Showing posts with label காதல் கவிதை. Show all posts
Showing posts with label காதல் கவிதை. Show all posts

Friday, June 10, 2011

காதல் கவிதை


நீ
என் இதயத்தில் 
இருப்பவள் அல்ல
என் இதயமாயிருப்பவள் 
என்பதால்தான்
உன்னை காதலிக்கிறேன்


அன்பே உனக்காக
என் கவிதைகளை
தூதனுப்புகிறேன்
காரணம்

உன் இதயத்தில் 
ஓர் இடம் 
வேண்டும் எனக்கு
ஏனென்றால்
எனக்கான உலகம்
அங்குதான் இருக்கிறது


உன்னை விட தொட்டால்
சிணுங்கி பரவாயில்லை
நீ பேசினாலே சிணுங்கிறாயே


அன்று
உன்னை காதலிக்கும் போது
காதலுக்குப் பயப்பிட்டேன்
இன்று
யாரையும் காதலிக்க
பயப்பிடுகிறேன்
உன்னை மாதிரியே
இருந்துவிடுவாளோ
என்று



நீ
எது வாங்கிக் கொடுத்தாலும்
எதையாவது செய்துவிடுவேன்
பதிலுக்கு
"கடன் உறவை பிரிக்கும்"
என்பதால்
இன்று பிரிவை
தந்திருக்கிறாய்
பதிலுக்கு என்ன
செய்வேன்...?



தொலைந்த நாய்குட்டியைத்
தேடி விளம்பரப்படுத்தும்
மனசுள்ள உனக்கு
உன்னால் தொலைந்து போன
என்னை தேடிப்பார்க்கும்
கண்கள்கூடவா இல்லை



தினமும்
நாட்காட்டிகளை
நானும் கிழிக்கிறேன்
உன்னால்
வீணாய் போய்க்கொண்டிருக்கும்
நாட்களை பார்க்கப் பிடிக்காமல்




உனக்கு காக்க 
வைப்பதில்
சுகமென்றால்
எனக்கு காத்திருப்பதில்
அதிக சுகம்


கவிதைக்காய்
காத்திருப்பதில்
கவிதை பிறப்பது
எனக்கு மட்டும்தான்



என்னைக் காக்க 
வைத்து விட்டு
வரும் போது 
கவனம் நீந்த நேரிடலாம்
என் கவிதையின் 
கண்ணீரில்



கன நேரமாய் 
காத்திருந்தாலும்
நீ கேட்டால் 
ஏன்தான் சில நேரமாய் 
என்று பொய் 
சொல்லுகிறேனோ



என் கண்களே
எனக்குப் பிடித்த
ஒளிப்பதிவுக் கருவி

காரணம்
அதற்கு உன்னை
மட்டுமே
பிடிக்கத் தெரியும்



எதுவும் கேக்காமலே
என் மடியில் நீ
உறங்கியபோதுதான்
தெரிந்தது
உன் அன்பின் ஏக்கம்
அதற்காக
உன் குழந்தைதனத்தை
கையிலுமா 
வைத்திருப்பாய்
என்னை பிடித்தவாறே
உறங்குகிறாய்



எவ்வளவு அவசரமாய்
வாசல் கடக்கையிலும்
உன்னை ஞாபகப்படித்தி
விடுகிறது
முதல் முதல் சந்திப்பில்
நான் வரும்வரை நீ
சாய்ந்து நின்ற வீதிச்சுவர்



உன் கோடி முத்தங்களையும்
தோற்கடித்துக் கொண்டிருக்கும்
பெருமையில் இன்றும் இனிக்கிறது
உன் முதல் முத்தம்



காதலைக் கொண்டாட
வருசத்தில் ஒரு நாள்தான்
காதலர்தினம் என்றால்
அந்தத்தினத்தையே
வருசம்பூரா கொண்டாடுவேன்
உன்னோடு நான்



வாய்காரன் நான்
என்பதை தெரிந்தா
என்னில் உனக்கு
அதிகம் பிடித்தது
என் பேச்சு என்றாய்
அன்றில் இருந்து நான்
யாரிடமும் வாய்
காட்டுவதே இல்லை


உன்னை சந்திக்க
கண்மூடித்தனமாய்
கார் ஓடி வந்தாலும்



கவனமாய் உன்னை
தேடிக் கொண்டிருக்கும்
என் மனசு


ஆயிரம்
கவிதை எழுதிக்
கிறுக்கனானேன்
உன் பெயர் எழுதி
கவிஞனானேன்


எத்தனை முறை
வேண்டுமானாலும்
குழந்தையாகலாம்
உன் மடி கிடைக்கும்
என்றால்