உரைத்த காதை - 43) கடவுள் வழிபாடு கூறுமிடத்துக் காணப்படுகின்றது. இவ்வாற்றனே, ஞானாசிரியர்க்கு அவர்தம் அடியவர் தழைத்து வளர்ந்த அறுகம் புல்லாலாய மாலையை அணிவித்து அவரை வழிபட்டு நிற்றல் மரபாய் இருந்தமை பெறப் படும். செங்கழுநீர்ப் பூமாலையும் அவ்வாறு ஞானாசிரியர்க்கு அணியப்படுவதாம், அதனைப் பின்னர் (அடி.217) கூறுப. சிவபிரான் அடிமுடி தோன்றாத நீண்ட ஒளிப்பிழம்பாய்த் தோன்றியது, மால் அயன் முன்பு என்க. நிருத்தன் - நடனம் புரிபவன்.
203. இறைவன் தன் அடியவர் சாத்தும் சந்தனக் குழம்பினை அணிந்து அழகுடன் விளங்குதல் வெளிப்படை.
205-206. `மந்திர மாமலை, மகேந்திரமலை` என்பது, கீர்த்தித் திருவகவலில் காட்டப்பட்டது. உய்யக்கொள்வாய் - உய்யுமாறு உலகியலினின்றும் மீட்டுக் கொள்பவனே. ``எந்தமை`` என்றது, அடியவர்களை.
207-208. ``புலிமுலை புல்வாய்க்கு அருளினை``(அடி 207) என்ற இதுவும் ``கல்நார் உரித்த`` (அடி 97) என்றாற்போல `நினது அரிய திருவருளை எனக்கு வழங்கினாய் என, அன்னதொரு செயலைக் குறிப்பது. ``புலியொன்றைத் தாயை இழந்த மான்கன்று ஒன்றிற்குப் பால்கொடுக்கச் செய்தனன்`` என்ற வரலாறொன்றும் உண்டு. அலை கடல் - அலைகின்ற கடல்நீர். `இவ்வடி, வலைவீசிய திருவிளையாடலைக் குறித்தது` என்ப. ``மீமிைu2970?`` எனவும், ``நடந்தாய்`` எனவும் போந்த சொற்கள், அங்ஙனம் பொருள்படுதற்கு ஏலாமையின், பிரளய வெள்ளத்துட்படாது நின்று, அதனுட் பட்டு அலந்த மாயோன் முதலியோர்க்குத் தோன்றி அருள்புரிந்தமையைக் குறித்தது என்றல் பொருந்தும்.
209-210. கரிக்குருவிக்கு அருள்புரிந்தமை திருவிளையாடற் புராணத்துட் கூறப்பட்டது. அதுவும், எளியோர்க்கு அருளுதலையே விளக்கி நிற்கும், இரும் புலன் - வரம்பில்லனவாய் எழும் ஐம்புல வேட்கைகள். நிரம்புதலை, `விடிதல்` என்னும் வழக்குப் பற்றி, புலர என்றார். அஃதாவது. `இனி இவை அமையும்` என்று ஒழிதல். இசைந் தனை - வந்து பொருந்தினாய். `உனக்கு வணக்கம்` என்க.
211-212. படி உறப் பயின்ற - நிலத்தின்கண்ணே பல நாள் எம்முடன் மிகப் பழகின. பாவக - வேடத்தையுடையவனே. இறைவன் குருவாகி வந்த கோலத்தை, `வேடம்` என்றார். தன்பொருட்டன்றிப் பிறர்பொருட்டுக் கொண்டதாகலின், ``ஒருவனே இராவணாதி பாவகம் உற்றாற் போல``(சிவஞான சித்தி, சூ. 1.67) என்றதும் காண்க. அடி நடு ஈறு - உலகத்தின் தோற்றம் நிலை இறுதி. அவற்றைச் செய்பவனை அவையாகவே அருளினார்.
213-214. நானிலம் - பூமி. `நாகலோகம் முதலிய மூவுலகத்தி லும் புகாமல்` என்றது `பிறவி எய்தாமல்` என்றபடி. பரகதி - மேலான நிலை; வீடுபேறு. பாண்டியற்கு அருளியது, அடிகள் நிமித்தமாக அவனும் காண எழுந்தருளிவந்தது.
215-216. ஒழிவு அற - எப்பொருளும் எஞ்சுதல் இல்லையாக. நிறைந்த - எல்லாவற்றிலும் நிறைந்து நிற்கின்ற. செழுமலர்ச் சிவபுரம்- உலகமாகிய கொடிக்குச் செம்மையான பூப்போலச் சிறந்து நிற்கும் சிவலோகம்; குறிப்புருவகம். திருக்கயிலையைச் சேக்கிழார் இங்ஙனம் (தி.12 திருமலைச் சிறப்பு. 3) சிறப்பித்தல் காண்க, ஒளிவடிவாய் நிற்றல் பற்றிச் செழுமை கூறினார்.
217-218. கழுநீர் மாலை பற்றி மேலே (அடி.201.) கூறப் பட்டது. மையல் - மயக்கம்; திரிபுணர்வு. துணித்தல் - அறுத்தல்.
219-220. பிழைப்பு - பொருந்தாதது. வாய்ப்பு - பொருந்து வது. இத்தொழிற் பெயர்கள் இரண்டும் ஆகுபெயராய் நின்று இவற்றை யுடைய பொருளைக் குறித்தன. `ஒன்றும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. `குழைத்த` என்பது, உன்னைக் `குழைவித்தற்குச் செய்த` எனக் காரணத்தின்மேல் நின்றது. ``அன்போடியைந்த வழக்கு`` (குறள். 73). என்றதில், `இயைந்த` என்றதுபோல.
221- 222. திரிபுரம் வகையால் மூன்றாயினும், அதனுட்பட்ட நகரங்கள் பலவாதல் பற்றி, ``பல`` என்றார். அன்றி. ஒன்றல்லன வெல்லாம், `பல` எனப்படுதல் பற்றி, அவ்வாறு அருளினார் என்றலு மாம். புராணன் - பழையோன். பரம் பரஞ்சோதி - மேலானவற்றினும் மேலான ஒளி; பேரறிவு. `அதனையுடைய பரன்` என்க, ``பரன்`` என்றது, வாளா பெயராய் நின்றது.
223-225. புயங்கன் - பாம்பையணிந்தவன். `புயங்கம் என்ப தொருநடனத்தைச் செய்பவன்` எனவும் உரைப்ப. புராண காரணன் - காரணங்கள் பலவற்றிற்கும் காரணமாய் நிற்பவன். சயசய - வெல்க வெல்க.
இத் திருப்பாட்டும் கீர்த்தித்திருவகவலேபோல, நிலை மண்டில ஆசிரியம் என்க.

திருவண்டப் பகுதி



அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இன்னுழை கதிரில் துன்அணுப் புரையச் 5
சிறிய வாகப் பெரியோன் தெரியின்
வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும்
தோற்றமுஞ் சிறப்பும் ஈற்றொடு புணரிய
மாப்பே ரூழியும் நீக்கமும் நிலையும்
சூக்கமொடு தூலத்துச் 10
சூறை மாருதத் தெறியது வளியிற்
கொட்கப் பெயர்க்குங் குழகன் முழுவதும்
படைப்போற் படைக்கும் பழையோன் படைத்தவை
காப்போற் காக்குங் கடவுள் காப்பவை
கரப்போன் கரப்பவை கருதாக் 15
கருத்துடைக் கடவுள் திருத்தகும்
அறுவகைச் சமயத் தறுவகை யோர்க்கும்
வீடுபே றாய்நின்ற விண்ணோர் பகுதி
கீடம் புரையுங் கிழவோன் நாடொறும்
அருக்கனிற் சோதி அமைத்தோன் திருத்தகு 20
மதியின் தண்மை வைத்தோன் திண்திறல்
தீயின் வெம்மை செய்தோன் பொய்தீர்
வானிற் கலப்பு வைத்தோன் மேதகு
காலின் ஊக்கங் கண்டோன் நிழல்திகழ்
நீரின் இன்சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட 25
மண்ணின் திண்மை வைத்தோன் என்றென்
றெனைப்பல கோடி யெனைப் பல பிறவும்
அனைத்தனைத் தவ்வயின் அடைத்தோன் அஃதான்று
முன்னோன் காண்க முழுதோன் காண்க
தன்னே ரில்லோன் தானே காண்க 30
ஏனத் தொல்லெயி றணிந்தோன் காண்க
கானப் புலியுரி அரையோன் காண்க
நீற்றோன் காண்க நினைதொறும் நினைதொறும்
ஆற்றேன் காண்க அந்தோ கெடுவேன்
இன்னிசை வீணையில் இசைந்தோன் காண்க 35
அன்னதொன் றவ்வயின் அறிந்தோன் காண்க
பரமன் காண்க பழையோன் காண்க
பிரமன்மால் காணாப் பெரியோன் காண்க
அற்புதன் காண்க அநேகன் காண்க
சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க 40
சித்தமுஞ் செல்லாச் சேட்சியன் காண்க
பத்தி வலையிற் படுவோன் காண்க
ஒருவன் என்னும் ஒருவன் காண்க
விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க
அணுத்தருந் தன்மைஇல் ஐயோன் காண்க 45
இணைப்பரும் பெருமையில் ஈசன் காண்க

அரியதில் அரிய அரியோன் காண்க
மருவிஎப் பொருளும் வளர்ப்போன் காண்க
நூலுணர் வுணரா நுண்ணியோன் காண்க
மேலொடு கீழாய் விரிந்தோன் காண்க 50
அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க
பந்தமும் வீடும் படைப்போன் காண்க
நிற்பதுஞ் செல்வதும் ஆனோன் காண்க
கற்பமும் இறுதியுங் கண்டோன் காண்க
யாவரும் பெறவுறும் ஈசன் காண்க 55
தேவரும் அறியாச் சிவனே காண்க
பெண்ஆண் அலியெனும் பெற்றியன் காண்க
கண்ணால் யானுங் கண்டேன் காண்க

அருணனி சுரக்கும் அமுதே காண்க கருணையின் பெருமை கண்டேன் காண்க 60
புவனியிற் சேவடி தீண்டினன் காண்க
சிவனென யானுந் தேறினன் காண்க
அவனெனை ஆட்கொண் டருளினன் காண்க
குவளைக் கண்ணி கூறன் காண்க
அவளுந் தானும் உடனே காண்க 65
பரமா னந்தப் பழங்கட லதுவே
கருமா முகிலின் தோன்றித்
திருவார் பெருந்துறை வரையி லேறித்
திருத்தகு மின்னொளி திசைதிசை விரிய
ஐம்புலப் பந்தனை வாளர விரிய 70
வெந்துயர்க் கோடை மாத்தலை கரப்ப
நீடெழில் தோன்றி வாலொளி மிளிர
எந்தம் பிறவியிற் கோபம் மிகுத்து

முரசெறிந்து மாப்பெருங் கருணையின் முழங்கிப்
பூப்புரை அஞ்சலி காந்தள் காட்ட 75
எஞ்சா இன்னருள் நுண்துளி கொள்ளச்
செஞ்சுடர் வெள்ளம் திசைதிசை தெவிட்ட - வரையுறக்
கேதக் குட்டங் கையற வோங்கி
இருமுச் சமயத் தொருபேய்த் தேரினை
நீர்நசை தரவரும் நெடுங்கண் மான்கணம் 80
தவப்பெரு வாயிடைப் பருகித் தளர்வொடும்
அவப்பெருந் தாபம் நீங்கா தசைந்தன
ஆயிடை வானப் பேரியாற் றகவயிற்
பாய்ந்தெழுந் தின்பப் பெருஞ்சுழி கொழித்துச்
சுழித்தெம் பந்தமாக் கரைபொரு தலைத்திடித் 85
தூழூழ் ஓங்கிய நங்கள்
இருவினை மாமரம் வேர்ப றித்தெழுந்
துருவ அருள் நீர் ஓட்டா அருவரைச்
சந்தின் வான்சிறை கட்டி மட்டவிழ்
வெறிமலர்க் குளவாய் கோலி நிறையகில் 90
மாப்புகைக் கறை சேர் வண்டுடைக் குளத்தின்
மீக்கொள மேன்மேன் மகிழ்தலின் நோக்கி
அருச்சனை வயலுள் அன்புவித் திட்டுத்
தொண்ட உழவ ராரத் தந்த
அண்டத் தரும்பெறல் மேகன் வாழ்க 95
கரும்பணக் கச்சைக் கடவுள் வாழ்க
அருந்தவர்க் கருளும் ஆதி வாழ்க
அச்சந் தவிர்த்த சேவகன் வாழ்க
நிச்சலும் ஈர்த்தாட் கொள்வோன் வாழ்க
சூழிருந் துன்பந் துடைப்போன் வாழ்க 100
எய்தினர்க் காரமு தளிப்போன் வாழ்க
கூரிருட் கூத்தொடு குனிப்போன் வாழ்க
பேரமைத் தோளி காதலன் வாழ்க ஏதிலர்க் கேதிலெம் இறைவன் வாழ்க
காதலர்க் கெய்ப்பினில் வைப்பு வாழ்க 105
நச்சர வாட்டிய நம்பன் போற்றி
பிச்செமை யேற்றிய பெரியோன் போற்றி
நீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி - நாற்றிசை
நடப்பன நடாஅய்க் கிடப்பன கிடாஅய்
நிற்பன நிறீஇச் 110
சொற்பதங் கடந்த தொல்லோன்
உள்ளத் துணர்ச்சியிற் கொள்ளவும் படாஅன்
கண்முதற் புலனாற் காட்சியும் இல்லோன்
விண்முதற் பூதம் வெளிப்பட வகுத்தோன்
பூவின் நாற்றம் போன்றுயர்ந் தெங்கும் 115
ஒழிவற நிறைந்து மேவிய பெருமை
இன்றெனக் கெளிவந் தருளி
அழிதரும் ஆக்கை ஒழியச்செய்த ஒண்பொருள்
இன்றெனக் கெளிவந் திருந்தனன் போற்றி
அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி 120
ஊற்றிருந் துள்ளங் களிப்போன் போற்றி
ஆற்றா இன்பம் அலர்ந்தலை செய்யப்
போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன்
மரகதக் குவாஅல் மாமணிப் பிறக்கம்
மின்னொளி கொண்ட பொன்னொளி திகழத் 125
திசைமுகன் சென்று தேடினர்க் கொளித்தும்
முறையுளி யொற்றி முயன்றவர்க் கொளித்தும்
ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்
துற்றவர் வருந்த உறைப்பவர்க் கொளித்தும்
மறைத்திறம் நோக்கி வருந்தினர்க் கொளித்தும் 130
இத்தந் திரத்திற் காண்டுமென் றிருந்தோர்க்
கத்தந் திரத்தின் அவ்வயின் ஒளித்தும்
முனிவற நோக்கி நனிவரக் கௌவி
ஆணெனத் தோன்றி அலியெனப் பெயர்ந்து வாணுதற் பெண்ணென ஒளித்தும் சேண்வயின் 135
ஐம்புலன் செலவிடுத் தருவரை தொறும்போய்த்
துற்றவை துறந்த வெற்றுயி ராக்கை
அருந்தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும்
ஒன்றுண் டில்லை யென்றறி வொளித்தும்

பண்டே பயில்தொறும் இன்றே பயில்தொறும் 140
ஒளிக்குஞ் சோரனைக் கண்டனம்
ஆர்மின் ஆர்மின் நாண்மலர்ப் பிணையலின்
தாள்தளை யிடுமின்
சுற்றுமின் சூழ்மின் தொடர்மின் விடேன்மின்
பற்றுமின் என்றவர் பற்றுமுற் றொளித்தும் 145
தன்னே ரில்லோன் தானேயான தன்மை
என்னே ரனையோர் கேட்கவந் தியம்பி
அறைகூவி ஆட்கொண் டருளி
மறையோர் கோலங் காட்டி யருளலும்
உளையா அன்பென் புருக வோலமிட் 150 டலைகடல் திரையின் ஆர்த்தார்த் தோங்கித்
தலைதடு மாறா வீழ்ந்துபுரண் டலறிப்
பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து
நாட்டவர் மருளவுங் கேட்டவர் வியப்பவும்
கடக்களி றேற்றாத் தடப்பெரு மதத்தின் 155
ஆற்றே னாக அவயவஞ் சுவைதரு
கோற்றேன் கொண்டு செய்தனன்
ஏற்றார் மூதூர் எழில்நகை எரியின்
வீழ்வித் தாங்கன்
றருட்பெருந் தீயின் அடியோம் அடிக்குடில் 160
ஒருத்தரும் வழாமை யொடுக்கினன்
தடக்கையின் நெல்லிக் கனியெனக் காயினன்
சொல்லுவ தறியேன் வாழி முறையோ
தரியேன் நாயேன் தான்எனைச் செய்தது
தெரியேன் ஆவா செத்தேன் அடியேற் 165
கருளிய தறியேன் பருகியும் ஆரேன்
விழுங்கியும் ஒல்ல கில்லேன்
செழுந்தண் பாற்கடல் திரைபுரைவித்
துவாக்கடல் நள்ளுநீர் உள்ளகந் ததும்ப
வாக்கிறந் தமுதம் மயிர்க்கால் தோறுந் 170
தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊன்தழை
குரம்பை தோறும் நாயுட லகத்தே
குரம்பைகொண் டின்தேன் பாய்த்தி நிரம்பிய
அற்புத மான அமுத தாரைகள்
எற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவ 175
துள்ளங் கொண்டோர் உருச்செய் தாங்கெனக்
கள்ளூ றாக்கை யமைத்தனன் ஒள்ளிய
கன்னற் கனிதேர் களிறெனக் கடைமுறை
என்னையும் இருப்ப தாக்கினன் என்னிற்
கருணை வான்தேன் கலக்க 180
அருளொடு பராவமு தாக்கினன்
பிரமன்மா லறியாப் பெற்றி யோனே.




பொழிப்புரை :

ஆராயுமிடத்து அண்டம் எனப்படும் பேருலகின் பகுதியாகிய, உருண்டை வடிவின் விளக்கமும் அளத்தற்கரிதாகிய தன்மையும் வளமான பெருங்காட்சியும் ஒன்றுக்கொன்று தொடர்ந்து நின்ற அழகைச் சொல்லுமிடத்து நூற்றொரு கோடியினும் மேற்பட்டு விரிந்துள்ளன, அவை, வீட்டில் நுழைகின்ற சூரிய கிரணத்தில் நெருங்கிய அணுக்களை நிகர்க்கச் சிறியவையாகும்படி பெரியவனாய் இருப்பவன்.
பிரமனும் அவனைச் சூழ்ந்தவரும் ஆகிய அவரது தொகுதி யோடு திருமாலும் அவரைச் சூழ்ந்தோரது மிக்க கூட்டமும் உலகத்தினது உற்பத்தியும் நிலைபேறும் ஆகியவற்றை இறுதியடையச்செய்த மிகப் பெரிய ஊழிக்காலமும், அவ்வூழியின் நீக்கமும் அந்நீக்கத்தின் பின் உலகம் முன்போலத் தோன்றி நிலைபெறுதலும் பெரிதாகவும் சிறிதாகவும் வீசுகின்ற சூறைக் காற்றாகிய வீசும் வளியில் அகப்பட்ட பொருள் போலச் சுழல, அவற்றை நிலை பெயர்க்கின்ற அழகன்.
எல்லாப் பொருள்களையும் படைக்கும் பிரமனைப் படைக் கின்ற பழையவன்.
படைக்கப்பட்ட பொருளைக் காப்போனாகிய திருமாலைக் காக்கின்ற கடவுள்.
காக்கப்பட்ட பொருளை அழிப்பவன்.
அழிக்கப்பட்டவற்றை நினையாத கருத்தையுடைய கடவுள்.
சிறப்புப் பொருந்திய அறுவகைப்பட்ட சமயத்தையுடைய, ஆறுவகை ஒழுக்கத்தை உடையவர்க்கும் முத்திப் பேறாய் நின்றும், தேவர் பகுதிகள் புழுக்களை ஒக்க நிற்கின்ற பெரியோன், தினந்தோறும் சூரியனில் ஒளியை அமைத்தவன்.
அழகு பொருந்திய சந்திரனில் குளிர்ச்சியை வைத்தவன்.
வலிய வெற்றியையுடைய நெருப்பில் வெப்பத்தை உண்டாக்கினவன்.
உண்மையாகிய ஆகாயத்தில் வியாபிக்கும் தன்மையை வைத்தவன்.
மேன்மை பொருந்திய காற்றில் அசைவை அமைத்தவன்.
நிழல் பொருந்திய நீரினிடத்து இனிய சுவையை வைத்தவன்.
வெளிப்படையாக மண்ணிடத்து வலிமையை அமைத்தவன்.
இவ்வாறே எந்நாளிலும் எவ்வளவு பல கோடியாகிய எவ்வளவோ பல பிற பொருள்களிலும், அவற்றின் தன்மையை அவ்வப் பொருள்களில் அமைத்து வைத்தவன்.
அதுவன்றி எப்பொருட்கும் முன்னே உள்ளவன்.
முழுதும் நிறைந்தவன்.
தனக்கு நிகர் இல்லாதவன்.
பழைமையாகிய பன்றியின் பல்லை அணிந்தவன்.
புலியினது தோலை அரையில் உடுத்தவன்.
திருவெண்ணீற்றை அணிந்தவன்.
அவனது பிரிவை நினைக்கும்தோறும் பொறுக்கமாட்டேன்.
ஐயோ! நான் கெட்டொழிவேன்.
இனிய இசை வீணையில் பொருந்தியிருப்பது போல, உயிர்களில் நிறைந்து இருப்பவன்.
அப்படிப்பட்டதாகிய வீணை இசை ஒன்றை அவ்விடத்து அறிந்தவன்.
மேலோன்.
பழையவன்.
பிரமனும் திருமாலும் காணவொண்ணாத பெரியவன்.
வியத்தகு தன்மைகள் உடையவன்.
எல்லாப் பொருளுமாய் இருப்பவன்.
சொல்லின் நிலையைக் கடந்த பழையோன்.
மனம் சென்று பற்றாத தூரத்தில் இருப்பவன்.
பத்தியாகிய வலையில் அகப்படுவோன்.
ஒருவன் என்னும் சொல்லால் குறிப்பிடப்படும் ஒருவன்.
பரந்த உலகம் முழுவதுமாகிப் பரந்தவன்.
அணுப் போன்ற தன்மையினையுடைய நுண்ணியவன்.
ஒப்புச் சொல்லுதற்கு அரிய பொருள்யாதினும் அரிய பொருளாகிய அரியவன்.
பொருந்தி எல்லாப் பொருளையும் காப்பவன்.
நூலறிவால் உணரப்படாத நுட்பம் உடையவன்.
மேலும் கீழுமாகிய எவ்விடத்திலும் பரவி நிற்பவன்.
முடிவும் முதலும் நீங்கினவன்.
உயிர்கட்குப் பிறவியாகிய கட்டும், வீடுபேறும் உண்டாக்குவோன்.
இயங்காப் பொருளும் ஆனவன்.
கற்ப காலத்தையும் அதன் முடிவையும் கண்டவன்.
எல்லோரும் அடையும் பொருட்டு எழுந்தருளுகின்ற தலைவன்.
தேவரும் அறிய முடியாத சிவபெருமான்.
பெண் ஆண் அலி என்னும் பாகுபாடுகளில் கலந்துள்ள தன்மையன்.
அப்பெருமானை நானும் கண்ணால் கண்டேன்.
அருள் மிகவும் சுரக்கின்ற அமிர்தம்.
அப்பொருளினது பெருங்கருணையின் ஏற்றத்தைக் கண்டேன்.
அவன் தன் திருவடிகள் பூமியில் படும்படி எழுந்தருளி வந்தான்.
அவனைச் சிவபிரான் என்று நானும் தெளிந்து கொண்டேன்.
அவன் என்னை அடிமை கொண்டருளினன்.
நீலமலர் போலும் கண்களையுடைய உமாதேவியின் பாகன்.
அத்தகைய உமாதேவியும் தானும் பிரிவின்றியே இருப்பவன்.
மேன்மையான பேரின்பக் கடல் முழுவதுமே, சூல் கொண்ட கரிய பெருமேகம் போல வடிவெடுத்து, அழகு நிறைந்த திருப்பெருந்துறை என்னும் மலைமேல் ஏறித் தக்க அருளாகிய மின்னல் வெளிச்ச மானது ஒவ்வொரு திசையிலும் பரவ, ஐவகை வேட்கைப் பிணிப் பாகிய, வாள் போன்ற கொடிய பாம்புகள் கெட்டு ஓட, பிறவி என்னும் கடுந்துன்பமாகிய வேனிலானது தனது விரிந்த தலையை மறைத்துக் கொள்ள, மிகுந்த அழகுடைய தோன்றிச் செடி போலத் தோன்றிய ஆசிரியரது ஞானவொளி விளங்க, எங்கள் பிறவிகளாகிய தம்பலப் பூச்சிகள் செறிந்து தோன்ற, இறைவனின் இரக்கமானது இனிய முரசு அடித்தாற் போல முழக்கம் செய்ய, பூப்போன்றனவாயுள்ள அடியவர் கூப்பிய கைகள் காந்தள் மலர்போல விளங்க, குறையாத இன்பம் தரும் அருளானது சிறிய துளிகளின் வடிவத்தைக் கொள்ள, நேர்மையான பேரறிவாகிய வெள்ளம் திக்கெங்கும் பரவ, துன்பமாகிய குளம் கரையழிய, மலைச் சிகரமளவுக்குப் பொருந்துமாறு உயர்ந்தும், ஆறு சமயங்களாகிய கானல் நீரினை நீர் வேட்கையுண்டாக வந்த நீண்ட கண்களையுடைய மான் கூட்டம் போன்ற சிற்றறிவு உயிர்கள் தமது அகன்ற பெருவாயினால் பருகியும், நடந்த தளர்ச்சியும் மிகுந்த தாகமும் நீங்கப் பெறாமல் உழன்றன.
அத்தருணத்தில், அந்த வானப் பேராற்றின் உள்ளிடத்தே புகுந்து பெருகி, இன்பப் பெருஞ் சுழலினை உண்டாக்கி, மெய்யாகிய மணிகளை வாரிக் கொண்டு, எமது பாசக்கட்டாகிய கரைகளை மோதி அலைத்து உடைத்து, முறை முறையாய் வளர்ந்து வந்த எங்களுடைய நல்வினை தீவினை என்னும் இருவினைகளாகிய பெரிய மரங்களை வேரோடு பிடுங்கி மிகுந்து வந்த அழகுமிக்க அருள் வெள்ளத்தைச் செலுத்தித் தொண்டராகிய உழவர், கடத்தற்கரிய எல்லையையுடைய சாந்தம் என்னும் பெரிய அணையைக் கட்டி, தேனோடு விரிந்த வாசனையுடைய மலர் போன்ற இருதயமாகிய குளத்திற்கு உண்மையாகிய நீர் வாயினை அமைத்து, பொறியடக்கம் என்னும் சிறந்த அகிற் புகை சேரும் வரம்பினையுடைய ஓங்காரமாகிய வண்டு ஒலிக்கும் உள்ளமாகிய குளத்திலே அருள் வெள்ளமானது மிகுதியாக மேலும் மேலும் நிறைவதைப் பார்த்து, வழிபாடு என்னும் வயலுள் அன்பு என்னும் வித்தை விதைத்துச் சிவபோகமாகிய விளைவைத் துய்க்குமாறு உதவிய உலகெங்கும் பெறுதற்கரிய மேகம் போன்றவன் வாழ்க!
கரிய படமுடைய பாம்பைக் கச்சையாக அணிந்த கடவுள் வாழ்க.
அரிய தவத்தினருக்கு அருளுகின்ற முதல்வன் வாழ்க.
பிறவி அச்சத்தை நீக்கின வீரன் வாழ்க.
நாள்தோறும் அடியார்களை வலிய இழுத்து ஆட்கொள்வோன் வாழ்க.
எம்மை வளைத்துக் கொள்கின்ற பெருந்துன்பத்தை நீக்குவோன் வாழ்க.
தன்னை அடைந்தவர்க்கு ஆர் அமுது அளிப்போன் வாழ்க.
மிகுந்த இருளில் பல வகைக் கூத்தொடு நடிப்போன் வாழ்க.
பெரிய மூங்கில் போலும் தோள்களை உடைய உமாதேவிக்கு அன்பன் வாழ்க.
தன்னை வணங்காது அயலாய் இருப்பார்க்கு அயலவனாயிருக்கிற எம் தலைவன் வாழ்க.
அன்பர்க்கு இளைத்த காலத்தில் சேமநிதி போல்வான் வாழ்க.
நஞ்சையுடைய பாம்பை ஆட்டிய நம் பெருமானுக்கு வணக்கம்.
எம்மைத் தனது அருட்பித்தேற்றின பெரியவனுக்கு வணக்கம்.
திருவெண்ணீற்றுப் பூச்சொடு தோன்ற வல்லவனுக்கு வணக்கம்.
நான்கு திக்கிலும் நடப்பவற்றை நடத்தி கிடப்பவற்றைக் கிடத்தி, நிற்பவற்றை நிறுத்திச் சொல்லளவைக் கடந்த பழையோன்.
மன உணர்ச்சியால் கொள்ளப் படாதவன், கண் முதலாகிய பொறி களுக்குக் காணவும் படாதவன்.
ஆகாயம் முதலிய பூதங்களை வெளிப்படையாகத் தோன்றப் படைத்தவன்.
மலரின் மணம் போன்று ஓங்கி எவ்விடத்தும் நீக்கமில்லாமல் நிறைந்து பொருந்திய தன்மையை இப்பொழுது, அடியேனுக்கு எளிதாக வந்து உணர்த்தியருளி அழிகின்ற இவ்வுடம்பை ஒழியச் செய்த சிறந்த பொருளானவன்.
இன்று எனக்கு எளியவனாய் என் உள்ளத்தில் வீற்றிருந்தவனுக்கு வணக்கம்; கனிந்து உருகுகின்ற உடம்பை அருள் செய்தவனுக்கு வணக்கம்; இன்ப ஊற்றாயிருந்து மனத்தை மகிழ்விப்பவனுக்கு வணக்கம்.
தாங்க ஒண்ணாத இன்பவெள்ளம் பரவி அலை வீச அதனை ஏற்றுப் போற்றாத உடம்பைத் தாங்குதலை விரும்பேன்.
பச்சை மணியின் குவியலும் சிறந்த செம்மணியின் பெருக்கமும், மின்னலின் ஒளியைத் தன்னிடத்தே கொண்ட ஒரு பொன்னொளி போல் விளங்க, மேலும் கீழும் போய்த் தேடின பிரமனுக்கும் திருமாலுக்கும் மறைந்தும், யோக முறைப்படி ஒன்றி நின்று முயன்றவர்க்கு மறைந்தும், ஒருமைப்பாடு கொண்டு நோக்குகின்ற மனத்தையுடைய உறவினர் வருந்தும்படி உறுதியோடு இருப்பவர்க்கு மறைந்தும் வேதங்களின் பொருட் கூறுபாடுகளை ஆராய்ந்து பார்த்து வருந்தினவர்க்கு மறைந்தும், இவ்வுபாயம் வழியாகக் காண்போம் என்று இருந்தவர்க்கு, அவ்வுபாயத்தில், அவ்விடத்திலே மறைந்தும், கோபம் இல்லாமல் பார்த்து மிகுதியாகப் பற்றி, ஆண் போலத் தோன்றியும், அலிபோல இயங்கியும், ஒளிபொருந்திய நெற்றியை உடைய பெண் போலக் காணப்படும் தன் இயல்பைக் காட்டாது மறைந்தும், தூரத்தில் ஐம்புலன்களைப் போக நீக்கி அரிய மலைதோறும் சென்று, பொருந்தின பற்றுகளை எல்லாம் விட்ட வெற்றுயிரோடு கூடிய உடம்பையுடைய அரிய தவத்தினர் நோக்குக்கும் செம்மையாக மறைந்தும், ஒரு பொருள் உண்டு என்றும் இல்லை என்றும் ஐயுற்ற அறிவுக்கு மறைந்தும், முன்னே பழகிய காலத்திலும் இப்பொழுது பழகுங்காலத்திலும் எப்பொழுதும் மறைகின்ற கள்ளனைக் கண்டோம்.
ஆரவாரியுங்கள்; ஆரவாரியுங்கள்; புதிய மலர் மாலைகளால் திருவடியைக் கட்டுங்கள்; சுற்றுங்கள்; சூழுங்கள்; பின் தொடருங்கள்; விடாதீர் பிடியுங்கள் என்று சொல்லியவர்களது பற்றுதலுக்கு முழுதும் மறைந்தும், தனக்கு நிகரில்லாதவன் தானேயாகிய தன்மையை என் போல்வார் கேட்கும்படி வந்து சொல்லி வலிந்து அழைத்து, அடிமை கொண்டருளி வேதியர் கோலத்தைக் காட்டியருளுதலும் வருந்தி என்பு உருக அன்பினால் முறையிட்டு, அசைகின்ற கடல் அலைகள் போல இடையறாது ஆரவாரித்து மேலெழுந்து தலைதடுமாறி வீழ்ந்து புரண்டு அரற்றி, பித்தர் போல் மயங்கி, வெறி பிடித்தவர் போலக் களித்து, நாட்டார் மயக்கம் கொள்ளவும் கேட்டவர் வியப்புக் கொள்ளவும் மதயானையும் ஏற்கப் பெறாத மிகப்பெரிய மதத்தால் தரியேனாக, என் உறுப்புகளைத் தீஞ்சுவையினைத் தருகின்ற கொம்புத்தேன் கொண்டு ஆக்கினான்.
பகைவருடைய பழைய ஊராகிய மூன்று புரங்களை அழகிய நகையாகிய நெருப்பினால் அழித்தது போல, அக் காலத்தில் அருளாகிய பெரிய நெருப்பினால், அடியோங்களுக்கு உரிய குடிலாகிய உடம்பை ஒருத்தரேனும் தவறாதபடி அடங்கப் பண்ணினான்.
அடியேனுக்குப் பெரிய கையிலுள்ள நெல்லிக்கனி போன்றிருந்தான்.
இவ்வாறு எனக்கு எளி வந்த கருணையின் பெருமையை யான் சொல்லுமாறு அறியேன்.
அவன் வாழ்க.
அவன் என்னைச் செய்த நிலையை நாயினேன் ஆற்றேன்.
அதன் காரணத்தையும் அறிந்திலேன்.
இது எனக்குச் செய்யும் முறையோ? ஐயோ செத்தேன்; அடியேனுக்குச் செய்த அருளையும் அறியேன்.
சிறுகச் சிறுகக் குடித்தும் நிறைவு பெற்றிலேன்: முழுதுமாய் விழுங்கியும் பொறுக்க மாட்டேன்.
செழுமையாகிய குளிர்ந்த பாற்கடலின் அலைகளை உயரச்செய்து நிறைமதி நாளில் பெருகும் கடலில் பொருந்திய நீர்போல உள்ளத்தினுள்ளே பொங்க, சொல்லிறந்த அமுதமானது ஒவ்வொரு மயிர்க் காலிலும் நிறையச் செய்தனன்; நாயினேனது உடலின் கண்ணே இருக்கை கொண்டு கொடியேனுடைய மாமிசம் செழித்த ஒவ்வொரு மடையிலும், இனிய தேனைச் பாய்ச்சி நிறைந்த ஆச்சரியமான அமுத தாரைகளை எலும்புத் துளை தோறும் ஏறச் செய்தனன்.
உருகுவதாகிய மனத்தைக் கொண்டு ஓர் உருவம் அமைத்தாற் போல அடியேனுக்கு மிகுதியும் உருகுகின்ற உடம்பை அமைத்தான்.
இனிதாகிய கனியைத் தேடுகின்ற யானை போல இறுதியில், அடியேனையும் அவனையே நாடி இருப்பதாகச் செய்தருளினன்.
என்னுள்ளே அருளாகிய பெருந்தேன் பாயும்படி, அருளொடு எழுந்தருளி மிக்க அமுதத்தினையும் அமைத்தான்.
பிரமனும் திருமாலும் தேடியும் அறியாத தன்மையுடையான்.


குறிப்புரை :


இது தில்லையில் அருளிச்செய்யப்பட்டதாகவே, யாண்டும் கூறப்படுகின்றது.
`திருவண்டப் பகுதி` என்பது, முதற்குறிப்பாற் பெற்ற பெயர், `ஆத்திசூடி` முதலியனபோல.
இதன்கண் அடிகள் இறைவனது பெருமைகள் பலவற்றையும் விரித்துக் கூறி, அன்னபெருமைகளை யுடையவன், தமக்கு மிக எளிவந்து அருள்புரிந்தமையை வியந்து, வாழ்த்துதலும், போற்றுதலும் செய்கின்றார்.
`சிவனது தூல சூக்குமத்தை வியந்தது` என்னும் பழைய குறிப்பும் இதனை ஒருவாறு உணர்த்தும்.
தொல்காப்பியனார், `குட்டம் வந்த ஆசிரியம்` என்றதனைப் பிற்காலத்தார், `இணைக் குறள் ஆசிரியப்பா` என்றனர்.
1-6, அண்டப் பகுதி - அண்டங்களாகிய இடப்பகுதிகள்.
உருண்டை, `உண்டை` என மருவி, அத்தன்மைத்தாய வடிவத்தை உணர்த்திற்று.
பிறக்கம் - விளக்கம்; பொலிவு.
`அளப்பருந் தன்மையை யுடைய காட்சி` என்க; `காட்சியோடு` என உருபு விரிக்க.
``ஒன்றனுக் கொன்று`` என்றதன்பின், `பெரிதாய்` என்பது எஞ்சிநின்றது.
`நின்ற` என்பதன் அகரம் தொகுத்தலாயிற்று.
எழில் - எழுச்சி; பரப்பு.
``நூற்றொரு கோடியின்`` என்றது, `ஒருநூறு கோடி` என்றவாறு.
``கோடி`` என்றது, அவ்வளவினதாகிய யோசனையைக் குறித்த ஆகு பெயர்.
`கோடியினின்றும் மிகுதிப்பட விரிந்தன` என்க.
`பிருதிவி தத்துவம் முதலாகத் தொடங்கி மேற்செல்லும் தத்துவங்களுள் பிருதிவி தத்துவத்தின் அண்டம் எப்பக்கத்திலும் நூறு கோடி யோசனை பரப்புடையது` என்றும், `அதன் மேல் மூலப் பகுதி காறும் உள்ள அண்டங்களுள் ஒன்றுபோல மற்றொன்று பத்து மடங்கு பரப்புடையது` என்றும், `அவற்றிற்குமேல், நூறுமடங்கு, ஆயிர மடங்கு என்று இவ்வாறு சிவதத்துவம் முடிய உள்ள தத்துவ அண்டங்கள் விரிந்து கிடக்கின்றன` என்றும் ஆகமங்கள் கூறுதலின், இவ்வாறு அருளிச்செய்தார்.
``விரிந்தன`` என்ற சொற்குறிப்பானும், இங்குப் பெருமை கூறுதலே கருத்தாகலானும், ``நூற்றொரு கோடி`` என்றது, விரிவையன்றித் தொகையையன்றென்க.
``விரிந்தன`` என்றது `விரிந்தனவாம்` என வினைப்பெயர்.
இதன்பின், ``அவை`` என்னும் சுட்டுப் பெயர் வருவிக்க.
இல்நுழை கதிரில் துன் அணுப் புரைய - இல்லத்துள் புழைவழியாகப் புகும் ஞாயிற்றின் ஒளியில் நெருங்கித் தோன்றும் நுண்துகள் போல.
சிறிய ஆக - சிறியவாய்த் தோன்றும்படி.
பெரியோன் - பெரியோனாய் நிற்பவன்.
இறைவனது பெரு வடிவொடு நோக்க, மேற் கூறிய அண்டங்கள் சிறுதுகள்களாம் என்றபடி.
இதனானே, இந்நுண்துகள்கள் மேற்கூறிய அண்டங்கள்போலப் பெரியவாய்த் தோன்றும்படி அத்துணைச்சிறியோனாய் நிற்பவன் என்பதும் பெறப்படும்.
``அண்டங்க ளெல்லாம் அணுவாக அணுக்க ளெல்லாம் அண்டங்க ளாகப் பெரிதாய்ச்சிறி தாயி னானும்`` என்ற (பாயிரம்.7) பரஞ்சோதியார் திருவிளையாடற்புராணம் காண்க.
இதனால், இறைவனது வியாபகத் தன்மை கூறியவாறு.
7-12. மேற்போந்த, `தெரியின்` என்பதனை இங்குக் கூட்டி, `அவனது பெருமைகளை ஆராயுமிடத்து` என உரைக்க.
வேதியன் - பிரமன்.
தொகை - கூட்டம்.
மிகுதி - பரப்பு.
பிரம விட்டுணுக்கள் இவ்வண்டத்தில் உள்ளவாறே ஏனைய பல்கோடி அண்டங்களினும் உளராகலின், அவர்களையே, ``தொகை`` என்றும், ``மிகுதி`` என்றும் அருளினார்.
இவ்வண்டத்தில் உள்ளாரோடு ஒத்த பிரம விட்டுணுக்களது கூட்டத்தை, இவர்களுடைய கூட்டம் என உடைமையாக்கி ஓதினார், இனம் பற்றி.
சிறப்பு - வளர்ச்சி; எனவே, நிலைத்தலாயிற்று.
`பிரமரது தொகுதியும், மாயோரது மிகுதியும் தோன்றுதலையும், நிற்றலையும், இறுதியோடே புணர்ந்த ஊழி` என்க.
`புணரிய ஊழி` என்பதில், பெயரெச்சம் காலப்பெயர் கொண்டது.
ஊழி, வடமொழியில், `கற்பம்` எனப்படும்.
பிரமனும், மாயோனும் செயலொழிந்து துயிலுங் காலம், அவரவர்க்கு `நித்திய கற்பம்` என்றும், அவர் இறந்துபடுங்காலம் அவரவர்க்கு, `மகாகற்பம்` என்றும் கூறப்படுமாகலின், அவற்றுள் அவர் இறந்துபடுங் காலமாகிய மகாகற்பம் என்பது அறிவித்தற்கு, ``மாப்பேரூழி`` என்றார்.
ஆகவே, அவற்றுள், `அவரது தோன்றல், நிற்றல், அழிதல்` என்னும் மூன்றும் நிகழ்ந்து முற்றுப்பெறுமாதலின், அதனை, ``தோற்றமும் சிறப்பும் ஈற்றொடு புணரிய`` என்று விளக் கினார்.
`ஊழி` என்னும் அஃறிணை இயற்பெயர், ஈண்டுப் பன்மையின் மேலது.
``ஊழியும்`` என்றது, `ஊழியினது தோற்றமும்` என்றவாறு.
எனவே, பின்னர்க் குறித்த நீங்குதலும் (முடிவெய்துதலும்) நிலைத் தலும் (நிகழ்தலும்) ஊழியினுடையவேயாயின.
`முதலும் முடிவும்` எனக் கூறி, நடுவை இறுதிக்கட் கூறலும் மரபாகலின், நீக்கத்தை இடை வைத்தார்.
சூக்கமொடுதூலத்து - நுண்மையும், பருமையும் ஆய இருநிலைகளிடத்தும்; இதனை, ``கொட்க`` என வருவதனோடு இயைக்க.
நுண்மை, ஒடுக்கமும், பருமை, தோற்றம் நிகழ்ச்சி என்னும் இரண்டும் ஆதல் அறிக.
``சூறை மாருதத்து`` என்பதனை இதனோடே கூட்டி நாற்சீரடியாக்கி, ``எறியது வளியின்`` என்பதனை இருசீரடி ஆக்குவாரும் உளர்.
அகவற்பாவினுள் வரும் இருசீரடிக்கு மூவசைச் சீராதல், ஆசிரிய உரிச்சீராதல், இரண்டுமாதல் அடுத்துவந்து நிற்பதே இன்னோசை பயப்பதாகலின், அது பொருந்தாமையறிக.
இவ்வாறு அடிவரையறை செய்யவே, ஓசை வேறு பாட்டானும், ஈண்டுரைக்கப் படும் பொருளே தோன்றுதல் காண்க.
சூறை மாருதம் - சூறாவளி; சுழல்காற்று.
மாருதத்து - மாருத மான நிலையில்.
`எறி வளி` என இயையும்.
`அவ்வளி` எனச் சுட்டாக ஓதற்பாலதனை, `அது வளி` என இரு பெயரொட்டாக ஓதினார், `அது காலை, அது போழ்து` என்றற் றொடக்கத்தனபோல.
வளியின் - வளி போல.
இதனை, ``பெயர்க்கும்`` என வருவதனோடு இயைக்க.
`மாப் பேரூழிகளது தோற்றங்களும், நிகழ்ச்சிகளும், முடிவுகளும், `நுண்மை, பருமை` என்னும் இருவகை நிலைகளில் தமக்கு ஏற்ற நிலை யிற் பொருந்திச் சுழன்று வருமாறு, சுழல் காற்றைப் போலச் சுழற்றுகின்ற குழகன்` என்க.
பிரம விட்டுணுக்கள் என்னும் காரணக் கடவுளர் முதலியோரையும், தோன்றி நின்று அழியச் செய்வது, ஊழி முதலிய பெயர்களைப் பெற்று விளங்கும் காலம்; அதனைத் தோன்றி நின்று அழியுமாறு செய்கின்றவன் இறைவன் என, அவனது முதன்மையை வியந்தவாறு.
மாப்பேரூழியது அளவை, சூறாவளியில் அகப்பட்டு விரையச் சுழலும் சிறு பொருள்களது சுழற்சியளவோடு ஒப்புமைப்படுத்தியது என்னையெனின், `அது தானும் நிலையுடைய தன்றி மாறித் தோன்றுவதேயாம்` என அதனது நிலையாமையை இனிது விளக்குதற் பொருட்டென்க.
உறங்கு வதுபோலும் சாக்கா டுறங்கி விழிப்பது போலும் பிறப்பு
எனத் திருவள்ளுவ நாயனாரும் (குறள். 339.)
நிலையாமையை இவ்வாறு விளக்குதல் காண்க.
எல்லாவற்றையும் ஆக்கிக் காத்து அழித்துச் சுழற்றி நிற்பது காலம்; அதனை அங்ஙனம் சுழலச் செய்பவன் இறைவன் என்றதனால், அவற்றின்வழிச் சுழல்வனவற்றையும் அங்ஙனம் சுழற்றுபவன் அவனே என்பது, தெற்றென விளங்கிக் கிடந்தது.
எனவே காலத்துட் படாதவன் இறைவன் ஒருவனேயன்றிப் பிறர் இல்லை என்பது பெறப்பட்டது.
சிவபெருமான் காலனைக் காலால் உதைத்தமை, `அவன் காலத்தைத் தன்வழி நடாத்துபவன்` என்பதையும், மார்க் கண்டேயர் அப்பெருமானை வழிபட்டு என்றும் பதினாறு வயதாய் இருக்கப் பெற்றமை, அவனை அடைந்தவரே காலத்தைக் கடப்பவராவர் என்பதையும் விளக்குவனவாம்.
இவ்வரலாறு இங்ஙனம் உலகறிய வழங்கி வருவதாகவும், அப்பெருமானை வழிபடுதலினும் சிறப்பாக ஒன்பான் கோள்கள் முதலிய காலக் கடவுளரை வழிபட்டுக் காலம் போக்குவாரது நிலையை நாம் என்னென்பது! காலம் தன்வயம் உடையதன்று; இறைவன் ஒருவனே தன்வயம் உடையவன்; காலம் அவன்வழிப்பட்டதே என்பதை, காலமே கடவுளாகக் கண்டனம் தொழிலுக்கென்னிற் காலமோ அறிவின் றாகும்; ஆயினும் காரி யங்கள் காலமே தரவே காண்டும்; காரணன் விதியினுக்குக் காலமும் கடவுள் ஏவ லால்துணைக் கார ணங்கான்.
என விளக்குகின்றது, சிவஞான சித்தி (சூ.1.10.).
``குழகன்`` என்றார், எல்லாவற்றையும் கொட்கப் பெயர்ப் பினும் தான் அப்பெயர்ச்சியுட்படாது, என்றும் ஒரு பெற்றியனாயே நிற்பான் என்பது அறிவித்தற்கு.
எனவே, ``கொட்கப் பெயர்க்கும்`` என்றதனால், அவனது முடிவிலாற்றலையும், ``குழகன்`` என்றதனால் அவனது தன்வயமுடைமையையும் குறித்தவாறாயிற்று.
13-19. ``முழுவதும்`` என்றதனை இவற்றொடு கூட்டிப் பொருள்கொள்க.
``முழுவதும்`` என்றது, அவரவரது எல்லைக் குட்பட்டன எல்லாவற்றையும் என்றதாம்.
``படைப்போன், காப் போன்`` என்ற விடத்துச் சொல்லுவாரது குறிப்பு, பொருள்மாத்திரை யன்றித் தொழிலொடு கூடிய பொருள் மேலதாதலின், அவை அத்தொழிலையுடைய பலர்க்கும் பொருந்துவனவாம்.
இவ்வாறு வருவதனை, ``ஒருபாற் கிளவி எனைப்பாற் கண்ணும் வருவகை தாமே வழக்கென மொழிப`` என்று அமைத்தார் தொல்காப்பியர் (பொருள்.222).
இதனை, `சாதியொருமை` என்ப.
``படைப்போன், காப்போன்`` என்றவற்றில் ஐயுருபு தொக்கு நிற்றல் வெளிப்படை.
``பழையோன்`` என்றதனால், அவனுக்கு முன்னே நின்று அவனைப் படைப்போர் ஒருவருமிலர் என்றவாறு ஆயிற்று.
இங்ஙனம் ஒருவராற் படைக்கப்படாது நிற்கும் நிலையை, `அனாதி` என்ப.
`காப்போனையும் காக்கும் முதல்வன்` என்றற்கு, ``காப்போற் காக்கும் கடவுள்`` என்றாராயினும், அதனானே, முன்னர் அவனைப் படைத்தலும் அடங்கிற்று.
கரப்போன் - அழிப்பவன்.
``படைப்போன், காப்போன்`` என்ற அவரோடொப்பக் கரப்போ னாகிய உருத்திரனைச் சுட்டி, `கரப்போற் கரக்குங் கடவுள்` என்னாது, சிவபெருமானையே கரப்போனாக அருளிச்செய்தார்.
அவன் ஏனை இருவர் போலச் சகலருட்பட்டு மீளப் பிறத்தலின்றி, அதிகாரமல வாசனை, பின்பு போகமல வாசனையாயும் இலயமல வாசனையாயும் தேய்ந்தொழிய வீடெய்துவானாகலின்.
எனவே, `அழித்தல்` என்பது, மீளப் பிறப்பாரிடத்தே செய்யப்படுவதாம் என்பது தெளிக.
``கரப்பவைகருதா`` என்றதற்கு, `அழிக்கப்படும் அவற்றை அவைநிலையுறுதலுறுங் காலத்து அழிக்கக் கருதாத` எனப் பொருள் கூறுக.
இதனால், அழித்தலைத் தனது ஆற்றல் வெளிப்படுத்தல் கருதி யாதல், பிறிதொன்று கருதியாதல் தன் பொருட்டாகச் செய்யாது, உயிர் களின் பொருட்டாகவே செய்தல் பெறப்பட்டது.
படவே ``கருத்துடை`` என்றதற்கு, `அருளுள்ளத்தை யுடைய` என்பது பொருளாயிற்று.
அழித்தல் உயிர்களை இளைப்பாற்றுதற் பொருட்டு என்பதனை, ``அழிப்பிளைப் பாற்றல்.............................. பார்த்திடில் அருளே எல்லாம்`` எனச் சிவஞான சித்தி விளக்குதல் காண்க (சூ.
1.
37.
).
``கருதா`` என்ற தற்கு இவ்வாறன்றி, `அழித்தவைகளை இளைப்பு நீங்குங்காறும் படைக்கக் கருதாதவன்` என உரைப்பாரும் உளர்; `கரந்தவை` என ஓதாது, ``கரப்பவை`` என ஓதினமையின், அது பொருந்தாமையறிக.
இனி, ``கருதா`` என்றதனை வினையெச்சமாக்கி, `கருத் துடை கடவுள்` எனப் பாடம் வேறாக ஓதி, `அழித்தலுட்பட்ட உயிர்கட்கு அருளக் கருதி, அவற்றின் பிறப்பை நீக்கும் கடவுள்` என்று உரைப்பாரும் உளர்.
17-19. திருத்தகும் என்றதனை இங்குக் கூட்டி, `சிறப்புத் தக்கிருக்கின்ற` என உரைக்க.
`அறுவகைச் சமயத்தால் அறுவகைப் பட்டோர்க்கும்` என்க.
ஒரோவொரு சமயத்தினும் கொள்கையும், ஒழுக்கமும் பற்றிய சிறுசிறு வேறுபாடுகள் உளவாதல்பற்றி, `ஆறு சமயம்` என்னாது, ``அறுவகைச் சமயம்`` என்று அருளினார்.
``திருத் தகும்``, எனச் சிறப்பித்தது, கடவுட் கொள்கையுடையவற்றையே பிரித் துணர்த்தற்கு.
அதனால், அவை, ஆருகதம், ஐரணிய கருப்பம், வைணவம், சௌரம், சௌமியம், வாமம்` என்றேனும், பிறவாறேனும் கொள்ளப்படும்.
அருகன், இரணிய கருப்பன் (பிரமன்), விண்டு (மாயோன்), சூரியன், சந்திரன், சத்தி என்போர் இச் சமயங்களின் தெய்வங்களாவர்.
`உலகாயதம், பௌத்தம், மீமாஞ்சை` என்னும் மதங்கள் கடவுட் கொள்கையில்லாதனவாதலாலும், வைசேடிகமும், நையாயிகமும் கடவுளையடைதல் முத்தி என்று கொள்ளாமையாலும், `காணாபத்தியம், கௌமாரம், சாத்தேயம், வைரவம், பாசுபதம், மாவிரதம்` என்னும் மதங்களின் தேவர்கள் இழித்துரைக்கற்பாலர் அல்லராதலாலும், மேற்கூறியவாறு ஏற்புடைய சமயங்களையே ஈண்டுக் கொள்க.
வாமமதத்தவர், `சத்தி` எனக் கூறுதல் சிவசத்தியை அன்று; விண்ணோர் குழுவுட் பெண் பாலார் சிலரையேயாம்; ஆதலின், அஃது ஈண்டுக்கொள்ளத்தகும் என்க.
இனி, ஒன்றிரண்டு குறைவனவாயினும், `அறுசமயம்` என்னும் வழக்குப்பற்றிக் கூறினார் எனக் கொண்டு, சிலவற்றையே கொள்ளினும் அமையும்.
பிரமன் மாயோன் இருவரது நிலை முன்னரே கூறப்பட்டமையின், மீண்டும் அவரை ஈண்டுக் கூறல் வேண்டா எனின், ஆண்டுக் காரணக் கடவுள ராதல் பற்றி வேறெடுத்துக் கூறினார்; ஈண்டுச் சமயக் கடவுளராதல் பற் றிப் பிறதெய்வங்களோடொப்ப ஒருங்கெடுத்துக் கூறினார்.
அதனான் அஃது இழுக்கன்றென்க.
இக் கடவுளர்தாம் சிவபிரான்போல ஒருவரேயாகாது பலராதலின், `விண்ணோர்` என்று ஒழியாது, ``பகுதி`` என்றார்.
எல்லாச் சமயத்தவர்க்கும் அவரவர்கொண்ட முதற்பொருளே வீடுபேறாதல் அறிக.
எல்லா முதன்மையும் உடைய இறைவனொடு நோக்க, ஒரோவொரு முதன்மையையுடைய இக் கடவுளர்கள் மிகத் தாழ்ந்த புழுப் போல்வாராகலின், ``கீடம் புரையும்`` என்று அருளினார்.
கீடம் - புழு.
கிழவோன் - எல்லாப் பொருளையும் தனக்கு உரியனவாக உடையவன்; `முழுமுதற் கடவுள்` என்றபடி.
ஈண்டு, சிவபிரானை முதற்கடவுளாக உணரும் பேறில்லாது பிற கடவுளரையே முதற் கடவுளராக நினைந்து வழிபடுவாரது நிலைக்கு இரங்குதல் கருத்தன்றி மற்றைத் தேவரது இழிபுணர்த்துதல் கருத்தன்றாகலின், ``சமயம்`` என்றது, கடவுட்கொள்கையுடைய சமயங்களையே எனக் கொள்ளுதலே பொருந்துவதன்றி, எச் சமயத் தாராயினும் அவர் கொண்ட தத்துவத்தின் தலைவரே வீடுபேறாய் நிற்பராகலின், ``சமயம்`` என்றது, அனைத்துச் சமயங்களையுமாம் எனக் கொள்ளுதல் பொருந்தாமையறிக.
இனி, `வீடுபேறாய் நின்ற கிழவோன்` என இயைத்துரைப்பின் ``விண்ணோர் பகுதி கீடம்புரையும்`` என்பது, கவர்பொருட்டாய் இடை நிற்றல் பொருந்தாமையறிக.
இவற்றால் சிவபெருமானது முழுமுதற்றன்மை கூறியவாறு.
20-28. அருக்கன் - சூரியன்.
அவனது சோதி, நாள்தோறும் புதுவதாய்ப் புறப்பட்டு வருதலின், அதனை நாள்தோறும் அமைத்துத் தந்ததுபோலக் கூறினார்.
இறந்த காலத்தாற் கூறியது, முன் கண்ட நாள்களில் அது நன்கறியப் பட்டமை குறித்து, திருத்தகுமதி - அழகு தக்கிருக்கின்ற சந்திரன்.
திண்திறல் - இளையாத வலிமை; என்றது, எல்லாவற்றையும் நீறாக்கும் ஆற்றலை.
பொய் - பொய்த்தல்; இல்லை யாதல்.
இது, `விசும்பென்பது ஒன்று இல்லை என்பாரது கூற்று மெய்யாகாமை குறித்தது` விசும்பு, தனக்குக் கீழுள்ள எல்லாப் பொருட் கண்ணும் உளதாதல் அறிக.
அங்ஙனம் எல்லாவற்றிலும் நிறைந்திருத் தலையே `கலப்பு` என்றார்.
விசும்பேயன்றி ஏனைய பூதங்களும் தங் கீழ் உள்ளவற்றின் வியாபகம் உடையன என்க.
மேதகு - மேன்மை தக்கிருக்கின்ற.
காற்றிற்கு மேன்மை, விசும்போடு ஒருபுடை ஒத்து யாண்டும் சென்று இயங்குதலும், உயிர் கட்கு உடம்பை நிலைபெறுவித்தலுமாம்.
ஊக்கம் - கிளர்ச்சி; இயக்கம்.
கண்டோன் - ஆக்கினோன்.
நீரின்கண் பிறபொருள்களின் நிழல் தோன்றுதல் அதனது தூய்மையாலாதலின், அதனை எடுத்தோதினார்.
இன்சுவை என்றது மென்மையை.
இஃது இதனைச் செய்யும் ஆற்றல் மேல் நின்றது.
`நிகழ்த்தினோன்` எனற்பாலது, `நிகழ்ந்தோன்` எனத் தொகுக்கப்பட்டது.
திண்மை - தாங்கும் வலிமை.
ஏனைய பொருள் கள் போலன்றி உயிர்கட்கு நிலத்தின்மேல் நிற்றல் எஞ்ஞான்றும் இடை யறவு படாமையின், அதனது திண்மைக் குணம் மிக வெளிப்படையாக அறியப்படுவதாயிற்று.
`என்றென்றும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று`.
எத்தனையோ பல கோடியாய தன்மைகளை எத்தனையோ பலவாகிய பிற பொருள்களில் அது அது அவ்வத்தன்மை யுடையதாம் படி அவற்றின்கண் பொருந்தச் செய்தோன்` என்க.
`அனைத்தனைத் தாக` என ஆக்கம் வருவித்துக்கொள்க.
`அவ்` என்னும் வகரவீற்றுச் சுட்டுப்பெயர், `வயின்` என்னும் ஏழனுருபு ஏற்று, `அவ்வயின்` என நின்றது.
அஃதான்று அதுவன்றி.
இவற்றால், படைப்பின் வியத்தகு நிலைகளை விரிக்கும் முகத்தால், இறைவனது திறப்பாட்டினை வியந்தவாறு.
29-65 இவ்வடிகள் பலவற்றினும் வரும், `காண்க` என்பன யாவும் அசைநிலைகள்.
29. கண்டாய், கண்டீர் முதலியன இறந்த காலத்தவாய் நின்ற அசையாகும்; இஃது எதிர்காலத்ததாய் நின்று அசையாயிற்று.
முன்னோன் எல்லாப் பொருள்கட்கும் முன்னிடத்தில் உள்ளவன்; தலைவன்.
முன், இடமுன்.
காலமுன், ``படைப்போற் படைக்கும் பழையோன்`` (அடி.
13) என்றதனால் பெறப்பட்டது.
முழுதோன் - எல்லாப் பொருள்களிலும் நிறைந்து நிற்பவன்.
30.தன் நேர் - தன்னோடு ஒக்கும் பொருள்.
``தானே`` என்றதில் தான், ஏ இரண்டும் அசைநிலைகள்.
31. ஏனம் - பன்றி.
அதனது தொன்மை, அதன் எயிற்றின் மேல் ஏற்றப்பட்டது.
எயிறு - பல்.
ஒருகால் பிரளய வெள்ளத்தில் அழுந்திய நிலத்தைத் திருமால் சுவேதவராக (வெள்ளைப்பன்றி) உருக்கொண்டு கொம்பின்மீது ஏற்றிக் காத்து, பின்னர் அச்செருக்கால் உயிர்கட்கு இடர்விளைக்க, சிவபிரான் அப்பன்றியை அழித்து, அதன் கொம்பினை மார்பில் அணிந்துகொண்டான் என்பது வரலாறு.
32.கானம் - காடு.
இஃது இனம்பற்றி வந்த அடை.
உரி - தோல்.
தாருகாவனத்து முனிவர்கள் விடுத்த புலியைச் சிவபிரான் அழித்து அதன் தோலை உடுத்துக்கொண்டனன் என்பது அறிக.
33-34. நீற்றோன் - திருநீற்றை அணிந்தவன்.
``நினை தொறும்.
.
.
.
.
கெடுவேன்`` என்றது, இடைக்கண் ஆற்றாமை மீதூரக் கூறியதாம்.
`அவனை நினைதோறும்` என்க.
ஆற்றேன் - அவனைக் காணாது நிற்கலாற்றேன்.
கெடுவேன் - இனி, யான் அழிந்தொழி வேன்.
35. ``இன்னிசை வீணையில்`` என்றதனை, `வீணை இன்னிசையில்` என மாற்றிப் பொருள்கொள்க.
வீணையில், இல் - போல.
இசைந்தோன் - எல்லாப் பொருளிலும் நுண்ணியனாய்க் கலந்தவன்.
முன்னர் வாளா, ``முழுதோன்`` என்றார், ஈண்டு அதனை உவமை முகத்தால் இனிது விளக்கினார்.
36.
அன்னதொன்று - வீணைஇசைபோல்வதோர் இன்பம்.
அவ்வயின் - தான் நிறைந்து நின்ற அவ்விடத்து; என்றது உயிரையே எனக்கொள்க.
அறிந்தோன் - உயிர்கள் பொருட்டு அறிந்து நிற்பவன்.
இறைவன் பெத்தம் முத்தி இரண்டினும் உயிர்கட்கு விடயங்களை அறிவித்தலேயன்றி, அறிந்தும் நின்று உதவுவன் என்பதைச் சிவஞானபோதப் பதினொன்றாம் சூத்திரத்து முதல் அதிகரண பாடியத்துள் இனிது விளங்க விரித்துரைத்தமை காண்க.
37.பரமன் - மேலானவன்.
பழையோன் - மேன்மையை என்றுமே இயல்பாக உடையவன்.
39. அற்புதன் - பிறவிடத்துக் காணலாகாத தன்மைகளை யுடையவன்.
அநேகன் - பொருளால் ஒருவனாயினும், கலப்பினால் எண்ணில்லாதவனாய் இருப்பவன்.
இஃது ஒருவனே பல பொருளாய் இருத்தலை வியந்தவாறு. 40. சொற்பதம் - சூக்குமை வாக்கின்நிலை.
அது, நாத தத்துவம்.
சத்தப் பிரமவாதிகள் `நாதமே பிரமம்; அதனின் மேற்பட்ட பொருள் இல்லை` என்பர்; அஃது உண்மையன்று என்றற்கு, `அதனைக் கடந்த தொல்லோன் இறைவன்` என்று அருளினார்.
41. `சிந்தையைச் சீவன் என்றும், சீவனைச் சிந்தை என்றும்` (சிவஞான சித்தி சூ 4.28. கூறுதல் வழக்கமாதலின், இங்கு, `சித்தம்` என்றது, உயிரினது அறிவையாம்.
அஃது அந்நாத தத்துவத்தையும் கடந்து தன்னையே பொருளாக உணர்ந்து நிற்பதாகும்.
இனி, ``சொல்`` என்றதை மத்திமை வைகரி வாக்குக்களாகக் கொள்ளின், சித்தம், அந் தக் கரணமேயாம்.
இப்பொருட்கு, `பதம், அளவு` என்றாகும்.
மாண், மாட்சி என வருதல்போல் சேண், `சேட்சி` என வந்தது.
சேண் - தொலைவு.
இதனை, `வலை` என்றது ஏகதேச உருவகமாகலின், அதனுள் அகப்படுகின்ற மான் ஆகின்றவன் என உரைக்க.
உரைக்கவே, அது பெரியோன் என்னும் பொருளையும் தோற்றுவித்தல் காண்க.
`முதற்பொருள் ஒன்றே` என்றல் அனைவர்க்கும் உடன்பாடாதலின், முழுமுதற் கடவுளாய சிவ பெருமானையே ``ஒருவன் (ஏகன்)`` என்று உபநிடதம் கூறுதல் பற்றி, (சுவேதாசுவதரம்.
), ``ஒருவன் என்னும் ஒருவன்`` என்று அருளினார்.
`ஒருவன் என்று ஏத்த நின்ற நளிர்மதிச் சடையன்` (திருவாய்மொழி) எனப் பிறரும் கூறினார்.
44. பொழில் - உலகம்.
முன்னர் ஒடுங்கிநின்று, பின்னர் விரிந்ததென்பார், ``விரிபொழில்`` என்றும், விரியுங்கால் தானே விரிய மாட்டாதாகலின், அதற்குப் பற்றுக்கோடாய் நின்று விரியச்செய்து, பின்னும் நீங்காது நிற்கின்றான் என்பார்.
``முழுதாய் விரிந்தோன்`` என்றும் அருளினார்.
``பற்றி யுலகை விடாதாய் போற்றி`` (தி.6.ப.55.பா.6) என்றருளியதும் இதுபற்றி.
`பிரபஞ்சம்` என்னும் வட சொற்கும், `விரிவுடையது` என்பதே பொருளாதல் அறிக.
45. அணுத் தரும் தன்மை இல் - `ஆணவத்தால் தரப்படுகின்ற தன்மை இல்லாத; அதனால் பற்றப்படுதல் இல்லாத` என்றபடி. அணுத்தன்மையைச் செய்வதனை `அணு` என்றார். `ஐயன்` என்பது, `ஐயோன்` என்று ஆயிற்று.
ஐயன் - வியப்பினன். பிறர் எல்லாரும் அணுத்தன்மை எய்தி யிருக்கத் தான் ஒருவனும் அதனை எய்தாதிருத்தலின் வியப்பாயிற்று.
46. இணைப்பஅரும் பெருமை இல் - தனது பெருமையோடு ஒப்பிப்பதொரு பெருமை இல்லாத.
47. ``அரியோன்`` என்றது, வாளா பெயராய் நின்றது.
48. மருவி - வேறறக் கலந்து நின்று. அறிவில் பொருள்களில் அவற்றின் குணங்களையும், அறிவுடைப் பொருளில் அவற்றின் அறிவுகளையும் வளர்க்கின்றான் ஆதலின், ``எப்பொருளும்`` என்றார்.
49. ``நூல்`` எனப் பொதுப்படக் கூறினும், ஈண்டுச் சமய நூல்களே கொள்ளப்படும். எல்லாப் பொருள்களையும் அறிதல்போல அவற்றால் அளவிட்டறிதற்கு வாராமையின், அவைபற்றி உணரும் உணர்விற்கு உணரவாரான் என்றார்.
``எந்தை யாரவர் எவ்வகை யார்கொலோ`(தி.3.ப.54.பா.3)
எனவும்,
``ஆட்பாலவர்க் கருளும் வண்ணமும் ஆதி மாண்பும்
கேட்பான்புகில் அளவில்லை கிளக்க வேண்டா
............................. எந்தை
தாட்பால் வணங்கித் தலைநின்றிவை கேட்க தக்கார்``
(தி.3.ப.54.பா.4) எனவும்,
``ஏதுக்க ளாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்
சோதிக்க வேண்டா; சுடர் விட்டுளன் எங்கள் சோதி
மாதுக்கம் நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின்``
(தி. 3. ப. 54 பா. 3, 4, 5) எனவும்,
``நூலறிவு பேசி நுழைவிலா தார்திரிக`
(தி.11 அற்புதத் திருவந்தாதி-33) எனவும் பிற திருமுறைகளினும் இவ்வாறே அருளிச்செய்தல் காண்க.
50. மேலொடு கீழாய் விரிதல். எல்லாப் பொருளையும் தனது வியாபகத்துள் அடக்கிநிற்றல்.
51. அந்தம் - அழிவு. ஆதி - தோற்றம்.
52. பந்தம் - பிறப்பு நிலை. வீடு - அது நீங்கிய நிலை. இவ் விரண்டையும் உயிர்கட்கு உளவாக்குவோன் இறைவனே யாதல் அறிக. இவையே, `மறைத்தல். அருளல்` என்னும் இருதொழில்களாகக் கூறப்படுகின்றன; மறைத்தலின் விரிவே, படைத்தல் முதலிய மூன்றும்.
53. நிற்பது - அசரம். செல்வது - சரம். இவற்றால் பல்வகைப் பிறவிகளையும் குறித்தவாறு.
54. `கற்பம், ஊழி` என்பது முன்பே கூறப்பட்டது. அதன் நிகழ்ச்சி முழுவதையும், அதன் முடிவிற்குப் பின்னுள்ள நிலையையும் காண்பார் இறைவனையன்றிப் பிறர் இன்மையானும், அவை எண்ணில்லாதனவற்றை அவன் கண்டவன் ஆகலானும், ``கற்பமும் இறுதியும் கண்டோன்`` என்றார்.
55. யாவரும் பெற உறும் - முடிவில் யாவராலும் பெறுதற்கு உரியவனாய் நிற்கின்ற. முடிவு - அறியாமையால் உழன்றுதீர்தல். எனவே, `தேவராலும்` என்றது, அதற்கு இடையிலாயிற்று. `பெறுதல், உறுதல்` என வந்த சொற் குறிப்புக்களையும் ஓர்ந்துணர்க.
56. ``தேவரும்`` என்ற சிறப்பும்மையால் ஒருவரேனும் அறியாமை பெறப்பட்டது.
57. உயிரில் பொருளை, `அலி` என்றல் வடநூல் வழக்கு. இவ்வழக்குப்பற்றி அடிகள் சில விடங்களில் ஓதுதலைப் பின்னருங் காண்க. பெற்றி - தன்மை. உயிர்ப்பொருள்கள் பலவும் `பெண், ஆண்` என்னும் இருகூற்றனவாய்க் கூடிக்கலந்து வாழவும், உயிரில் பொருள்களை அவ்வாழ்விற்கு உதவவும் வைத்து. தான் அவையே யாய் நிற்கும் நிலையை, ``பெண் ஆண் அலி எனும் பெற்றியன்`` என்று வியந்தார். உயிர்ப்பொருளிடத்தே உள்ள, `அலி` என்பதொரு பிறப்பும் ஈண்டுக் கூறியதனுள் அடங்குதல் காண்க. உயிருடைய அலிப் பிறப்பு, இன்பமொழித்து ஒழிந்த புருடார்த்தங்களுள் அறத்தை யேனும், வீட்டையேனும் எய்துமாயின், வேறெண்ணப்படும்; இல்லையேல், உயிரில்லவற்றோடு ஒன்றாயொழியும் என்க;
58-65. `அத்தகையோனை யானும் கண்ணால் கண்டேன்` என உரைக்க. அவனைக் கண்ணால் கண்டவர் சிலர்; அவருள் யானும் ஒருவன் என்பது பொருளாகலின், உம்மை இறந்தது தழுவிற்றாம். ``சுரக்கும்`` எனக் குறிப்புருவகம் செய்து, சொற்பல்காவாறு ஓதினமை யின், `அவன் அருளாகிய அமுதத்தைச் சுரப்பதோர் ஊற்றென்றல் மெய்யேகாண்` என, தாம் கண்ணாற் கண்டு பெற்ற அநுபவத்தைக் கிளந்தோதியவாறாக உரைக்க. பின்வரும் தொடர்களும் அன்னவாம். அவற்றை, `அவனது கருணையின் பெருமை எத்தகையது என யான் கண்டேன்; அஃதாவது, தனது சிவந்த திருவடிகளை என் பொருட்டு நிலத்தில் தோயவைத்து வந்தான்; அவன் நம்மனோர் போலக் காணப் படினும், பிறப்பிற்பட்டுத் தோன்றாத அருட்டிரு மேனியே அவனது திருமேனி என்று யான் தெளிவாக உணர்ந்தேன்; ஆகவே, சிவ பெருமான்தான் என்னை வந்து ஆட்கொண்டான்; அவன் மாதொரு கூறன்தான்; எஞ்ஞான்றும் அவளும் தானுமாகப் பிரியாது உடனாய் இருப்பவனே` என முடிக்க.
அடிகள், சிவபிரான் தம்மை வந்து ஆண்டுகொண்டருளிய உண்மையை அநுபவமாக மிகவும் தெளிவுபட இப்பகுதியில் இனி தெடுத்து அருளிச் செய்திருத்தல் நம்மனோர்க்கும் பெரிதும் பயன் தருவதாம். சிவபெருமான், பிறப்பிறப்பில்லாதவன்ஆகலானும், தம்மை ஆளவந்த திருமேனி நம்மனோரது உடம்புகள் போல எழு வகைத் தாதுக்களாலாயதாக் காணப்படாது, தண்ணிய சேயொளிப் பிழம்பாய்க் காணப்பட்டமையானும், சிவபெருமானே நேர்பட வந்து தம்மை ஆட்கொண்டான் என அடிகள் தெளிந்தார் எனவும், சிவ பெருமான் மாதொரு கூறனாய் நிற்றல், தான் எத்துணையும் பெரியோனாயினும், எத்துணையும் சிறியவாய உயிர்கள் மாட்டுக் கைம்மாறு கருதாத பேரிரக்கமாகிய பண்பினையும், அது காரணமாக யாவரையும் அவரவரது நிலைக்கேற்ப இயைந்து நின்று ஆட்கொள்ளுதலாகிய செயலையும் உடையவன் என்பதை விளக்கு வதேயாகலானும், அப்பண்பையும், செயலையும், அடிகள் நேரே கண்டமையானும், தம்மை ஆட்கொண்ட பெருமான் மாதொரு கூறனாய், அவளோடு நீங்காதே நிற்பவன்தான் என்பதையும் தெற்றெனத் தெளிந்தார் எனவும் கொள்க. உடனாய் இருப்பவரை, ``உடன்`` என்று அருளினார். சிவபெருமான் மாதொரு கூறனாய் நிற்றல் மேற்கூறியவற்றையே வலியுறுத்தும் என்பதனை,
``தீதுறுவ னானால் சிவபதிதான் கைவிடுமோ
மாதொருகூ றல்லனோ மற்று``
(திருக்களிற்றுப்படியார்-42) என விளக்குதல் காண்க. ``உடனே`` என்றதன்பின், `ஆகலின்` என்னும் சொல்லெச்சம் வருவித்து, அதனை, ``மேகன்`` என்னும் (அடி.95) வினைக்குறிப்போடு முடிக்க.
66-95. இப்பகுதியில், அடிகள், சிவபெருமான் தம்மைத் திருப்பெருந்துறையில் வந்து ஆட்கொண்டு அருள்புரிந்த சிறப்பினை நீண்டதொரு முற்றுருவகத்தால் மிக்க அழகுபட விரித்தருளுகின்றார்.
பரமானந்தம் - மேலான இன்பம்; பேரின்பம். அது, பகுதிப் பொருள் விகுதி. ஏகாரம், பிற பொருளினின்றும் பிரித்தலின், பிரி நிலை. கருமாமுகில், சிலேடையுருவகம்; `உருவமென்னும் சிறந்த சூல் கொண்ட கரிய மேகம்` என்பது பொருள். முகிலின் - முகிலாய், வரை- மலை. `திரு மின்` என இயைத்து, `அழகென்னும் மின்னல்` என உரைக்க, பந்தனை - கட்டு. `பந்தனையாகிய அரவு (பாம்பு)` என்க. வாள் - கொடிய. இரிய - அஞ்சி நீங்க. வெந்துயர் - கொடிய துன்பம். மா - பெரிய. `கோடை தனது பெரிய தலையை மறைத்துக்கொள்ள` என்க. பெரிய கோடை முழுதும் நீங்கினமையைப் பான்மை வழக்கால் இங்ஙனங் கூறினார். நீடு எழில் தோன்றி - பெருகும் இன்பமாகிய தோன்றிப் பூ. வாள் ஒளி மிளிர - மிக்க ஒளி விட்டு விளங்க. `துயர் கரப்ப` என்றமையால், தோன்ற வேண்டுவது இன்பமேயாம் ஆதலின், ``எழில்`` என்று, அதனைத் தருவதாய இன்பத்தைக் குறித்து. எமது பிறவியின்மேற் கோபம் மிகக் கொண்டு என்றது. மழைக்காலம், `இந்திர கோபம்` என்னும் வண்டினை மிகக் கொண்டிருத்தலைச் சிலேடை வகையாற் குறித்தவாறு. எனவே, இறைவன் அடிகளது பிறவிமேற்கொண்ட கோபமே இந்திர கோபமாக உருவகிக்கப்பட்ட வாறாயிற்று. முரசு எறிந்து - முர செறிந்தாற்போல. `முழங்கி` என்றது, அழைத்தருளினமையை; ``அறைகூவி ஆட்கொண்டு`` என்றல் காண்க.
அஞ்சலி - கூப்பிய கை. காந்தள் கைக்கு உவமையாதலும், மழைக்காலத்துத் தோன்றுவதாதலும் அறிக. ``பூ`` எனப்பட்ட உவமையாகிய தாமரையும், உருவகத்தின்கண் வந்த காந்தளும் அரும்பெனவே கொள்க. ``காட்ட`` என்றது, `தோன்ற` என்றபடி. எஞ்சா - குறையாத. ``அருள்`` என்றது, அருண்மொழியாகிய உபதேசத்தையும், திருநோக்கு பரிசம் முதலிய செயல்களையும். இவற்றை, `தீக்கை` என ஆகமங்கள் கூறும். துளிகொள்ள - குறிப்புருவகம். `பெய்ய` என்றவாறு. செஞ்சுடர் வெள்ளம், சிலேடை யுருவகம். `சிவந்த ஒளியை யுடைய வெள்ளம்` என்றும் `செவ்விய ஞானமாகிய வெள்ளம்` என்றும் பொருள் தந்தது. புதுவெள்ளம் சிவந்து தோன்றுதல் இயல்பு, தீக்கைகள் பலவாய் நிற்றலின் அவற்றை மழைத்துளிகளாகவும், அவை அனைத்தினாலும் விளங்கும் ஞானம் ஒன்றாய் மிக்கெழுதலின் உருவகம் செய்தார். திசை - இடம். `திசை தோறும்` என்க. ``திை\\\\\\\\\\\\\\\\u2970?`` என்றது, அடியவரை, தெவிட்டுதல் - நிரம்புதல். வரையுற - மலைபோல; இதனை, ``ஓங்கி`` என்பதற்கு முன் கூட்டுக. கேதம் - குற்றங்கள். அவை, காமம், குரோதம் முதலியன. குட்டம் - பள்ளங்கள். கை அற - தூர்ந்து இடம் அற்றுப்போகுமாறு. ஓங்கி - மேலெழுந்து. இருமுச்சமயம், `உலகாயதம் பௌத்தம், மீமாஞ்சை, மாயாவாதம், நையாயிகம், பாஞ்சராத்திரம்` என்னும் இவையென்க. இவைகளை அடிகள் சில விடங்களிற் கிளந்தோதுதல் அறிக. பேய்த்தேர் - கானல் நீர், சமயங்களைக் கானல் நீர் எனவே, `மான் கணம் எனப்பட்டோர், வீடுபேறு வேண்டி அவற்றில் நின்றோர் என்பது அமைந்து கிடந்தது. மான்களின் கண்கள் அழகும் மருண்ட பார்வையும் உடையனவாய் நுனித்து நோக்கும் இயல்பினவாதலின், ``நெடுங்கண்`` என்றார். அதனானே பொருட்கண்ணும், மெய்ப் பொருளை ஆராயும் ஆராய்ச்சியைத் தலைப்பட்டுப் பலநூல்பற்றிப் பலவாறாக ஐயுற்று நுனித்து ஆராயும் அவரது தன்மை பெறப்பட்டது. `தவமாகிய வாய்` என்க. வேட்கை மிகுதியால் பருகுதல் தோன்ற, `பெருவாய்` என்றார். அதனானே, ஞானத்திற்குத் தவமே சிறந்த வாயில் என்பதும் குறித்தவாறாயிற்று. பெருமணல்வெளியில் கடுங் கோடைக்கண் கானல் தம் அருகிலே நிரம்பத் தோன்றுமாதலின், அதனை மான்கள் வாய்வைத்துப் பருகும் என்க. பருகினும் வெறுந் தோற்ற மாவதன்றி, நீராய் வாயிடைப் புக்கு வேட்கையைத் தணியா மையின், ``அசைந்தன`` என்றார். அசைதல் - சோர்தல், அவம், தவத்திற்கு எதிரியதாதலை, ``தவம் செய்வார் தங்கருமம் செய்வார் மற்றல்லார் - அவம் செய்வார்`` (குறள் - 266) என்றாற்போல்வன வற்றிற் காண்க. அஃதாவது பற்று நீங்காமை. தாபம் - நீர்வேட்கை. `அசைந்தனவாகிய அவ்விடத்து` என்க. இது காலத்தைக் குறித்தது. வானப் பேரியாற்று - பெரிய ஆகாய கங்கையைப் போல. அகவயின்-உள்ளிடத்து; என்றது அறிவினை. `அவ்விடத்தை மூடி மேலெழுந்து, இன்பமாகிய பெரிய சுழிகளை ஆங்காங்கு அழகுபடக் காட்டி` என்றது, `ஆன்ம போதத்தை விழுங்கிக் கொண்டு, பேரின்ப மாகிய கவர்ச்சியைப் பல நிலைகளிலும் தோற்றுவித்து` என்றதாம். சுழித்தல் - கோபித்தல். `சுளித்தல்` என வருவதும் இதுவே. பந்தம் - மயக்க உணர்வாகிய கட்டு. அஃது அறிவை ஏகதேசப்படுத்தலின், கரையாக உருவகம் செய்தார். `கரையை இடித்து` என்க. ``ஊழ் ஊழ் ஓங்கிய`` என்றது, `முறைமுறையாக வளர்ந்த` எனவும், `ஊழின் பயன் தோறும் உண்டாகிப் பெருகிய` எனவும் இருபொருள் தந்தது. மா மரம்-பெரிய மரத்தை. வேர் பறித்து - வேரோடு பறித்து வீழ்த்தி. எழுந்து - பெருகி. ``உருவ அருள் நீர்`` என்றதை, `அருள் உருவநீர்` எனப் பின் முன்னாக்கி உரைக்க. `அருள் உருவம்`` என்றது, திருக் கோயிலுள் இருக்கும் திருமேனியை. அஃது அதனைச் சிவனெனவே காணும் உணர்வையே குறித்தது. ஓட்டா - பல கால்கள் வழியாக எங்கும் ஓடப்பண்ணி. வெள்ளம் பிண்டமும், நீர் பிண்டிக்கப் பட்ட பொருளும் போலக் கோடலின், `வெள்ளம், நீரை ஓடப் பண்ணி யது` என்றார். இவ்வாறே,பொருளினும். சிவஞானம் பிண்டமும், திருமேனியைச் சிவனெனவே காணுதல் முதலியன பிண்டிக்கப்பட்ட பொருளுமாகக் கொள்க. `கால்கள்` பல தலங்கள் என்க. `அருவரைச் சந்தின்` என்றதனை, `சந்து அருவரையின்` என மாற்றி, இடை நிலங்களையுடைய அரிய மலைகள் போல என உரைக்க. வான் சிறை- பெரிய கரை; என்றது, கோயிலின் சுற்றுச் சுவர்களை. கட்டி - கட்டப் பட்டு; மட்டு அவிழ் - தேனோடு மலர்கின்ற. வெறி - வாசனை. குளவாய் - குளப் பரப்பு; என்றது கோயிலின் உள்ளிடத்தை. அங்கு மலர்கள் கொணர்ந்து நிறைக்கப் பெறுதலின், `மலரை யுடைய குளம்` என்றற்கு ஏற்புடையதாயிற்று. கோலி - வரையறுக்கப்பட்டு. கோயிலி னுள் எழுப்பப்படும் கரிய அகிற்புகையை வண்டாக உருவகித்தார். எனவே, ``குளம்`` என்றது திருக்கோயிலையாயிற்று. கறை - கறுப்பு. `கரைசேர்` என்பது பாடமன்று. மீக்கொள - மீக்கொள்ளுகையால். மகிழ்வார் - ஞானத்தைப் பெற்றவர். `அது நோக்கி` எனச் செயப்படு பொருள் வருவிக்க. சிவஞானத்தை அடைந்தோர் அதன்பின்னர்த் திருக்கோயில் வழிபாட்டினைச்செய்து, அதனால் அந்த ஞானம் பெருகி இன்பம் பயத்தலை அறிந்து மகிழ்தல் இயல்பாதலை யறிக. தொண்ட உழவர் - தொண்டராகிய உழவர். ``தொண்டர்`` என்றது, சத்திநிபாதத்து உத்தமராய் ஞானத்தைப் பெற விரும்புவோரை. இரு பெயரொட்டும், உயர்திணையாயின், புணரியல் நிலையிடை உணரத் தோன்றாது; (தொல் - எழுத்து 482.) ஏனெனில், `தொண்ட உழவன், தொண்ட உழத்தி, தொண்ட உழவர்` என்னுங்கால், நிலை மொழி, உயர்திணை முப்பாலையும் உணர்த்தி நிற்றலின் என்க. அண்டத்து அரும்பெறல் மேகன் - எவ்வண்டத்திலும் பெறுதற்கரிய மேகம் போன்றவனாயினான். இங்கு ``மேகம்போன்றவன்`` என உவமை வகையாற் கூறியதனை மேல், உருவக வகையால் ``கருமாமுகிலின் தோன்றி`` என்றாராகலின், கூறியது கூறலாகாமை யறிக.
இவ்வுருவகங்களைத் தொகுத்துக் காணுங்கால், `பேரின்ப மாகிய கடல், ஆசிரியக் கோலமாகிய மேகமாய்த் தோன்றித் திருப் பெருந்துறையாகிய மலையை அடைந்து, எமது பிறவியின் மேற் கோபம் மிகுத்து, முரசு எறிந்தாற்போல அழைப்பொலியாகிய இடி முழக்கத்தைச் செய்து, அருட்செயல்களும் அருள் மொழிகளுமாகிய நுண்டுளிகளைச் சொரிய, அதன்பயனாக செவ்விய ஞானமாகிய வெள்ளம் பலவிடத்தும் உள்ள அடியார்களாகிய இடங்களெல்லாம் நிறையும்படி மலைபோல ஓங்கியெழுந்து, எம் உள்ளத்திடத்துப் பாய்ந்து, இன்பமாகிய சுழிகளை ஆங்காங்கு உளவாக்கி, உருவ வழி பாட்டுணர்வாகிய நீரைப் பல தலங்களாகிய கால்களிலும் ஓடச்செய்து, திருக்கோயிலாகிய குளத்தில் நிறைய, அதனால் சிவஞானம் பெற்ற அப்பெரியோர் மேன்மேலும் மகிழ்ந்து இன்புறுதலின், அதனைக் கண்டு தொண்டர்களாகிய உழவர்கள், வழிபாடாகிய வயலுள், அன் பாகிய விதையை விதைத்து, சிவபோகமாகிய விளைவை நிரம்பத் துய்க்குமாறு அருள்புரிந்த மேகம் போன்றவனாயினான்` என்றாகும்.
இவற்றிடையே, அருளாகிய மழை பொழியுங்கால், திரு மேனியின் அழகாகிய மின்னலின் ஒளி எத்திசைகளிலும் விரிந்தன; அழைப்பொலியாகிய இடி முழக்கினால், ஐம்புல அவாவாகிய பாம்புகள் அஞ்சியோடின; அதன்பின் துன்பமாகிய கோடை முழுதும் ஒழிந்தது; இன்பமாகிய தோன்றிப் பூக்கள் அழகாக மலர்ந்தன; அடியவர்களது கூப்பிய கைகளாகிய காந்தள் அரும்புகள் காணப்பட்டன; ஞானமாகிய வெள்ளம் குற்றங்களாகிய பள்ளங் களைத் தூர்த்து, அறியாமையாகிய கரையைத் தாக்கி அலைத்து இடித்துவிட்டது; வினையாகிய பெரிய மரங்களை வேரோடு பறித்து வீழ்த்திற்று; நல்லோராகிய மான்களின் கூட்டம் ஆறு சமயங்களாகிய கானல் நீரைத் தம் தவமாகிய வாய் வழியே பருகியும் ஞானமாகிய நீரைப் பெற்று வீண்முயற்சிகளாகிய தாகம் தணியாது சோர்ந்திருக்குங் காலத்தில், இவையெல்லாம் எங்கள்பால் நிகழ்ந்தன` எனக் கூறப் பட்டது. இவற்றால், இறைவன் திருப்பெருந்துறையில் ஞானாசிரிய னாய் வந்து அடிகளையுள்ளிட்ட அடியார் சிலர்க்கு ஞானத்தை அருளினமை, அவர்களேயன்றி, அஞ்ஞான்று பக்குவம் எய்தி னோரும், பின்னர்ப் பக்குவம் எய்துவோரும் ஆகிய ஏனைய அடியவர்களும் பயன்பெறுதற்கு ஏதுவாயினமையை விரித்தவாறு.
இங்ஙனம் இறைவன் அருளாகிய மழையைப் பொழிந்து அடியார்களை வாழ்வித்த சிறப்பினைப் பெரிதும் வியந்து, அவனை வாழ்த்திய அடிகள், இதனைத் தொடர்ந்து மேலும் பலவாற்றால் அவனுக்கு வாழ்த்தும், போற்றியும் கூறுகின்றார்.
96. பணம் - பாம்பின் படம்; அஃது ஆகுபெயராய், அதனை யுடைய பாம்பைக் குறித்தது, முன்னின்ற, `கருமை` யென்னும் அடை, ஆகுபெயர்ப் பொருளாகிய பாம்பை விசேடித்தது, கரிய கச்சு அழகைத் தருவதாதல் அறிக.
97. ஆதி - முதல்வன்,
98. அச்சம் - பிறவிபற்றி வருவது. சேவகன் - வீரன்; இது, பிறர் அது மாட்டாமை உணர நின்றது.
99. நிச்சல் - நித்தல்; போலி. ஈர்த்து ஆளுதல், வலிய அழைத்து ஆட்கொள்ளுதல் பல்வேறிடங்களில், பல்வேறு அடியார் களைப் பல்வேறு வாயால் ஆட்கொள்ளுதலை, இடையறாது செய் தலின், `நிச்சலும்` என்றார். `அடியார்களை` என்பது வருவிக்க.
100. சிவஞானத்திற்குத் தடையாகப் பலவாற்றால்வரும் பிராரத்த கன்மங்களின் விளைவை, ``சூழ் இருந்துன்பம்`` என்றார். துடைத்தல், - விரைந்து வந்து நீக்குதல்; இஃது இப்பொருளதாலை, ``விழுமம் துடைத்தவர்`` (குறள் - 107.) என்பதன் உரையிற் காண்க.
101. எய்தினர் - தன்னை அடைந்தவர். ஆரமுது - தேவர் உலகத்திலும் கிடைத்தற்கரிய அமுதம்; பேரின்பம்.
102. கூர் இருள் - மிக்க இருளின்கண்; இது மகாசங்கார காலத்தை உணர்த்தும். கூத்தொடு - பலவகைப்பட்ட கூத்து நிலை களுடன். குனிப்போன் - நடிப்பவன்.
103. அமை - மூங்கில்,
104. ஏது - இயைபு. `தன்னோடு இயைதல் இல்லாதவர்க்குத் தானும் இயைதல் இல்லாத இறைவன்` என்க. தமக்கு அவ்வாறின்றிப் பெரிதும் இயைபுடைமை தோன்ற `` எம் இறைவன்`` என்றார்.
105. காதலர் - பேரன்புடையவர். எய்ப்பு - இளைத்தல்; இஃது இங்கு, கைப்பொருள் இன்றி வருந்துதலைக் குறித்தது. வைப்பு - இருப்பாக வைக்கப்பட்ட பொருள்; சேமநிதி. `பொருள் வரவு இல்லாது மெலிவுற்ற நிலையில், முன்பு வைத்துள்ள பொருள் உதவுதல் போல, அடியார்களுக்கு உதவுபவன்` என்றதாம். ``எய்ப்பினில் வைப்பு` என்றது உவம ஆகு பெயர்.
106. சிவபெருமான் உடம்பெங்கும் பாம்பை அணிந் திருப்பினும், ஒரு பாம்பைக் கையிற்பிடித்து ஆட்டுகின்றான் என்பது யாண்டும் கூறப்படும். ஆதலின், ``அரவு ஆட்டிய நம்பன்`` என்றார். இவ்வாறு கூறுதலைப் பின்னும், தேவாரம் முதலிய திருமுறைகளினும் காண்க. இது பிச்சைக் கோலத்தில் சிறப்பாகக் குறிக்கப்படும். இனி இதற்கு, `புறம்பயம்` என்னும் தலத்தில் சிவபெருமான் பாம்பாட்டி யாய் வந்து விடந்தீர்த்தான் என்பதொரு வரலாற்றினைப் பொருளாக உரைப்பாரும் உளர். நம்பன் - நம்புதற்கு (விரும்பதற்கு) உரியவன்.
107. அறிவை விழுங்கி யெழும் பேரன்பு பித்துப் போல நிற்றலின், அதனை, `பித்து` என வழங்குப. `எமைப் பித்தேற்றிய` என்றதை, `குடும்பத்தைக் குற்றம் மறைத்தான்` (குறள் - 1029) என்பது போலக் கொள்க.
108. நீறு - திருநீற்றுப் பூச்சு. இஃது இங்கு ஆசிரியக் கோலத்தைக் குறிப்பால் உணர்த்திற்று. ``வல்லோன்`` என்றது, `அவ் வாறு தோன்றி அடியார்களை ஆளவல்லவன்`` என்றபடி. `நாற்றிசை யின்கண்ணும்` என உருபும், முற்றும்மையும் விரிக்க.
109 - 110. நடப்பன - சரம்; நிற்பன - அசரம்; இவை இரண்டு உயிர் வகைகள். ``கிடப்பன`` என்றது, `செயல் இல்லன` என்னும் பொருட்டாய், உயிரில் பொருளைக் குறித்தது.
இஃது இறுதிக்கண் வைக்கற்பாலதாயினும், இசையின்பம் நோக்கி இடைக்கண் வைத்தார். `நட, கிட` என்னும் தன் வினைப் பகுதிகள், இறுதி நீண்டு அளபெடுத்து, பிறவினைப் பகுதிகளாயின. `எழூஉ, உறூஉ` முதலியனபோல. எனவே, ஈண்டுப் போந்த அள பெடைகள் யாவும் சொல்லிசை நிறைக்கவே வந்தனவாதல் அறிக. ``நடாஅய், கிடாஅய்`` என்றவற்றில், யகரமெய் வினையெச்ச விகுதி. `ஆய், போய்` என்பவற்றிற் போல. `நடப்பனவற்றை நடத்தி, கிடப்பன வற்றைக் கிடத்தி, நிற்பனவற்றை நிறுத்தி` என்றது, `பல்வேறு வகையான எல்லாப் பொருள்களையும் படைத்து` என்றவாறு.
111. இங்ஙனம், எல்லாவற்றையும் படைப்பினும், தான் அவற்றிற்கு அகப்படாது அப்பாற்பட்டவன் என்றற்கும், `அவை போலத் தோன்றி ஒடுங்குபவன் அல்லன்` என்றற்கும், `சொற்பதங் கடந்த`` என்றும், ``தொல்லோன்`` என்றும் கூறினார். ``சொற்பதம்`` என்றதற்குப் பொருள் மேலே உரைக்கப்பட்டது.
112. உள்ளத்து உணர்ச்சி - கருதலளவை. கொள்ளவும் - கருதவும். கொள்ளுதல், கருதுதல் ஆதலை, `கொள்கை, கோட்பாடு` என்பவற்றால் அறிக.
113. ``புலன்` என்றது, பொறியை. `காட்சி` என்பது, காணப் படுதலைக் குறித்து நிற்றலும் வழக்கேயாதலின், ஈண்டு அவ்வாறு நின்றது.
114. வெளிப்பட - தோன்றும்படி. வகுத்தோன் - வகைபடத் தோற்றுவித்தோன்.
115. உயர்ந்து - சிறந்து. பூவிற்கு நாற்றம் சிறந்தவாறு போல எல்லாப் பொருட்கும் சிறந்தவன் இறைவன் என்றபடி.
116-117. `பெருமை எளிவந்து` என, பண்பு பண்பியோடு சார்த்தி முடிக்கப்பட்டது. இவ்வாறன்றி, `இன்றெனக்கு எளிவந்து இருந்தனன்`` எனப் பின்னர் வருவதன் பொருளே இதற்கும் பொருளாக உரைப்பர்.
`எளிது` என்பது ஈறு குன்றி, `வருதல்` என்பதனோடு புணர்ந்து, `எளிவருதல்` என நிற்றல் செய்யுள் முடிபு. அவ்வாற்றானே இங்கு `எளிவந்து` என வந்தது என்க, ``அருளி`` என்றது, துணை வினை. இதனானே, எளிவந்தது, அருளால் என்பது போந்தது.
118. ஆக்கை - உடம்பு; என்றது, அதன் தன்மையை.
``யாக்கைத் - தன்பரிசும் வினையிரண்டும் சாரும்மலம் [மூன்றும் அற
அன்புபிழம் பாய்த்திரிவார்``
(தி.12 கண்ணப்பர் புரா. 154) என்று அருளிச்செய்தார் சேக்கிழார் நாயனாரும். ஒண்பொருள் - தூய்தாகிய பொருளாய் உள்ளவன். `ஆதலின், எனது யாக்கையின் மாசினை ஒழித்தான்` என்றதாம்.
119. ``இருந்தனன்`` என்றது வினையாகலின், `அவனுக்கு` என்பது வருவிக்க.
120. அளிதரல் - நெகிழ்தல்; இஃது அன்பினால் ஆவதாம். எனவே, மேல், ``அன்புபிழம்பாய்த் திரிவார்`` எனக் காட்டிய நிலையே அடிகள் மாட்டும் அமைந்தமையறிக.
121. ஊற்று இருந்து - இன்ப ஊற்றாய் உள்ளிருந்து, உள்ளம் - அடியார்களது உள்ளங்களை. களிப்போன் - களிக்கச் செய்வோன். `களிப்பிப்போன்` என்பது, `களிப்போன்` எனக் குறைந்து நின்றது. ``செய்தோன், களிப்போன்` என்பவற்றில் நான்கனுருபு தொகுத்தலாயிற்று.
122-123. மேல் இறைவனது பெருமையை விதந்தோதிப் போற்றியவர் இனி அவனது அருமையை விதந்தருளிச் செய்கின்றார். தாங்கற்கரிய பேரின்ப வெள்ளம் எங்கும் பரந்து அலையெறியாநிற்ப, அதனைப் பெற்றுப் பேணமாட்டாத மாசுடம்பினைச் சுமத்தலாகிய துன்ப நிலையை யான் விண்ணப்பித்திலேன்; `ஆயினும்` என்பது இவ்வடிகளின் பொருள். `ஆயினும்` என்பது சொல்லெச்சம். இது, `காட்டியருளலும்` என வருவதனோடு (அடி 149) முடியும்.
124-126. மரகதம் - பச்சைமணி. குவால் - குவியல். மா மணி- சிறந்த மணி. பிறக்கம் - மிகுதி; இதுவும் குவியல் என்றவாறாம். மரகதக் குவியலும் மாணிக்கக் குவியலும் இணைந்து மின்னுகின்ற ஒளியை உடைய ஓர் அழகிய ஒளி; சிவசோதி. இது, `சத்தியின் கூறாகிய நீல ஒளியையும், தன் கூறாகிய செவ்வொளியையும் கொண்டது` என்பதை `கிருஷ்ண பிங்களம்` என மகாநாராய ணோபநிடதம் கூறுமாற்றால் அறிக.
திகழ - தம்முன் விளங்க. திசை, இங்குக் கீழும், மேலும். முகன், `முகம்` என்பதன் போலி, `பக்கம்` என்பது இதன் பொருள். சிவசோதியை, கீழும் மேலும் சென்று அதன் அடியையும் முடியையும் தேடினோர் திருமாலும், பிரமனும் என்பதும், அவர் அங்ஙனம் தேடிக் கண்டிலர் என்பதும் வெளிப்படை. இது முதலாக, ``ஒளித்தும்`` என வருவன பலவற்றுள்ளும் உள்ள உம்மைகள் உயர்வு சிறப்பினவாம். இது தேவர்க்கு அரியனாயினமையை அருளியவாறு.
127. முறையுளி - முறைப்படி. ஒற்றி - மனத்தைப் பொருத்தி. முயன்றவர் - சரியை கிரியைகளைச் செய்தவர், அவர்கட்கும் இறைவன் மறைந்து நின்றே பயன் தருதலின், ``ஒளித்தும்`` என்றார்.
128-129. யோகநெறியில் தியான சமாதிகளில் நிற்பவரை, ``ஒற்றுமைகொண்டு நோக்கும் உள்ளத்து உறைப்பவர்`` என்றார். உறைத்தல் - பிறழாது அழுந்தி நிற்றல். உலகருள் இவர் தம் சுற்றத்தார் இவரது செயலைக்கண்டு இரங்குவராதலின், ``உற்றவர் வருந்த`` என்றார். இவர்கள் இறைவனைக் காண்பதும் பாவனையே யாதலின், அவர்கட்கும் இறைவன் தோன்றானாயினான்.
130. மறைத்திறம் - வேதத்தினது கூறுபாடுகள். அவை, `கன்ம காண்டம், உபாசனா காண்டம், ஞான காண்டம்` என்பன. இவை முறையே, வேள்வி முதலிய கன்மங்களையும் தகர வித்தை முதலிய உபாசனைகளையும், `தத்துவ ஞானம்` எனப்படும் மெய்ப்பொருள் உணர்வையும் கூறும். வேதத்தின் ஞான காண்டம் முதற்பொருளின் இயல்பைச் சூத்திரம்போலக் குறிப்பாற் கூறுதலல்லது, உரைபோல இனிது விளங்கக் கூறாமையின், அதன்வழியானும் இறைவனை உணர்தல் கூடாதாயிற்று. வேதத்தின் ஏனைய பகுதிகளின்வழி உணர லாகாமை வெளிப்படை. `மறைத்திறத்தால்` என, மூன்றாவது விரிக்க.
131-132. ``தந்திரம்`` என்றது, சிவாகமங்களல்லாத பிற ஆகமங்களை. காண்டும் - காண்போம். இன் இரண்டும் ஏதுப் பொருளவாய ஐந்தனுருபுகள். ``அவ்வயின்`` என்றது, முன்னர்ப்போந்த ``காண்டும்`` என்றதனைச் சுட்டிநிற்றலின், `அங்ஙனம் காணுதற்கண்` என உரைக்க. இதன்பின், ``ஒளித்தும்`` என்றது, சிறிதும் தோன்றாமையை. சிறிதும் தோன்றாது மறைதல், புத்த அருக ஆகமங்களின்வழிக் காணலுறுவார்க்காம். அவர் இறைவனைக் காண முயல்வாரல்லரெனின், அஃ து உண்மையாயினும், பேரா இயற்கை (குறள்- 370.)யாகிய வீடுபேற்றைப்பெற விழைந்து முயலுதலானும், வீடு சிவ பெருமானின் வேறன்றாதலானும் இங்ஙனம் கூறினார். தந்திரம், `நூல்` எனவும் பொருள் தருமாதலின், சாங்கியம் போல்வனவும் கொள்ளப்படும் என்க.
133-135. பாஞ்சராத்திரம், பாசுபதம் முதலிய ஆகமங்களின் வழிக் காண முயல்பவர்களில் சிலர்க்கு ஆண்வடிவாயும், சிலர்க்குப் பெண்வடிவாயும், சிலர்க்கு அஃறிணைப் பொருள் வடிவாயும் தோன்றி மறைந்து தனது உண்மை நிலையைக் காட்டாதொழிதலை இவற்றுட் குறித்தருளினார். ஆண்வடிவில் தோன்றுதல் பாஞ்ச ராத்திரம், பாசுபதம் முதலிய தந்திரங்களின்வழிக் காணப்புகுவார்க்கு எனவும், பெண்வடிவில் தோன்றுதல் யாமளம், வாமம், முதலிய தந்திரங்களின் வழிக் காணப்புகுவார்க்கு எனவும், அஃறிணைப் பொருள் வடிவில் தோன்றுதல் மிருதி முதலியவற்றின்வழிக் காணப் புகுவார்க்கு எனவும் கொள்க. மிருதி முதலியவற்றின்வழி நிற்போர் மந்திரங்கள், ஞாயிறு முதலிய சுடர்கள், கங்கை முதலிய பல தீர்த்தங்கள் முதலானவையே பயன் தருவன எனக்கருதி வழிபடு வோராதல் அறிக. இவர்களை இறைவன் புத்தர் முதலியோரைப்போல் வெறுத்தொதுக்காது, அருளோடு நோக்கி, இன்னும் தன்னை மிக அணுகிவருமாறு பற்றிக்கொண்டு, இவ்வாற்றாலெல்லாம் பயன் தருதலால், ``முனிவற நோக்கி நனிவரக் கௌவி`` என்றும், அவ்வாறு அருளினும் தனது உண்மை இயல்பை இவர்கட்குக் காட்டாமையின், ``ஒளித்தும்`` என்றும் அருளிச் செய்தார். எனவே, ``அவ்வயின் ஒளித்தும்`` என்றது, இத்தந்திரத்திற் காண்டும் என்று இருந்தோருள் ஒரு சாரார்க்கு என்பதும், தோன்றி, பெயர்ந்து ஒளித்தும்`` என்றது, அவருள் வேறு சில சாரார்க்கு என்பதும் போந்தன. இத்துணையும் மக்களுள் இல்லற நிலையில் நிற்பார்க்கு அரியனாயினமை கூறிய வாறு.
136-138. ``சேண்வயின்`` என்றதனை, இவற்றொடு கூட்டுக. ஐம்புலன் - ஐம்புல ஆசை; `அவற்றைச் சேண்வயின் நீங்கப் போக்கி` என்க. சேண்வயின் - சேயதாய இடம். அருவரை - ஏறுதற்கு அரிய மலை. துற்றவை - உண்டவை; நுகர்ந்த இன்பங்கள். ``துறந்த`` என்றது, `வெறுத்துநின்ற` என்றவாறு. `வெற்றாக்கை, உயிராக்கை` எனத் தனித்தனி இயையும். உணவைத் தானும் உண்ணாது விடுத்தலின், ``வெற்றாக்கை`` என்றார். `வெற்றாக்கை` என்றே ஒழியின், `உயிரில்லது` எனப் பொருள்படுமாகலின், `உயிராக்கை` என்றும் அருளினார். தவர் - நீர்பலகால் மூழ்கல் முதலிய நாலிருவழக்கினை யுடைய தாபதர்கள் (புறப்பொருள் வெண்பா மாலை-168.). காட்சி - அறிவு. திருந்த - அறிவராய் (ஞானிகளாய்)த் திருந்துமாறு. இது, துறவற நிலையில் நின்றார்க்கு அரியனாயினமை அருளியவாறு. இவர் கிரியா குருவைப் பெற்று இந்நிலையில் நின்றதல்லது ஞான குருவைப் பெறாமையின், இவர்க்கு இறைவனது உண்மை இயல்பு விளங்காதாயிற்று.
139. அறிவு, அநுபவமுடைய நல்லாசிரியரால் அறிவுறுக்கப் பெற்ற உண்மைப் பொருளைப் பெற்ற அறிவு. அது, பின்னர் அப் பொருளை அளவைகளானும் பொருந்துமாற்றானும் ஆராய்தலை, ``ஒன்று உண்டு, இல்லை என்ற`` என்றார். `ஒன்றாகிய மெய்ப்பொருள் உண்டு என்றும், இல்லை என்றும் ஆராய்ந்த` என உரைக்க. இங்ஙனம் ஆராயுங்காலத்து, இறைவன் எல்லாமாய் நிற்கும் கலப்புநிலை விளங்குவதன்றி, அவன் தன்னியல்பில் நிற்கும் உண்மைநிலை விளங்காமையின், இறைவன் இவர்க்கும் ஒளிப்பவனேயாகின்றான். `என்ற` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.
140-145. பண்டு, சரியை கிரியை யோகங்களைச் செய்து போந்த காலம். நல்லாசிரியர்பாற் கேட்டுச் சிந்தித்தகாலத்தை, `இன்று` என்றனர் என்க. ஏகாரங்கள் இரண்டும் பிரிநிலை. அவற்றாற் பிரிக்கப் பட்டு நின்றவை, அவை அடுத்து நின்ற காலத்திற்குப் பிற்பட்ட காலங்கள். சோரன் - கள்வன். தெளிதல் உணர்வில் விளங்கிய அருள் நிலையைக் கண்டு, `கண்டனம்` என்றனர். எனினும், நிட்டை நிலையை அடையாமையின், தம்முனைப்பால் பல கூறுவாராயினர். ஆர்மின் - கட்டுங்கள். கள்வன் அகப்படிற் கட்டுதல் இயல்பு. அடுக்கு, விரைவுபற்றி வந்தது. எனவே, இந்நிலையிலும் ஒளிப்பான் எனக் கருதினமை பெறப்பட்டது. நாள் மலர்ப் பிணையல் - அன்றலர்ந்த மலர்களாலாகிய மாலை. தாள் - கால். தளை - விலங்கு. ஒளித்தல் பற்றி, `சோரன்` என்றார்களாயினும், அன்பாற் செய்யும் வழிபாட்டி னாலல்லது அவனை அகப்படுத்தல் இயலாது என்பதை உணர்வார் ஆதலின், `நாண்மலர்ப் பிணையலில் தாள்தளை இடுமின்` என்றனர். கட்டுதலும், தளையிடுதலும் வேறு வேறாதல் அறிக. இங்ஙனம் விரையவும், நீங்க முயலுதல்பற்றி, `சுற்றுமின்` (வளையுங்கள்) என்றும், அஃது இயலாமையின், `சூழ்மின் (என்செய்வதென்று ஆராயுங்கள்)` என்றும், அங்ஙனம் ஆராய்வதற்குள் நீங்கினமையின், `தொடர்மின், விடேன்மின், பற்றுமின்` என்றுங் கூறி அலமந்தனர். அவர் அங்ஙனம் அலமரவும். இறைவன் அவரது பற்றினின்று (பிடியினின்றும்) முற்ற ஒளித்தான். அஃதாவது அருள் நிலையைத் தந்ததன்றி, ஆனந்த நிலையைத் தாராதொழிந்தனன் என்றதாம். `பற்றின்` என, நீக்கப்பொருட்கண் வந்த இன்னுருபு விரிக்க. `முற்ற` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.
``ஒளித்தும், ஒளித்தும்`` எனவந்த எச்சங்கள் எல்லாம், ``என்னே ரனையோர் கேட்க வந்து`` என்றதில் `வந்து` என்றதனோடு முடியும். ``தன்னேரில்லோன்`` என்றது, `இறைவன்` என்னும் அளவாய் நின்றது, `மேற்கூறியவாறெல்லாம் முயன்றார் பலர்க்கும் தனது உண்மை நிலையைக் காட்டாது ஒளித்த இறைவன், அதனை என் போல்வார் கேட்டுணரும்படி நேரே எழுந்தருளி வந்து இயம்பியருளினான்` என்று அடிகள் அன்புமீதூரப்பெற்று அருளுதல் காண்க. ``நேரனையோர்`` ஒரு பொருட் பன்மொழி. `என்போல்வார்` என்றது, மேற்கூறிய முயற்சிகளுள் ஒன்றும் செய்யாது, உலகியலில் நின்றவர்களை. இறைவனது பெருங்கருணைத்திறத்தை அடிகள் இங்ஙனம் அருளிச் செய்தாராயினும், இவரது முன்னைத் தவமுதிர்ச்சியின் பயனே அங்ஙனம் இறைவன் நேர்நின்று ஆட்கொண்டது என்க. இஃது இத்திருமுறையுள் யாண்டும் ஒக்கும், முயலாது நின்ற நிலையில் வலிய வந்து ஆண்டருளியதையே ``அறைகூவி ஆட்கொண்டருளி`` என்று அருளிச் செய்தார். இயம்பி ஆட்கொண்ட பின்னரும் நீங்காது உடனிருந்தமை தோன்ற, `மறையோர் கோலத்தனாய் வந்து ஆட்கொண்டருளி` என்னாது, `வந்து ஆட்கொண்டருளி, `மறையோர் கோலம் காட்டியருளலும்` என்றார். `காட்டியருளலும் ஆற்றேனாக` என இயையும்.
150-157. உளையா அன்பு - வருந்திப்பெறாத - இயல்பாகத் தோன்றிய அன்பு. `உலையா அன்பு` என்பதே பாடமாகல்வேண்டும். `அன்பினால்` என உருபு விரிக்க, `என்பும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொக்கது. உருகும் இயல்பின்மை, எலும்பிற்கு இழிவு என்க. அலைகடல் - அலைகின்ற கடல்நீர். திரையின் - அலைகள் போல. ஆர்த்து - ஆரவாரித்து, கடலில் ஆரவாரம் செய்வன அலைகளேயாதல் அறிக. ஓங்கி - துள்ளி. தலை தடுமாறா - தலை கீழாம்படி. மத்தம் - உன்மத்தம். பித்து, தொடக்க நிலை; மத்தம், முதிர்ந்த நிலை. மதித்தல் - மத்திட்டுக் கலக்குதல்; இங்கு அதுபோல உலகில் உள்ளாரது உள்ளங்களை வியப்பாலும், அச்சத்தாலும் நிலை குலையச் செய்தமையைக் குறித்தது. ஆனேற்றை, ``ஏற்றா`` என்றார். ``தடப்பெரு`` ஒரு பொருட் பன்மொழி. ஆனேறுகளும் மதங்கொள்ளு தல் இயல்பு. `களிறு ஏற்றா இவற்றின் மிகப்பெருமதம் அவற்றால் ஆற்றவொண்ணாமைபோல, இறைவனால் ஆட்கொள்ளப்பெற்ற களிப்பை யான் ஆற்றேனாய் நிற்க என்க. ``ஆற்றேனாக`` என்றதன் பின், `அந்நிலையில்` என்பது வருவிக்க. ``அவயவம்`` என்றதற்கு, `என் உறுப்புக்களை` என உரைக்க. கோல் தேன் - கொம்புத்தேன். ``செய்தனன்`` என்றது, `செய்தாற்போல ஆக்கினன்` என்றபடி. அஃதாவது `உள்ளமும் உடலும் ஒருங்கே இன்பவெள்ளத்தில் மூழ்கச் செய்தனன்` என்றதாம்.
158-162. ஏற்றார் - தனது போரினை ஏற்றுக்கொண்டவர், ``மூதூர்`` என்றது, திரிபுரத்தை, `மூதூரை வீழ்வித்து` என இயையும். ஆங்கு, உவம உருபு. ``அன்று`` என்றதனை, முதற்கண், கூட்டுக. ``அருட்பெருந் தீ` என்றது, சோதியை, ``கருவார் சோதி`` (கீர்த்தி-55) என்றது காண்க. அடிக்குடில் - முதலிற் கிடைத்த சிறிய இல்லம்; உடம்பு. `வாழாமை` என்பது குறுகிநின்றது. `அடியோங்களது அடிக் குடிலுள் ஒருத்தரும் வாழாதபடி, அருட்பெருந்தீயின் ஒடுக்கினன்` என்க. ``எனக்கு`` எனப் பின்னர்த் தம்மை வேறு கூறலின், ``ஒருத்த ரும்`` என்றது, அடிகளை ஒழிந்தோரையேயாம். ஆயினும், யானும் அக்குடிலில் இருக்க `என்னை ஒடுக்கா தொழிந்தனன்` என்பது தோன்ற, `அடியார் அடிக்குடில்` என்னாது, ``அடியோம் அடிக்குடில்`` என்றார். இறைவன் அந்தணனாய் வந்து நிகழ்த்தியன பலவுங் கூறுகின்றாராதலின், பிறர்க்கு அருளியவற்றையும் கூறினார் என்க. தடக் கை - பெரிய கை; என்றது, தடங்கண், தடஞ்சோலை முதலியன போல, அகன்ற அகங்கையைக் குறித்தது. சுவையுடைய பொருள்களில், கனிகள் சிறந்தவை. அது, ``கனியிருப்பக் காய் கவர்ந் தற்று``, (குறள்-100) ``கனிதந்தால் கனி உண்ணவும் வல்லிரே`` (தி. 5. ப.91. பா. 7) என்றாற்போல்வனவற்றாலும் அறியப்படும். இனி, கனி களுள் நெல்லிக்கனி சிறந்தது என்பது, ஔவையார்க்கு அதியமான் நெல்லிக்கனியளித்தமை முதலியவற்றால் விளங்கும். அதனால், `அங்கை நெல்லிக்கனி` என்னும் உவமை, ``யானைதன் - கோட்டிடை வைத்த கவளம்`` (புறம் -101) என்பதுபோல, தப்பாது பயன் படுதலைக் குறிப்பதாம். ஆகவே, இப்பகுதியால், பலருக்கு ஒளித்த இறைவன், என்போல்வாரை அறைகூவியாட்கொள்ளுதலை மேற் கொண்டு, எனக்கும் ஆசிரியத் திருமேனியைக் காட்டி, உள்ளத்தையே யன்றி உடம்பையும் இன்ப வடிவாக்கி, பின் உடம்பளவில் நில்லாது எங்குமாய் நிறைந்து நுகரும் இன்பத்தினை ஒருதலையாக எய்துவிக்க இசைந்தனன் என்றவாறாயிற்று. இறைவன் தமக்கு எங்குமாய் நிறைந்து நுகரும் இன்பத்தினை எய்துவித்தல் ஒருதலை` என்பதை, அவன் வாளா செல்லாது, ``நலமலி தில்லையுட் கோலமார் தரு பொதுவினில் வருக`` (தி.8 கீர்த்தி-127-128) என்று அருளிச் சென்றமையால் உணர்ந்தார் என்க. இஃது உணர்ந்தாராயினும், `ஏனைய அடியார்கட்கு இறைவன் வாயுட் புக்க நெல்லிக் கனியாயினன்; எனக்குக் கையிற்புக்க நெல்லிக்கனியாயினன்` என்ற பொருளையும், `எனக்குத் தடக்கையின் நெல்லிக்கனியாயினன்` என்ற உவமையால் தோற்றுவித்தார். எனவே, இனி வருகின்ற ஐந்தடி களையும் தமக்கு அருளிய அருமையும், ஏனையோர்போல விரைந்து செல்ல அருளாமையும் என்னும் இருகருத்தும் பற்றியே வருவன வாகக் கொள்க.
163-167. வாழி, அசைநிலை. செய்தது - இந்நிலையினன் ஆக்கியது. `ஆவா, செத்தேன்` என்னும் இடைச்சொற்கள், `வியப்பும், அவலமும்` என்னும் இருகுறிப்பினும் வருவனவாம். ஒல்ல கில்லேன் - ஆற்றமாட்டேன்; முற்றப் பெற்றிலேன். `வாரிக் கொண்டு - விழுங்குகின்றேன் விக்கினேன்` (தி.8 அடைக்கலப் பத்து-10) என்று அருளுதலும் காண்க.
168-177. இனி, `அவயவம் கோற்றேன் கொண்டுசெய்தனன்` என மேல் தொகுத்துணர்த்தியதனை, ஈண்டு வகுத்து உணர்த்து கின்றார். புரைவித்து - ஒப்பாகச் செய்து. உவா - பௌர்ணமி. நள்ளுநீர்-மிகுகின்ற நீர். `உவா நாளிற் கடலின் கண் மிகுகின்ற நீர் போல, நெஞ்சிடமெல்லாம் நிறையும்படி` என்க. `இறந்த என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. ``வாக்கிறந் தமுதம்`` என்றதனை ``உவாக்கடல்`` என்ற அடியின் முன்னே கூட்டி, இரண்டனையும், ``செழுந்தண் பாற்கடல்`` என்பதற்கு முன்னே வைத்துரைக்க. வாக்கிறந்த அமுதம் - சொல்ல வாராத பேரின்பம். `அஃது உள்ளகத் தில் ததும்புமாறு பாற்கடல் திரைபோல் வித்து` என்க. உவாநாளிற் பொங்கக் காண்டல் நீர்க்கடலிடத்தே யாதலின், மிகுதற்கு அதனையே உவமை கூறினார். இனிமைக்குப் பாற்கடலை உவமை கூறினார். நாய் - நாய்போலும் எனது. குரம்பை - கட்டு; குடில். ``குரம்பைகொண்டு`` என்றது, `இடமாகக்கொண்டு` என்றபடி. குரம்பைதோறும் - உடம்பில் உள்ள பல கட்டுக்களில் எல்லாம். ``புன்புலால் யாக்கை புரைபுரை கனிய`` (தி.8 பிடித்த பத்து-10) எனப் பின்னரும் வருவது காண்க. ``குரம்பைதோறும்`` என்றதை, ``குரம்பை கொண்டு`` என்றதன் பின்னர்க் கூட்டுக. மேல், உள்ளத்தை நிறைத்தமை கூறினார்; இங்கு, உடம்பினுள் பல பகுதிகளை நிறைத்தமை கூறினார். `பாய்` என்னும் தன்வினைப் பகுதி, பிறவினையுணர்த்தும் துவ்வீறு பெற்று, `பாய்த்து` என நிற்றலின், வினையெச்சத்தின்கண் இகர ஈறாயிற்று. இது, `பாய்ச்சி` என வருதல் பெரும்பான்மை. அற்புதம் - அதிசயம். என்பு - `எற்பு` எனத் திரிந்தது, `உருகும் உள்ளம் என்ற ஒன்று கொண்டே ஓர் உடம்பைச் செய்தாற் போல, அன்பு சுரந்து பெருகுகின்ற உடம்பை எனக்கு அமைத்தனன்` என்க. அன்பு பெருகும் வழியே இன்பமும் பெருகுமாதலின், இதனையும் அருளிச் செய்தார். அள் - மிகுதி.
178-181. `என்னையும் கடைமுறை களிறு என இருப்பதாக்கினன்` என இயைக்க. ``என்னையும்`` என்ற உம்மை, உயர்வு சிறப்பு. உயர்வு, மேற்கூறியவாற்றால், பொருளும், பேரன்பும், பேரின்பமும் பெற்றமை. ``ஒள்ளிய`` என்றது, `உணவாதற்குச் சிறந்த` என்றவாறு. கன்னல் - கரும்பு. கனி, வாழை முதலியனவாக ஏற்பன கொள்க. உம்மைத் தொகை திரிந்து முடிதலும் உண்மையின் ``கன்னற்கனி`` என நின்றது. தேர்தல் - தேடி உழலுதல். ``இருப்பது`` என்பது, தொழிற்பெயராய், வினைமுதற்கு ஆயிற்று. `இறைவன் பிறர்க்குப் போல எனக்கு அரியனாகாது எளியனாய் வந்து அருள் செய்தும், இறுதியில், தனது பெருவாயையும் பெருவயிற்றையும் நிரப்புதற்பொருட்டு இனிய உணவுகளையே எஞ்ஞான்றும் தேடித் திரிகின்ற யானையைப் போல், உணவைத் தேடி உண்டு இப்பூமியின்கண் இருக்கும்படி விட்டுச் சென்றான்` என்றபடி. ``இருகை யானையை ஒத்திருந் தென்னுளக் - கருவை யான் கண்டிலேன்`` (தி.8 திருச்சதகம்-41), ``பொய்யனேன் நான் உண்டுடுத்திங் கிருப்பதானேன்`` (தி.8 திருச்சதகம் -52) எனப் பின்னரும் கூறுதல் காண்க. ``இருப்பதாக்கினன்`` என்றதன்பின், `ஆகையால்` என்பது வருவிக்க. `என்னின் அமுதாக்கினன்` என இயையும். என்னின் - என்னால். கருணை வான் தேன் கலக்க - தனது திருவருளாகிய உயர்ந்ததேன் கலந்திருக்க. அருளொடு - அவ்வருள் நினைவோடே. பராவு - துதிக்கின்ற. அமுது - அமுதம் போன்ற பாடல்களை. ஆக்கினன் - உளவாகச் செய்தான். இதனால், திருவாசகம், திருக்கோவையார் என்னும் இருதிறத்துத் திருபாட்டுக்களும் வெளிவந்து உலகிற்குப் பெரும் பயன் தருதற் பொருட்டே அடிகளை இறைவன் இந்நிலவுலகத்திற் சிறிதுகாலம் எழுந்தருளியிருக்கும்படி விட்டுச்சென்றனன் என்பது நன்கு பெறப் படுதல் காண்க. இன்னும் இதனானே, மேல், ``பரமானந்தப் பழங்கடல்`` என்பது முதலாக உருவக வகையால் விரித்தோதி, இறுதியில், ``தொண்ட உழவர் ஆரத் தந்த`` என்றதும், அனைவரும் தன்னைப் பாடிப் பரவித் தனது திருவடிக்கண் அன்பு மிக்குத் தனது பேரின்பத்தைப் பெறுமாறு அடிகளது திருமொழியை இறைவன் உலகிற்கு அளித்தருளினான் என்பதனையே குறிப்பான் உணர்த்தியதாதல் பெறப்படும். இது கொண்டே சிவப்பிரகாச அடிகள், (நால்வர் நாண்மணி மாலை, பா.16) ``வலமழுவுயரிய`` என்னும் பாட்டினுள் ``திருவாசகம் எனும் பெருநீர்`` என உருவகித்து முன்னும் பின்னும் முற்றுருவக நலம் நனிசிறந்து விளங்க அடிகளது திருமொழியின் பெருமையை இனிது விளக்கினார் என்க. ``நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனை`` (தி.8 திருக்கோத்தும்பி-12.) எனப் பின்னரும் வருதல் காணத்தக்கது. ``பத்திமையாற் பணிந்தடியேன் றன்னைப் பன்னாள் - பாமாலை பலபாடப் பயில்வித்தானை`` (தி. 6. ப.54. பா. 3) என்றருளிச்செய்தார். திருநாவுக்கரசு சுவாமிகளும். ஞானசம்பந்தரும், நம்பியாரூரரும் போல நாவுக்கரசரும், வாதவூரடிகளும் தம் திருமொழியின் பெருமை களைப் பலவிடத்தும் இனிது விளங்க எடுத்தோதியருளாது போயினும், இவ்வாறு ஒரோவிடத்துக் குறிப்பால் தோன்ற அருளிச் செய்தலைக் குறிக்கொண்டு உணர்தல் நம்மனோர்க்குத் தலையாய கடனாகும்.
182. பெற்றி - தன்மை ``பிரமன் மால் அறியாப் பெற்றி யோன்`` என்றது, `அவன்` என்னும் சுட்டுப் பெயரளவாய் நின்றது. இதனை, ``ஓல்லகில்லேன்`` (அடி 167) என்றதன் பின்னர்க் கூட்டி, இதன் பின்னர், `இவ்வாறு` என்பது வருவித்துரைக்க.
இத்திருப்பாட்டில் சொற்கள் பொருள் இயைபுபட நிற்குமாறு:-
ஆறாம் அடியிற் போந்த, ``பெரியோன்`` என்னும் குறிப்பு வினைப்பெயர் எழுவாயாய் நின்று, பன்னிரண்டாம் அடியிற் போந்த ``குழகன்`` என்பது முதலாக, தொண்ணூற்றைந்தாம் அடியிற்போந்த, ``மேகன்`` என்பது ஈறாக நின்ற பெயர்ப் பயனிலைகளைக் கொண்டு முடிந்தது.
``மேகன்`` என்றதன்பின் எஞ்சி நின்ற `அவன்` என்பது முதலாக, நூற்றைந்தாம் அடியிற்போந்த, ``வைப்பு`` என்பது ஈறாக நின்ற பெயர்கள் பலவும் எழுவாயாய் நின்று, ஆங்காங்கே போந்த ``வாழ்க`` என்னும் வினைப்பயனிலையோடே முடிந்தன.
நூற்று ஆறாவது முதலிய மூன்றடிகளிலும் போந்த, ``நம்பன்`` முதலிய மூன்று பெயர்களும், தொக்கு நின்ற நான்கனுருபை ஏற்று, ஆங்காங்குப் போந்த, ``போற்றி`` என்ற தொழிற் பெயர்ப் பயனிலை களோடு முடிந்தன. நான்கனுருபு பெயரோடு முடிதலும் இயல்பே.
நூற்றுப் பதினொன்றாம் அடியிற் போந்த, `தொல்லோன்` என்பது முதலாக, நூற்றுப் பதினெட்டாம் அடியிற் போந்த, ``ஒண்பொருள்`` என்பது ஈறாக நின்ற ஐந்து பெயர்களும் எழுவாயாய் நின்று, நூற்றுப் பத்தொன்பதாம் அடியிற் போந்த `இருந்தனன்` என்னும் வினைப்பயனிலையைக் கொண்டு முடிய அதன்பின் எஞ்சி நின்ற, `அவனுக்கு` என்பது, அவ்விடத்தே நின்ற, ``போற்றி`` என்பத னோடு முடிந்தது. நூற்றிருபது, இருபத்தொன்றாம் அடிகளின் முடிபு களும் அவ்வாறாதல் வெளிப்படை.
நூற்று இருபத்திரண்டாவது முதலாக, நூற்று ஐம்பத்தேழாவது ஈறாக உள்ள அடிகளிற் போந்த சொற்கள், `யான்` புகலேனாகவும், தன்னேரில்லோன் பலர்க்கும் ஒளித்தும், என்னேரனையோர் கேட்க வந்து தானேயான தன்மையை இயம்பி ஆட்கொண்டருளி மறையோர் கோலம் காட்டியருளலும், யான் ஓலமிட்டு, ஆர்த்தார்த்து, ஓங்கி வீழ்ந்து புரண்டு, அலறி, மயங்கி, மதித்து ஆற்றேனாகும்படி, என் அவயவங்களைக் கோற்றேன் கொண்டு செய்தனன்` என முடிந்தன.
நூற்று ஐம்பத்தெட்டு முதலாக, நூற்று அறுபத்திரண்டு ஈறாக உள்ள அடிகளுக்கு மேற்போந்த பெயர்களே எழுவாயாய் நின்று, ``ஒடுக்கினன்``, ``ஆயினன்`` என்னும் வினைப் பயனிலைகளைக் கொண்டு முடிந்தன.
நூற்று அறுபத்துமூன்று முதலாக, நூற்று அறுபத்தேழு ஈறாக உள்ள அடிகளில், `யான்` என்பது தோன்றா எழுவாயாய் நின்று ``அறியேன்`` என்பது முதலாக ``ஒல்லகில்லேன்`` என்பது ஈறாகப் போந்த வினைப் பயனிலைகளைக் கொண்டு முடிந்தது.
ஈற்றடி, நூற்று அறுபத்தேழாம் அடியின் பின் வந்து நிற்ப, அதன்கண் உள்ள, ``பெற்றியோன்`` என்னும் பெயர் எழுவாயாய், நூற்று அறுபத்தெட்டாவது முதலாக, நூற்று எண்பத்தொன்றாவது ஈறாக உள்ள அடிகளிற் போந்த, ``புரைவித்து, தேக்கிடச்செய்தனன், இன்தேன் பாய்த்தி அமுத தாரைகள் ஏற்றினன், அள்ளூறாக்கை அமைத்தனன், என்னையும் இருப்பதாக்கினன், என்னின் பாரவமுது ஆக்கினன்`` என்னும் பயனிலைகளோடு முடிந்தன. ``கண்ணால் யானும் கண்டேன்`` என்பது முதலிய ஆறடிகளும் இடைநிலையாயும், அவற்றை அடுத்துப்போந்த இரண்டடிகளும், பின் வருவனவற்றிற்குத் தோற்றுவாயாயும் நின்றன. ``நினைதொறும் ஆற்றேன் அந்தோ கெடுவேன்`` என்றனவும் இடைநிலையேயாம். இங்ஙனமாகவே, இதனுள் முதற்கண் இறைவனது பெருமைகளை வியந்து கூறி, இடைக்கண் அவனை வாழ்த்துதலும், போற்றுதலும் செய்து, இறுதிக்கண் தமக்கு அவன் செய்த திருவருள் முறையினைக் கூறி முடித்தருளியவாறாதல் காண்க.