Saturday, June 11, 2011

பொன்மொழிகள்


நோயைவிட அச்சமே அதிகம் கொல்லும்

முழுக்க முழுக்க சர்க்கரையாக இருந்து விடாதே;உலகம் உன்னை விழுங்கி விடும்

நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்கு குதியானது உங்களுக்கு ண்டிப்பாககிடைத்தே தீரும்.

உங்கள் ந்தேகங்களை ந்தேகப்படுங்கள் உங்கள் ம்பிக்கைகளை ம்புங்கள்.

தோல்வியின் அடையாளம் தயக்கம்!வெற்றியின் அடையாளம் துணிச்சல்!

துணிந்தவர் தோற்றதில்லை!!
 தயங்கியவர் வென்றதில்லை!!

காதலிக்கலாமா என்று சிந்திப்பவர்கள்,சன்யாசம் வாங்கிக் கொள்ளலாமா என்று யோசிப்பவர்கள்,தற்கொலை செய்து கொள்ளலாமா என்று ஆராய்பவர்கள் எல்லாரும் ஒரே ரகம். நினைப்போடு சரி

நீர் அமைதியாக இருப்பதால் முதலைகள் இல்லையென்று நினைத்து விடாதே

எங்கே விழுந்தாயென பார்க்காதே, எங்கே வழுக்கினாயென பார்

முன்போக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்

ஒரு மலரையோ, ஒரு பட்டுப் பூச்சியையோஅதன் தோற்றத்தைக் கொண்டு மதிப்பிட்டு விடலாம்.
ஆனால் மனிதப்பிறவியை அவ்வாறு மதிப்பிட இயலாது

வாழ்க்கை என்பதுஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதிருங்கள்ஒரு கடமை - நிறைவேற்றுங்கள்ஒரு இலட்சியம் - சாதியுங்கள்ஒரு சோகம் - தாங்கிக்கொள்ளுங்கள்ஒரு போராட்டம் - வென்றுகாட்டுங்கள்ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்

எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.
ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.

எல்லோரும் தம்மை விட்டுவிட்டு வேறுயாரையோ
சீர்திருத்த முயலுகிறார்கள்

ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை.
முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

வாழ்வதுசிலகாலம்உள்ளம் அழுதிடினும்
உதடு சிரிக்கட்டுமே!

வாழ்க்கை!!ஓராயிரம் கற்பனைகளும்ஒன்று இரண்டு நிஜங்களும்

செய்ய முடிந்தவன் சாதிக்கிறான்,
செய்ய முடியாதவன் போதிக்கிறான்.

முயலும் வெல்லும்!ஆமையும் வெல்லும்!!
முயலாமை வெல்லாது!!!

ஓடத் தொடங்குமுன்
நடக்க பழகிக்கொள்வோம்.


ஒரு விளக்கு இன்னொரு விளக்கைஏற்றுவதால் அதற்கு இழப்பு ஒன்றும் இல்லை.


சட்டம் ஒரு சிலந்திக்கூடு. வண்டுகள் அதை அறுத்துக்கொண்டு அப்பால் போகின்றன. ஆனால், பூச்சிகள் அதில் சிக்கிக் கொள்கின்றன

உனக்கு ஒரே ண்பன்நீயே, ஒரே பகைவனும்நீயே, ன்னைத் விர பகைவனும் ல்லை, ண்பனும் ல்லை


உண்மையைச் சிலசமயங்களில் அடக்கி வைக்க முடியும். ஆனால் ஒடுக்கிவிட முடியாது

No comments:

Post a Comment